நாட்டிலேயே முதன் முறையாக ரூ.1,082 கோடி செலவில் கிருஷ்ணா நதி மீது கேபிள் பாலம்
- நாட்டிலேயே முதன் முறையாக, கிருஷ்ணா நதி மீது ஆந்திரா-தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களை இணைக்கும் விதத்தில், ரூ.1,082.56 கோடி செலவில் கேபிள் (கம்பி) பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
- தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சோமசீலா பகுதியில் தொடங்கும் இந்த கேபிள் மேம்பாலம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், ஆத்மகூரில் நிறைவடையும்.
- பச்சை பசேல் என இருக்கும் வனப்பகுதிகள், கிருஷ்ணா நதியின் அழகு, ஸ்ரீசைலம் அணைக்கட்டு, மலைப்பகுதி என அனைத்தையும் ஒரே சமயத்தில் இந்த பாலத்தின் மூலம் கண்டு ரசிக்கலாம். மேலும், கோபுர வடிவ கேபிள்கள் இரவில் சிறப்பு மின் அலங்காரம் போன்றவையும் செய்யப்படும்.
- இந்த பால கட்டுமானப் பணி முடிவடைந்தால், உலகிலேயே 2-வது கேபிள் பாலமாகவும், நாட்டிலேயே முதல் கேபிள் பாலமாகவும் பெயர் பெறும் என அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார்.
- இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் அதிவேக ஏவுகணை(எஸ்எல்பிஎம்) உருவாக்கப்பட்டது. இதை அணுசக்தி ஏவுகணைகளை ஏவும் திறன்படைத்த ஐஎன்எஸ் அரிஹந்த் என்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து பரிசோதிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட எஸ்எல்பிஎம் ஏவுகணை, சிறப்பாக செயல்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
- மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதத்தில் 10.7%ஆக (தற்காலிகம்) இருந்தது (2021 செப்டம்பர் மாதத்தை விட அதிகம்). இது, 2022 ஆகஸ்ட் மாதத்தில்12.41%ஆக இருந்தது.
- உணவுப் பொருட்கள் மற்றும் உணவு தயாரிப்புகள் உள்ளிட்டவை அடங்கிய உணவு குறியீடு, செப்டம்பர் மாதத்தில் 175.2 ஆக சரிந்தது. இந்த இலக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 176.0 ஆக இருந்தது. உணவு குறியீட்டின் அடிப்படையில் பணவீக்க விகிதம் 9.93% லிருந்து (ஆகஸ்ட், 2022) 8.08%ஆக (செப்டம்பர், 2022) குறைந்தது.
- கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது.
- 7-வது இந்தியா-பிரேசில் – தென்னாப்பிரிக்கா கடற்படை பயிற்சி தென்னாப்பிரிக்காவின் எலிசபெத் துறைமுகத்தில் 2022 அக்டோபர் 10 முதல் 12 வரை நடைபெற்றது.
- இந்த பயிற்சியில் ஏவுகணையை தாங்கி செல்லும் ஐஎன்எஸ் தற்காஷ், சேட்டக் ஹெலிகாப்படர் மற்றும் மார்கோஸ் சிறப்பு படைகள் இந்திய கப்பற்படை சார்பில் பங்கேற்றன.
- கடல்சார் உறவுகளை வலுப்படுத்துதல், கூட்டு ராணுவ பயிற்சியை மேம்படுத்துதல், கடல்சார் குற்றங்களை முறியடித்தல், கடல் வழியான தொடர்புகளை பாதுகாத்தல் உள்ளிட்டவை இந்த பயிற்சியின் நோக்கமாகும்.