கொல்கத்தா - அகர்தலா இடையே விரைவு ரயில் சேவையை தொடங்கினார் குடியரசுத் தலைவர்
- திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொல்கத்தா-அகர்தலா இடையேயான விரைவு ரயில் சேவையை முதல்வர் மாணிக் சகாவுடன் இணைந்து குடியரசுத் தலைவர் முர்மு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- அதேபோன்று, மணிப்பூரின் கோங்சாங் வரை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சேவையையும் முர்மு தொடங்கி வைத்தார். அதன்பிறகு, காணொலி காட்சி மூலம் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
- அசாம் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை, பெட்ரோலியம் இயற்கை எரிவாயு, ரயில்வே உள்ளிட்ட மத்திய அமைச்சகங்களின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு காணொலி மூலம் முர்மு அடிக்கல் நாட்ட உள்ளார்.
- தேயிலை தோட்ட பகுதிகளில் மாதிரி அங்கன்வாடி மையங்கள், 100 மாதிரி மேல்நிலைப் பள்ளிகள், கவுகாத்தி அக்தோரி முனையத்தில் நவீன கார்கோ மையம் உள்ளிட்டவற்றையும் குடியரசுத் தலைவர் இன்று திறந்து வைக்கவுள்ளார்.
- கடந்த பிப். 5-ல் கர்நாடக அரசு, கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்தது. இதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.
- இதற்கிடையே, இந்த தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொரடப்பட்டது. அதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு, "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்" என்று உத்தரவிட்டது.
- இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உட்பட 24 பேர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் தங்கள் தீர்ப்பை வெளியிட்டனர். நீதிபதி ஹேமந்த் குப்தா, "இந்த விவகாரத்தில், மாணவிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்.
- மற்றொரு நீதிபதி சுதான்ஷு துலியா, "ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்கிறேன். ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லாது. ஹிஜாப் அணிவது அவரவர் தேர்வு. எனவே, கர்நாடக அரசு ஹிஜாபை தடை செய்வதாக வெளியிட்ட அரசாணையை ரத்து செய்கிறேன். ஹிஜாப் போன்ற அத்தியாவசியமான மத நடைமுறையில் நீதிமன்றம் தலையிடுவது அவசியமில்லை என்பதால், அந்தத் தீர்ப்பை தள்ளுபடி செய்கிறேன். நான் மாணவிகளின் கல்வியையே முக்கியமாகக் கருதுகிறேன். கிராமங்களில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை உணர்ந்து, இந்த தீர்ப்பை அளிக்கிறேன்'' என்று தீர்ப்பளித்தார்.
- இதையடுத்து இரு நீதிபதிகளும், "எங்கள் இருவரின் தீர்ப்பும் மாறுபட்டு வெளியாகியுள்ளதால், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கிறோம்" என்றனர்.
- இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் கலந்து கொண்டு, வந்தே பாரத் ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
- வந்தே பாரத்தின் 4வது ரயிலான இது, முந்தைய 3 ரயில்களை காட்டிலும் மேம்பட்ட தயாரிப்பாகும். 52 நொடிகளில் மணிக்கு 100 கிமீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
- தொடர்ந்து உனாவில், கடந்த 2017ம் ஆண்டில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லி., தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவுகிறது.
- ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக முகமது அல் காதிமி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் ஈராக் அதிபரை தேர்வு செய்வது தொடர்பாக பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.
- இதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் ரஷீத் ஈராக் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
- உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போருக்குப்பின், உக்ரைனின் சில பகுதிகளான டோனட்ஸ்க், கெர்ஸன், லுஹன்ஸ்க், ஜபோரிஹியா ஆகிய பகுதிகளை இணைத்துக் கொண்டதாக ரஷ்யா அறிவித்தது.
- இந்த இணைப்பு சட்டவிரோதம் என உக்ரைன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்தன. ஆனால், ரஷ்யா தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இதையடுத்து, ஐ.நா.பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக வரைவுத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
- அதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா இணைத்தது சட்டவிரோதமானது எனக் கூறி ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து 'உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு: ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கொள்கைகளைப் பாதுகாத்தல்' தீர்மானம் முன்மொழியப்பட்டது.
- இந்த தீர்மானத்துக்கு ஆதராவாக ஐ.நா. சபையில் 143 நாடுகள் வாக்களித்தன. ஆனால், ரஷ்யா, பெலாரஸ், வடகொரியா, சிரியா, நிகரகுவா ஆகிய நாடுகள் எதிராக வாக்களித்தன.
- இந்தியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன
- கடந்த ஜூலை மாதத்தில் 6.71 சதவீதத்தில் இருந்த சில்லறை பணவீக்கம் இந்த மாதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- காய்கறிகள், மசாலாப் பொருட்கள், காலணிகள் மற்றும் எரிபொருள், விளக்குகள் ஆகியவற்றின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. முட்டை விலை சற்று குறைவாக இருந்துள்ளது.
- நுகர்வோர் விலை குறியீடானது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. எனினும் கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து 6 சதவீதத்திற்கும் மேலாக சில்லறை பணவீக்கம் உள்ளது.
- தொழில்துறை உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் 2.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. உற்பத்தி, மின்சாரம் மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல்பாடுகள் காரணமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
- இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் இரண்டு நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் III-ஐ யும் துவங்கி வைத்தார்.
- இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெய் ராம் தாக்கூர், ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு கிஷன் கபூர், திருமதி இந்து கோஸ்வாமி மற்றும் பிஜேபி மாநிலத் தலைவர் திரு. சுரேஷ் காஷ்யப் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- எரிசக்தித் துறையில் உள்ள கணினி பாதுகாப்பு நடவடிக்கை குழுக்களுடன் (சி.எஸ்.ஐ.ஆர்.டி) இணைந்து இந்திய கணினி அவசர நிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்), “பவர் எக்ஸ்” என்ற இணையவெளி பாதுகாப்புப் பயிற்சியை வடிவமைத்து, நடத்தியது.
- புதுதில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எரிசக்தி உற்பத்தியில் ஈடுபடும் 193 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. “தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு தொழில்நுட்ப அமைப்புமுறைகளில் ஏற்படும் இணையவெளி நிகழ்வுகளை அங்கீகரித்து, பகுப்பாய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
- “தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் கணினி தொடர்பான விஷயங்களால் தூண்டப்பட்ட இடையூறுகளைப் பாதுகாத்தல்” என்பது இதன் கருப்பொருளாகும்.