Type Here to Get Search Results !

தமிழகத்தின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு அடிப்படை ஆய்வு / SERIAL CENSUS OF FAMILY STATUS IN TAMILNADU BASELINE STUDY

 


TAMIL
  • சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், மாநிலத்தின் பொருளியியல் - புள்ளியியல் துறை மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள கணக்கெடுப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து, தமிழகத்தின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு அடிப்படை ஆய்வுக்கு முந்தைய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு தொகுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன் வெளியிட்டார்.
  • மாநில அளவிலான இந்த கணக்கெடுப்பு கடந்த 2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரையிலானதாகும். 
  • இதில், அனைத்து வயது வரம்புகளிலும் உள்ள குடும்ப மற்றும் தனிநபர் அளவில் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு மாவட்ட அளவிலான மதிப்பீடுகள், மாநில அளவிலான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 
  • தமிழகத்தில் 2.12 லட்சம் குடும்பங்களில் உள்ள 7.45 லட்சம் பேரிடம் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளன.
  • இந்த ஆய்வில், தமிழகத்தில் 53சதவீதம் குடும்பங்கள் கிராமப்புறங்களிலும், 47 சதவீதம் குடும்பங்கள் நகர்ப்புறங்களிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், மாநிலத்தில் 19 சதவீத குடும்பங்கள் மட்டுமே பெண்களால் வழிநடத்தப்படுகின்றன. குடும்பத் தலைவர்களில் 74 சதவீதம்பேர் விதவைகள். 
  • 3.56 சதவீதம் பேர் கணவனை பிரிந்து வாழ்பவர்கள். சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக அளவில் பெண்கள் குடும்பத் தலைவர்களாக உள்ளனர்.
கல்வி, வேலைவாய்ப்பு
  • தமிழகத்தில் கல்வி கற்றோர் சதவீதம் கடந்த 2011-ல் 80.1 ஆகஇருந்த நிலையில் 2018-19-ல் 85.4சதவீதமாக உயர்ந்துள்ளது. 
  • பெண்களின் கல்வியறிவு கிராமப்புறங்களில் 65.1-லிருந்து 73.7 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 82.3 -லிருந்து 87.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. 
  • குறிப்பாக கல்வி பெற்ற பெண்கள் சதவீதம் 73.4 சதவீதத்தில் இருந்து 80.2 சதவீதமாக 2011 மற்றும் 2018-19-க்கு இடைப்பட்ட காலத்தில் உயர்ந்துள்ளது.
நில உரிமை
  • தமிழகத்தில் உள்ள குடும்பங்களில் 19.4 சதவீதம் பேர் விவசாய நிலங்களை வைத்துள்ளனர். முன்னதாக 2015-16-ல் 18.6 சதவீதம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
  • அதேபோல், 91 சதவீதம் பேர்ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுச் சொத்துகளை வைத்துள்ளனர். 89 சதவீதம் பேர் கைபேசி வைத்துள்ளனர். 
  • கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களில் 31 சதவீதம் பேர் கைபேசிகள், இருசக்கர வாகனங்களை வைத்துள்ளனர். 28 சதவீத நகர்ப்புற குடும்பங்கள் குளிர்சாதனப்பெட்டி, இருசக்கர வாகனம், கைபேசி ஆகிய மூன் றையும் வைத்துள்ளனர்.
  • கிராமப்புறங்களில் 90.6 சதவீதம் குடும்பங்களும், நகர்ப்புறங்களில் 57.8 சதவீதம் குடும்பங்களும் சொந்த வீடுகளில் வசிக்கின்றன. வாடகை வீடுகள் நகர்ப்புறத்தில் 40.8 சதவீதம் உள்ளது. 
  • கிராமப்புற குடும்பங்களில் 61 சதவீதமும், நகர்ப்புற குடும்பங்களில் 86 சதவீதமும் வீடுகளுக்குள் கழிப்பறை வசதிகளை பெற்றுள்ளன.
முடிவுகள்
  • கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில வளர்ச்சிக்குறியீடுகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதேநேரம், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட மக்கள் தொகை 16 சதவீதத்தில், 3 சதவீதம் இளைஞர்கள் எந்த வேலையையும் நாடவில்லை என்பது தெரிகிறது. 
  • உயர்கல்வி, தொழிற்கல்வியை ஊக்குவிப்பது ஆகியவற்றில் சாதனை படைக்கும் நிலையில் இந்த பிரிவினர் மீது அக்கறை தேவை.
  • வேலைவாய்ப்பில் பெண்களின்எண்ணிக்கையை மேம்படுத்த வேண்டும். அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் விவசாய மதிப்புக்கூட்டல் துறையை சரியாக உபயோகிக்க வேண்டும். 
  • சமூக வளர்ச்சியில் வீட்டு வசதி முக்கியப் பங்கு வகிப்பதால், வீடுகள் கட்டி முடிக்கவும், பழுதுபார்க்கவும், தனிப்பட்ட வீட்டு கழிவறைகளை உபயோகிக்கவும், பாதுகாப்பான குடிநீர் போன்றவற்றுக்கு கொள்கை வகுப்பாளர்களால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ENGLISH
  • The Development Research Institute, Chennai, in collaboration with the State Department of Econometrics and Statistics and the Census Research Center at the University of Michigan, USA, conducted a pre-baseline study on the Series of Survey of Household Conditions in Tamil Nadu. The study package was released by Minister Palanivel Thiagarajan two days ago.
  • This state-level survey was last conducted from March 2018 to March 2019. In this, district-level estimates and state-level estimates have been prepared using data collected at family and individual level across all age groups.
  • Data was obtained from 7.45 lakh people in 2.12 lakh households in Tamil Nadu.
  • In this study, 53 percent of families in Tamil Nadu are in rural areas and 47 percent of families are in urban areas.
  • Also, only 19 percent of households in the state are headed by women. 74 percent of household heads are widows.
  • 3.56 percent are separated from their husbands. Chennai, Kanchipuram and Tirunelveli districts have a large number of female heads of households.
Education, Employment
  • The percentage of educated people in Tamil Nadu increased from 80.1 percent in 2011 to 85.4 percent in 2018-19.
  • Female literacy increased from 65.1 to 73.7 percent in rural areas and from 82.3 to 87.4 percent in urban areas.
  • In particular, the percentage of educated women rose from 73.4 per cent to 80.2 per cent between 2011 and 2018-19.
Land ownership
  • 19.4 percent of households in Tamil Nadu own agricultural land. It is noteworthy that earlier it held 18.6 percent in 2015-16.
  • Likewise, 91 percent own one or more home properties. 89 percent have mobile phones.
  • 31 percent of households in rural areas own mobile phones and two-wheelers. 28 per cent of urban households own all three: refrigerator, two-wheeler and mobile phone.
  • 90.6 percent of households in rural areas and 57.8 percent of households in urban areas live in their own houses. Rented housing is 40.8 percent in urban areas.
  • 61 percent of rural households and 86 percent of urban households have indoor toilet facilities.
Results
  • Tamil Nadu has performed well in some development indicators including education and employment. At the same time, out of 16 percent of the population between 15 and 24 years of age, 3 percent of the youth are not seeking any job.
  • In view of the achievements in higher education and promotion of vocational education, this section needs to be taken care of.
  • Increase the number of women in employment. Agricultural value addition sector should be properly utilized to generate more employment.
  • Since housing plays an important role in social development, measures should be taken by the policy makers to build and repair houses, access to individual household toilets, safe drinking water etc.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel