TAMIL
- மருத்துவம், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு, உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.
- ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் விருதுகள் அறிவிக்கப்படும். டிசம்பர் மாதம் நடக்கும் நிகழ்வில் விருதுகள் அளிக்கப்படுகின்றன.
- பதக்கம் மற்றும் சான்றிதழுடன், 7.20 கோடி ரூபாய் ரொக்கமும் அளிக்கப்படுகின்றன. கடந்த 3ம் தேதி முதல் விருது பெற்றோர் பெயர்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
- மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட துறைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
- அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும், அந்நாட்டின், 'பெடரல் ரிசர்வ்' வங்கியின் முன்னாள் தலைவருமான பென் எஸ்.பெர்னான்கே மற்றும் அந்நாட்டை சேர்ந்த மேலும் இரு பொருளாதார நிபுணர்களான டக்ளஸ் டபிள்யு.டைமண்ட், பிலிப் ஹெச்.டைப்விக் ஆகியோருக்கு பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
- வங்கிகள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இவர்கள் செய்த ஆய்விற்காக இந்த விருது அளிக்கப்படுகிறது. வங்கி சரிவை தவிர்ப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இவர்கள் செய்துள்ள ஆய்வில் சிறப்பாக வெளிப்பட்டு இருப்பதாக நோபல் விருது கமிட்டி தெரிவித்துள்ளது.
- The world's highest award, the Nobel Prize, is awarded annually to those who have made outstanding contributions in various fields including medicine, literature, and peace.
- The awards will be announced in Stockholm, Sweden. Awards are presented at an event in December.
- Along with a medal and certificate, a cash prize of Rs 7.20 crore is awarded. The names of the award parents are being announced gradually from last 3rd.
- Awards were announced for the fields of medicine, physics, chemistry, literature and peace. In this context, the Nobel Prize for Economics was announced.
- Ben S. Bernanke, an American economist and former chairman of the Federal Reserve Bank, and two other American economists, Douglas W. Diamond and Philip H. Dypwick, have been awarded the prize.
- The award is given for their research on banks and the economic crisis. The Nobel Prize Committee said that the importance of avoiding bank collapse is well revealed in their research.