Type Here to Get Search Results !

பல பரிமாண வறுமை அறிக்கை 2022 / MULTI DIMENSIONAL POVERTY REPORT 2022

 

TAMIL
  • ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் Oxford Poverty and Human Development Initiative (OPHI) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பல பரிமாண வறுமை அறிக்கைபடி, நாட்டில் 2005-06 இல் 55.1% ஆக இருந்த வறுமையின் அளவு 2019-21 இல் 16.4% ஆகக் குறைந்துள்ளது மற்றும் 10 MPI குறிகாட்டிகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டது. இதன் விளைவாக MPI மதிப்பு மற்றும் வறுமையின் நிகழ்வு பாதியாக குறைந்துள்ளது.
  • உலகளவில், 111 வளரும் நாடுகளில் உள்ள மொத்த 610 கோடி மக்களில், 19.1% அல்லது 120 கோடி பேர் வறுமையில் வாழ்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர்.
  • இந்தியாவில் 22.8 கோடி பேர் இன்னும் ஏழைகளாக உள்ளனர், அவர்களில் 9.7 கோடி பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 2019 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பட்டினி குறியீட்டில் 117 நாடுகளில் இந்தியா 102 வது இடத்தில் இருந்தது கடந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில், ஐந்து இடங்கள் சரிந்து 121 நாடுகளில் 107 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 
  • சமீபத்தில் பசி குறியீட்டு முறை கணக்கிடப்பட்டதை இந்தியா கடுமையாக விமர்சித்தது. இதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
  • அதன்படி 2019 இன் அறிக்கையிலிருந்து, 14.4 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது. 
  • ஆனால் 14.4 கோடி மக்கள் ஒரே நேரத்தில் வறுமையில் இருந்து மீட்கப்பட்டால், பசி குறியீட்டில் இந்தியா எப்படி ஐந்து படிகள் வீழ்ச்சியடையும் என்ற குழப்பம் நிலவுகிறது.
  • அறிக்கைகளின் ஆய்வு முரண்பாடுகளுக்கு காரணம், UNDP இன் MPI அறிக்கை, இந்தியாவில் வறுமையின் மீதான கோவிட் தொற்றுநோயின் விளைவுகளைக் கருத்தில் கொள்ளவில்லை. ஏனெனில் MPI இல் பயன்படுத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21) இலிருந்து 71% தரவு தொற்றுநோய்க்கு முன்பே சேகரிக்கப்பட்டது.
  • இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட உலக வங்கியின் வறுமை மற்றும் பகிரப்பட்ட செழுமை அறிக்கை, 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான வறுமையில் வாடிய ஏழு கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • 2011-12 ஆம் ஆண்டிலிருந்து வறுமை குறித்த தரவுகளை அரசாங்கம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
  • According to the Multidimensional Poverty Report prepared by the United Nations Development Program (UNDP) and the Oxford Poverty and Human Development Initiative (OPHI), the country's poverty rate has declined from 55.1% in 2005-06 to 16.4% in 2019-21 and significant growth has been observed in all 10 MPI indicators. As a result, the MPI value and the incidence of poverty have halved.
  • Globally, out of a total of 6.1 billion people in 111 developing countries, 19.1% or 1.2 billion live in poverty. Almost half of them live in extreme poverty. It is noteworthy that 22.8 crore people in India are still poor, and 9.7 crore of them are children.
  • India, which was ranked 102 out of 117 countries in the 2019 Global Hunger Index in the latest report released last week, has slipped five places to 107 out of 121 countries. India has criticized the recent calculation of the hunger index. 
  • Following this, the United Nations Development Program (UNDP) has released a message. Accordingly, the 2019 report revealed that 14.4 crore Indians have been lifted out of poverty.
  • But if 14.4 crore people are lifted out of poverty at once, there is confusion as to how India can drop five notches on the hunger index.
  • The reason for the report's research discrepancies is that the UNDP's MPI report does not consider the effects of the Covid pandemic on poverty in India. Because 71% of the data from the National Family Health Survey-5 (2019-21) used in the MPI was collected before the pandemic.
  • The World Bank's Poverty and Shared Prosperity report, released earlier this month, estimated that of the seven crore people living in extreme poverty worldwide in 2020, Indians accounted for 5.6 crore. It is noteworthy that the government has not published data on poverty since 2011-12.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel