Type Here to Get Search Results !

உலகளாவிய ஆற்றல் பகுப்பாய்வு ஆய்வறிக்கை 2022 / GLOBAL ENERGY ANALYSIS REPORT 2022

TAMIL

  • கார்பன் வாயு வெளியீடு காலநிலை மாற்றத்தின் அடிப்படை காரணமாக இருந்து வருகிறது. இதன்காரணமாக முன்பு இருந்ததைக் காட்டிலும் பருவநிலை சிக்கல்கள் தீவிரமடைந்துள்ளன. 
  • காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த புதைபடிம எரிபொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து புதிய ஆற்றல் மூலங்களுக்கு உலக நாடுகள் மாற வேண்டும் என சர்வதேச சூழலியல் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 
  • இந்நிலையில் 2025ஆம் ஆண்டில் உலகளாவிய கார்பன் வெளியீடு உச்சநிலையை அடையும் என சமீபத்தில் வெளியான ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச ஆற்றல் நிறுவனம் உலகளாவிய ஆற்றல் பகுப்பாய்வு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் அடுத்த சில ஆண்டுகளில் நிலக்கரி பயன்பாட்டிற்கு அதீத தேவை ஏற்படும் எனவும், இதனால் 2025ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு இதுவரை இல்லாத அளவு உச்சநிலையை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அதிகப்படியான ஆற்றல் தேவைகள் காரணமாக நுகர்வோர்களின் செல்வமானது ஆற்றல் உற்பத்தியாளர்களிடம் சென்று சேர இது வழிவகை செய்யும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புதிய ஆற்றல் மூலங்களை பெறுவதில் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ள உள்ளதாகவும், 7.5 கோடி மக்கள் தங்களுக்கு தேவையான மின்வசதி உள்ளிட்ட ஆற்றல் தேவைகளைப் பெறுவதில் பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்க உள்ளதாகவும், 10 கோடி மக்கள் விறகடுப்புகள் மூலம் சமையல் செய்வதற்கான நிர்பந்தத்திற்கு தள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ENGLISH
  • Carbon dioxide emissions have been the primary cause of climate change. Due to this climate problems have become more serious than before. International environmental organizations continue to urge countries around the world to switch from using fossil fuels to new energy sources to control climate change.
  • However, a recent study has warned that global carbon emissions will peak in 2025. The International Energy Agency recently published a Global Energy Analysis report. In the next few years, there will be a huge demand for coal use, and thus carbon emissions will reach an all-time high by 2025.
  • The statement also said that this would allow the wealth of consumers to flow to energy producers due to excess energy demand. 
  • It has been mentioned that people are facing economic crises in getting new energy sources, 7.5 crore people have an important role in getting their energy needs including electricity, and 10 crore people are likely to be forced to cook with firewood.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel