இலவச உணவு தானியம் வழங்கும் PMGKAY திட்டம் டிசம்பர் வரை நீட்டிப்பு
- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் பண்டிகைக்காலம், குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தல் ஆகிவற்றை கருத்தில்கொண்டு இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் கரீப் கல்யான் அன்ன யோஜனாவில், ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும். இதன்படி 12.20 மில்லியன் டன் உணவு தானியம் மக்களுக்கு வழங்கப்படும்.
- செப்டம்பர் 1ம் தேதி நிலவரப்படி அரசின் கையிருப்பில் 60.10மெட்ரிக் டன் உணவு தானியம் இருக்கிறது, இதில் 10.82மெட்ரிக் டன் நெல் உள்ளது. தற்போது நெல்கொள்முதல் சீசன் வரும் அக்டோபர் முதல் தொடங்க உள்ளது, இந்த சீசனில் அரசு 51.80 மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
- கரீப் கல்யான் திட்டம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசுக்கு, தன்னிடம் இருக்கும் உணவு தானியத்தின் அளவு எவ்வளவு என்பதை கணக்கீடு செய்ய ஏதாவாக இருக்கும். அதன்பின்புதான் மற்ற திட்டங்களை நீட்டிப்பு செய்வது குறித்து திட்டமிடலாம்.
- நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் உணவு மானியத்துக்காக மத்திய அரசு ரூ.2.07 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது கரீப் கல்யான் திட்டத்தை ஏப்ரல் வரை நீட்டித்ததால் கூடுதலாக ரூ.85,838 கோடியும், தற்போது டிசம்பர் வரை நீட்டித்துள்ளதால் கூடுதலாக ரூ.44,762 கோடியும் செலவாகும். ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டில் மட்டும் உணவு மானியத்துக்காக ரூ.3.38 லட்சம் கோடி செலவாகும்.
- இந்திய ராணுவத்தின் முப்படைகளும் இணைந்து செயல்படுவதற்காக, முப்படை தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது. நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பதவி ஏற்றார்.
- இந்நிலையில், தமிகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி பிபின் ராவத் உயிரிழந்தார்.
- அதன் பின்னர் இந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இப்பொறுப்பை, முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே கவனித்து வந்தார்.
- இந்நிலையில், புதிய முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர், ராணுவ விவகாரத் துறையின் செயலராகவும் செயல்படுவார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகளுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன.
- குறிப்பாக, விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- அதன்படி, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியர்களுக்கு 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
- இந்த நிலுவைத் தொகை (அரியர்ஸ்), அடுத்த சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். ஓராண்டு காலத்தில் இது 3-வது அகவிலைப்படி உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில், மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய, சார்-பதிவாளர்களுக்கு இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை.
- ஆவணப் பதிவுகளை ரத்து செய்ய, பாதிக்கப்பட்டோர், நீதிமன்றங்களை அணுக வேண்டி இருந்தது.
- இதைத் தவிர்க்க, போலியான ஆவணங்கள், ஆள் மாறாட்டம் போன்றவை அடிப்படையில், பதிவான ஆவணங்களை, பதிவுத்துறையே ரத்து செய்ய அதிகாரம் அளித்து, பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
- இச்சட்டத்தின் கீழ், மோசடி ஆவண பதிவுகள் ரத்து செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து பேருக்கு, அதற்கான ஆணைகளை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
- குஷியாரா ஆற்றின் பொது எல்லையிலிருந்து வினாடிக்கு 153 கனஅடி வீதம் தண்ணீரை பகிர்ந்துகொள்வது என்ற ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த ஒப்பந்தம், மத்திய நீர்வள அமைச்சகம் பங்களாதேஷ் நீர்வள அமைச்சகம் இடையே செப்டம்பர்-6, 2022 அன்று கையெழுத்தானது.
- வறட்சி காலத்தில் (நவம்பர் 1 முதல் மே 31 வரை) குஷியாரா ஆற்றின் பொது எல்லையிலிருந்து அசாம் மாநில அரசு, வினாடிக்கு 153 கன அடி தண்ணீரை பெற இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.
- வறட்சி காலத்தின் போது, இரு தரப்பிலும் தண்ணீரை பகிர்ந்துகொள்வதை குறித்து கண்காணிக்க இரு நாடுகளின் சார்பிலும் கூட்டு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட உள்ளது.
- தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ருபெல்லா (எம்எம்ஆர்), குழந்தை இறப்பு விகிதம் (ஐஎம்ஆர்), 5வயதுக்கு உட்பட்ட குழந்தை பிறப்பு விகிதம் (யூ5எம்ஆர்), மொத்த கருத்தரிப்பு விகிதம் (டிஎஃப்ஆர்) ஆகியவற்றில் அதிகரித்து வரும் வீழ்ச்சி உட்பட 2020-21- நிதியாண்டில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சரவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- காசநோய், மலேரியா, டெங்கு, தொழுநோய், மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு நோய்கள் குறித்த திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இவற்றுக்கு ஏற்பட்டுள்ள செலவுத்தொகை: ரூ.27,989.00 கோடி (மத்திய அரசின் பங்கு)
- 2025-க்கான இலக்குகள் - 113-ல் இருந்து 90 ஆக எம்எம்ஆர் குறைப்பு, 32-ல் இருந்து 23 ஆக ஐஎம்ஆர் குறைப்பு, 36-ல் இருந்து 23 ஆக யூ5எம்ஆர் குறைப்பு, 2.1 என்ற அளவிற்கு டிஎஃப்ஆர் நீடிக்க செய்வது, காசநோயை 2025-க்குள் நாட்டில் இருந்து முற்றிலுமாக ஒழித்தல்
- புதுதில்லி, அகமதாபாத் ரயில்நிலையங்கள் மற்றும் மும்பை ரயில் நிலையத்தின் சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தை சுமார் ரூ. 10,000 கோடி மதிப்பில் மறுசீரமைக்க வேண்டும் என்ற இந்திய ரயில்வே பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- அமைச்சரவையின் இன்றைய முடிவு ரயில் நிலையங்களின் மறு சீரமைப்புக்கு புதிய வழியை ஏற்படுத்தியுள்ளது. 199 நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இவற்றில் 47 நிலையங்களில் ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. 32 நிலையங்களில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
- 2022 செப்டம்பர் 26 அன்று மான்ட்ரீலில் நடைபெற்ற சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் 42-வது அமர்வுக்கு இடையேயான நிகழ்வில் சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மற்றும் அமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்த நிகழ்வுக்கு இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா, பிரான்ஸ் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் திரு மான்சியூர் கிளமண்ட் பியூனே, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் திரு சல்வடோர் சியாச்சிடானோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- இந்த ஒப்பந்தத்தில் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைமைச் செயலாளர் திரு ஜூவான் கார்லோஸ் சலாசரும் சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் தலைமை நிர்வாகி திரு ஜோஷுவா விக்லிஃப்பும் கையெழுத்திட்டனர்.
- 2022 மே மாதத்தில் மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா மேற்கொண்ட பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் குறித்த கருத்தை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவருடனான சந்திப்பின் போது தெரிவித்தார். இந்த கருத்து ஏற்கப்பட்டு இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் 121 நாடுகளும், பல ஐநா அமைப்புகள் உட்பட 32 பங்குதாரர் அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. படிம எரிபொருளை சார்ந்திருப்பதை குறைப்பதற்கு சூரிய சக்தியை திறமையான முறையில் பயன்படுத்துவது இந்த கூட்டணியின் நோக்கமாகும்.
- புதுபிக்கவல்ல எரிசக்தி பயன்பாட்டுக்கு குறைந்த செலவில் எளிதில் மாற்றத்தக்கதாக உள்ள சாதனங்களை உறுப்பு நாடுகளுக்கு வழங்க இந்த கூட்டணி பாடுபட்டு வருகிறது.
- 2022 செப்டம்பர் 24 முதல் 27 வரை செஷல்சில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கடற்படைகள் நடத்திய கடல்சார் படைகளின் வருடாந்தர பயிற்சியில் ஐஎன்எஸ் சுனைனா பங்கேற்றது.
- அமெரிக்க மத்திய கடற்படையின் வைஸ் அட்மிரல் பிராட் கூப்பர், இந்திய கடற்படையை பயிற்சிக்கு வரவேற்றார். ஒருங்கிணைந்த கடற்படைகளின் பயிற்சியில் இந்திய கடற்படை கப்பல் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
- அனைத்து நாடுகளின் கடற்படையினரும் பங்கேற்ற இந்த பயிற்சியின் ஒருபகுதியாக, கடல்சார் கள விழிப்புணர்வு குறித்த பயிற்சியும் இந்திய கடற்படையால் நடத்தப்பட்டது.
- இந்திய கடற்படை குழுவின் ஆதரவுடன், செஷல்ஸ் கப்பல் படையினர் தலைமையில், எச்எம்எஸ் மாண்ட்ரோஸ் கப்பலில், படகு மூலம் தேடுதல் மற்றும் பறிமுதல் செய்தல் குறித்த செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.
- புது தில்லியில் செப்டம்ர் 27, 2022 அன்று நடைபெற்ற தேசிய சுற்றுலா விருது 2022 நிகழ்ச்சியின் போது, 2018-19ம் ஆண்டின் சிறந்த தனி மாநாட்டு மையத்திற்கான தேசிய சுற்றுலா விருதை இந்திய கண்காட்சி மையம் மற்றும் நிறுவனம் பெற்றது
- குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கரிடமிருந்து இவ்விருதை இந்திய கண்காட்சி நிறுவனத்தின் தலைவர் திரு ராஜேஷ் குமார், தலைமை செயல் அதிகாரி திரு சுதீப் சர்க்கார் ஆகியோர் பெற்றனர்.