Type Here to Get Search Results !

TNPSC 27th SEPTEMBER 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை - மத்திய அரசு அதிரடி

  • பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு 2006ல் கேரளாவில் துவக்கப்பட்டது. இது புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. 
  • இந்த அமைப்பு பிரிவினைவாத கருத்துக்களை பரப்பி நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் உறுப்பினர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதோடு பயிற்சி முகாம்களை நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
  • இது தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு 19 வழக்குகளை விசாரித்து வருகிறது.இந்நிலையில் என்.ஐ.ஏ. - அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய விசாரணை அமைப்புகள் தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் கடந்த 22ம் தேதி சோதனை நடத்தியது. 
  • பி.எப்.ஐ. அமைப்பின் தலைவர்கள், துணை தலைவர்கள், நிர்வாகிகள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
  • அன்றைய தினம் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுதும் ஏழு மாநிலங்களில் போலீசார் நேற்று மீண்டும் நடத்திய சோதனையில், பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கைது செய்தனர்.
  • இந்நிலையில், பி.எப்.ஐ., அமைப்பை சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்துள்ளது. பி.எப்.ஐ., அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஊபா சட்டத்தின் கீழ் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் அரசு சின்னம் வெளியீடு
  • இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்குப் பின்பு அவரின் மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றுக் கொண்டார். 
  • அதனையடுத்து இரண்டாம் ராணி எலிசபெத்தின் அரச சின்னம் அதிகாரப்பூர்வமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் வடிவத்தைத் திங்கட்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
  • இனி அனைத்து அரச கட்டிடங்கள், அரசு ஆவணங்கள் மற்றும் அஞ்சல் பெட்டிகளில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் புதிய சின்னமே உபயோகிக்கப்படவுள்ளது.
  • தங்க நிறத்தில் CIIIR என்று இந்த சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அர்த்தம் Charles III Rex. Rex என்றால் லத்தின் மொழியில் மன்னர் என்று அர்த்தம். C என்ற எழுத்து R என்ற எழுத்துடன் இணைந்து R நடுவில் மூன்று கோடுகள் வரும் படி இந்த சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் அதின் மேல் மன்னரின் கீரிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்காட்டிஷ் பதிவாக ஸ்காட்டிஷ் நாட்டுக் கீரிடம் வைக்கப்பட்டு மற்றொரு சின்னத்தையும் உருவாக்கியுள்ளனர்.
  • மறைந்த இரண்டாம் எலிசபெத்திற்கு EIIR அதாவது Elizabeth II Regina என்று சின்னம் இருந்தது. Regina என்பதற்கு லத்தினில் ராணி என்று அர்த்தம். இந்த புதிய சின்னத்தை ஆயுதக் கல்லூரி என்ற அமைப்பு (The College of Arms)வடிவமைத்துள்ளது. 
  • 1484ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த கல்லூரின் வேலை அரசு சின்னங்களை வடிவமைப்பது மற்றும் அவற்றின் விவரங்களைச் சேகரித்துப் பராமரிப்பது.
பெங்களூருவில் ராக்கெட் இன்ஜின் உற்பத்தி மையத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ), எச்.ஏ.எல். நிறுவனத்தில் கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் உற்பத்தி மையத்தை அமைத்து கொடுப்பது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடந்த 2013-ம் ஆண்டு செய்திருந்தது. 
  • இதையடுத்து பெங்களூரு எச்.ஏ.எல் நிறுவனத்தில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.208 கோடி செலவில் ராக்கெட் இன்ஜின் உற்பத்தி மையம் அமைக்கப்பட் டுள்ளது.
  • இந்த மையத்தின் தொடக்க விழா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோருடன் பங்கேற்ற குடியரசுத் தலைவர் இந்த மையத்தை திறந்து வைத்தார். 
tnpsc-27th-september-2022-current-affairs-english'தாதா சாகேப் பால்கே' விருது பெறுகிறார் பாலிவுட் நடிகை ஆஷா பரேக்
  • திரைத்துறையில் மிகவும் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது, அத்துறையில் வாழ்நாள் சாதனை படைத்த ஒரு கலைஞருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வின்போது இந்த விருது அளிக்கப்படுகிறது.
  • கடந்த 2019ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், 2020ம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டது. 
  • பழம்பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்தார்.
பால்வழி அண்டத்தை விட பெரிய கேலக்ஸியை கச்சிதமாக படம்பிடித்த ஜேம்ஸ் வெப்
  • ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்மீன் மண்டலத்தின் மிக விரிவான படங்களை கச்சிதமாக மீண்டும் ஒருமுறை படம்பிடித்துள்ளது. இம்முறை நமது பால்வழி அண்டத்தை விட மிகப்பெரிய கேலக்ஸி ஒன்றை படம் பிடித்துள்ளது. 
  • பூமியிலிருந்து 29 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும், சுமார் 66 ஆயிரம் ஒளி ஆண்டுகள் விட்டம் கொண்ட IC 5332 என்று குறிப்பிடப்படும் அந்த கேலக்ஸியில் இருக்கும் சுழல் விண்மீனை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகத் துல்லியமாக படம்பிடித்து அசத்தியிருக்கிறது ஜேம்ஸ் வெப்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 'தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022' என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்
  • உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் 'தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022 (Discover Tamil Nadu-2022)' என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களிலுள்ள சுற்றுலா தலங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரசித்திபெற்ற 10 சமூக ஊடகவியலாளர்களுக்கு சுற்றுலா விளம்பர பொருட்கள் மற்றும் சுற்றுலா கையேடுகளை வழங்கி, சமூக ஊடகவியலாளர்கள் செல்லக்கூடிய சுற்றுலா வாகனத்தை (Influencers on Wheels) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
எகிப்தின் கல்லறையில் 2600 ஆண்டுகள் பழமையான 'Cheese'
  • எகிப்தில் காணப்படும் பழைய பாலாடைக்கட்டி ஒரு மண் பானையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பானையின் மீது பண்டைய மொழியில் எழுதப்பட்டுள்ளன. 
  • இந்த பாலாடைக்கட்டி, ஆடு மற்றும் செம்மறி ஆட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எகிப்தில் பாலாடைக்கட்டி ஹலோமி என்று அழைக்கப்படுகிறது. 
  • ஆடு மற்றும் செம்மறி பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீர் சுவையில் லேசான உப்புத்தன்மை கொண்டது. இந்த பாலாடைக்கட்டி எகிப்தின் 26 அல்லது 27 வது பேரரசின் காலத்தைச் சேர்ந்தது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
  • முன்னதாக, பாதம்ஸ் கல்லறையில் 3200 ஆண்டுகள் பழமையான பாலாடைக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இது இதுவரை தயாரிக்கப்பட்ட பழமையான பாலாடைக்கட்டி என்று கருதப்படுகிறது.
  • இந்த பாலாடைக்கட்டி எகிப்தில் உள்ள சக்காரா கல்லறையில் உள்ளது. சக்காராவில் நீண்ட நாட்களாக அகழாய்வு பணி நடந்து வருகிறது. 
  • பாலாடைக்கட்டிக்கு முன்பே இந்த கல்லறையில் மேலும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சக்கரா மயானத்தில் 4500 ஆண்டுகள் பழமையான சூரியன் கோயிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • கடவுள் மற்றும் தெய்வங்களின் சிலைகள், பழைய கல்லறைகள் மற்றும் சவப்பெட்டிகளும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான சக்காரா, எகிப்து பிரமிடுகளில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ளது.
அபேவின் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி
  • ஷின்ஸோ அபே கடந்த ஜூலை 8-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தின்போது படுகொலை செய்யப்பட்டாா். அவரது இறுதிச் சடங்கு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் அரசு மரியாதையுடன் இன்று நடைபெற்று வருகிறது. 
  • ஷின்ஸோ அபேவின் இறுதிச் சடங்கில் பிரதமா் மோடி உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்களும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். 
  • இறுதி சடங்கைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவையும் பிரதமா் மோடி சந்தித்துப் பேசவுள்ளாா். இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்தச் சந்திப்பு அமையும் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 
  • ஷின்ஸோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜுலை 9ஆம் தேதி இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel