ஒலிம்பிக் கமிட்டி சட்ட திருத்தம் நீதிபதி நாகேஸ்வர ராவை நியமித்தது உச்ச நீதிமன்றம்
- இந்தியாவில் செயல்படும் ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகத்தை கலைக்கும்படியும், வரும் டிசம்பருக்குள் அதற்கு தேர்தல் நடத்தும்படியும் கடந்த 8ம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கேட்டு கொண்டது. இல்லையென்றால், இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு தடை விதிக்கப்படும் என எச்சரித்தது.
- இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி டிஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்தவும், அதன் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- மேலும், வரும் 27ம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் நடக்க இருக்கும் கூட்டத்தில் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் பொது செயலாளர் ராஜிவ் மேத்தா, துணை தலைவர் அடீல் சுமரிவலா ஆகியோர் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது.
- ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை கூடுதல் செயலரின் உத்தரவுப்படி நீதிபதி நாகேஸ்வர ராவுக்காக செலவிடப்படும் தொகையை இந்திய ஒலிம்பிக் கமிட்டி திரும்ப செலுத்தும்படி கூறப்பட்டுள்ளது.
- சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இவர் கடந்த 21ம் தேதி ஓய்வு பெற்றார்.
- இதையடுத்து, நீதிபதி துரைசாமியை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வு - செப்பு நாணயம், சங்கு வளையல் கண்டுபிடிப்பு
- வெம்பக்கோட்டையில் முதல்கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் 16-ம் தேதி தமிழகத் தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
- வெம்பக்கோட்டையில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட 15 குழிகளில், நுண்கற்காலம் முதல் இடைக்கற்காலம் வரை இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன.
- இந்நிலையில் இன்று நடைபெற்ற அகழாய்வில், சுடுமண்ணாலான சங்கக்கால முத்திரை, முழு சங்கு வளையல், இருபுறமும் உருவம் பதித்த செப்பு நாணயம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- இது ஆய்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆய்வின் முடிவின், கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் யாவும் ஆவணப்படுத்தப்பட்டு காலப்பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளன.
- சிவகங்கை மாவட்டம், கீழடி, அகரம், கொந்தகையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரியில் துவங்கியது. இம்மாத இறுதியில் இந்த அகழாய்வு நிறைவு பெற உள்ளது.
- கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் 20 குழிகள் தோண்டப்பட்டு உறைகிணறு, பானைகள், பானை ஒடுகள், தாயக்கட்டைகள், சுடுமண் பொம்மைகள், தந்தத்தில் செய்யப்பட்ட பாசி மணி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- தற்போது ஒரு குழியில் 2.5 செ.மீ உயரமும், 2.1 செ.மீ சுற்றளவும் கொண்ட கருப்பு நிற தந்தத்தினாலான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. 5ம் கட்டம் மற்றும் 4ம் கட்ட அகழாய்விலும் மேற்கண்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
- 11.8 செ.மீ நீளமுள்ள இரும்பு ஆயுதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆயுதத்தின் ஒரு பகுதி கூர்மையாக உள்ளது. 3.7 செ.மீ அகலமும், 1.7 செ.மீ தடிமனும் கொண்டதாக இந்த ஆயுதம் உள்ளது.
- சதுர வடிவிலான துளையுடன் செம்பு தொங்கட்டான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3 செ.மீ நீளமும், 2.7 செ.மீ உயரமும், 0.9 செ.மீ தடிமனும் கொண்டதாக இது உள்ளது. மேலும் 10 செ.மீ நீளம் கொண்ட ஒப்பனை கருவியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- கண்களுக்கு மை தீட்டும் குச்சி போன்ற இதன் இருபுறமும் உருண்டை வடிவில் உள்ளது. ஏற்கனவே கீழடியில் காதணி உள்ளிட்ட பெண்கள் அழகு சாதன பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த ஒப்பனை கருவி அதற்கு சான்றாக அமைந்துள்ளது.
- பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்புக்கு மேலும் வலுவூட்டும் வகையில், ரூபாய் 1700 கோடி மதிப்பில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் உள்ள இலக்கை தாக்கவல்ல இரட்டை செயல்பாட்டு திறனுடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை கொள்முதல் செய்ய பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்துடன் (பிஎபிஎல்) பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இரட்டை செயல்பாட்டு திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும்.
- பிரம்மோ ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனம் என்பது இந்தியா-ரஷ்யா கூட்டு நிறுவனமாகும். நிலத்தில் செயல்படக் கூடியதாகவும், கப்பல் மீதான தாக்குதலை முறியடிக்கும் வகையிலும், இந்த புதிய வகை ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க எரிசக்தி அமைச்சர் ஜெனிஃபர் கிரான்ஹோம் மற்றும் தூய்மை எரிசக்தி செயல் அமைப்பின் முக்கியமான அமைச்சர்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சந்தித்தது “உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் அமைப்பு 2022”-ன் முக்கியத்துவம் வாய்ந்த முதல் நாள் நிகழ்வாக அமைந்தது.
- முன்னதாக அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க், ஹீன்ஸ் வரலாற்று மையத்தில் செயல் அமைப்பு 2022 தொடங்கியது.
- இந்த மாநாட்டில் பங்கேற்கும் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்களைச் சேர்ந்த இந்திய தூதுக்குழுவினருக்கு தலைமை தாங்கி டாக்டர் ஜிதேந்திர சிங் அமெரிக்கா சென்றுள்ளார்.
- 30 நாடுகளைச் சேர்ந்த எரிசக்தித்துறை அமைச்சர்கள் பீட்டர்ஸ்பர்கில் உள்ள டேவிட் எல் லாரன்ஸ் மையத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டிலும் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்து கொள்கிறார்.