Type Here to Get Search Results !

சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் / INTERNATIONAL OZONE PROTECTION DAY

TAMIL

  • சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் வீரியத்தை தடுத்து கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 
  • ஓசோன் (Ozone) என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் காணப்படுகின்றது.
  • 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி கனடா நாட்டின் தலைநகரில் ஓசோன் படையை அழிக்கும் ரசாயனங்களுக்கு எதிரான 'மொன்றியல்" உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை அடுத்து அந்தத் தினமே 1995ம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. பூமியிலிருந்து 20- 60 கி.மீ உயரம் வரை பரவி 
  • உள்ளது. சூரிய ஒளிக்கதிர்களில் நமது கண்ணுக்கு புலப்படாதவை இவை. இவை அகச்சிவப்பு கதிர்கள் , புற ஊதாக்கதிர்கள் என இரண்டாக பிரிக்கலாம்.
  • பூமியிலிருந்து 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம்வரை உள்ள வளிமண்டலப் பகுதி ஸ்டிராட்டோஸ்பியர் எனப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது. 
  • இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் மீது சூரியனின் புறஊதா கதிர்வீச்சு வேதிவினை புரிவதால் ஆக்சிஜன் அணுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த அணுக்கள் புதிய ஆக்சிஜனுடன் சேர்ந்து ஓசோன் வாயுவாக மாறுகின்றன. இது ஒரு படலம் போலப் பூமியைச் சூழ்ந்திருக்கிறது.
  • இந்தப் படலம் இருப்பதால்தான் சூரியஒளி பூமிக்கு நேரடியாக வருவதில்லை. புறஊதாக் கதிர்கள் பூமியில் மினதர்க்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும். 
  • இத்தகைய கதிர்களை பூமிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஓசோன் நடலத்தின் பணி.
எப்படி பாதிக்கிறது?
  • ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு, குளிர்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), குளிர்சாதனப் பெட்டிகளில் (ஏ/சி) இருந்து வெளியான குளோரோ புளூரோ கார்பன். இது ஓசோனுடன் வினைபுரிந்து குளோரினாகவும், ஆக்சிஜனாகவும் மாறுகிறது. 
  • இதனால் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்துபோகிறது. உரங்களில் பயன்படுத்தப்படும் மெத்தில் புரோமைடு, ஜெட் விமானங்கள் வெளியிடும் நைட்ரிக் ஆக்சைடு போன்றவையும் இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
  • இதில் குளோரின் பிரிந்து ஓசோன் துகளை தாக்குகிறது. இதனால் இந்த குளோரோ புளூரோ கார்பன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  • மரக்கட்டை, பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பது, தீயணைப்பு கருவிகள், ஸ்பிரேக்களிலிருந்து வெளி யேறும் குளோரோ புளூரோ கார்பன், டூவீலர்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடுவதாலும் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது.
  • ஓசோன் வாயுக்கள் அளவு குறைந்ததால் பூமியில் வெப்பநிலை உயரும். பனிக்கட்டிகள் உருகி கடல்நீர் மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். 
  • இதன் காரணமாகப் புற்றுநோய், தோல் நோய்கள், பார்வை இழப்பு, பயிர்களுக்குப் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். உலகில் தோல் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேர் பலியாவது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம்  ஆண்டு கருப்பொருள்
  • ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச ஓசோன் தினம் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் அங்கீகரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 2022 ஆம் ஆண்டின் உலக ஓசோன் தினத்தின் கருப்பொருள் 'பூமியில் உயிர்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய ஒத்துழைப்பு' என்பதாகும்.
ENGLISH
  • The ozone layer protects the earth by blocking the intense ultraviolet rays from the sun and reducing excess heat. Its amount is decreasing day by day. Ozone is a molecule consisting of three oxygen atoms. It exists as a gas in the upper atmosphere.
  • On September 16, 1987, in the capital of Canada, after the signing of the "Ozone Depletion" agreement against chemicals that destroy the ozone layer, that day has been observed as International Ozone Day since 1995. Spreading from 20-60 km above the earth
  • has These are invisible to our eyes in sunlight. These can be divided into infrared rays and ultraviolet rays. 15 km from earth. The atmospheric region above 60 km is called the stratosphere. Ozone layer is located in this region.
  • As the sun's ultraviolet radiation reacts chemically on the oxygen in this region, the oxygen atoms are separated, and those atoms combine with new oxygen to form ozone gas. It surrounds the earth like a sheet.
  • It is because of this layer that sunlight does not reach the earth directly. Ultraviolet rays are harmful not only to humans but also to animals and plants on Earth. The function of the ozone layer is to prevent such rays from reaching the earth.
How does it affect?
  • Chlorofluorocarbon released from refrigerators, air conditioners (A/C) to deplete the ozone layer. It reacts with ozone to form chlorine and oxygen. Due to this, the density of the ozone layer decreases. Methyl bromide used in fertilizers and nitric oxide emitted by jet planes also cause such effects.
  • Chlorine dissociates and attacks ozone particles. Thus the use of this chlorofluorocarbon was banned. It is also advised to use alternative technology. The ozone layer is also affected by air pollution due to the burning of wood, plastic materials, fire extinguishers, chlorofluorocarbon from sprays, two-wheelers, carbon dioxide and nitrous oxide from factories.
  • Due to the depletion of ozone gases, the temperature of the earth will rise. Ice caps will melt and sea levels will rise. Low-lying areas are submerged. This can cause cancer, skin diseases, vision loss, damage to crops etc. Around 80,000 people die of skin cancer every year.
Theme 2022
  • Every year, International Ozone Day is recognized with a specific theme. This year, the theme of World Ozone Day 2022 is 'Global Collaboration to Protect Life on Earth'.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel