CWG 2022 ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸில் தங்கம் வென்றார் சரத் கமல்
- 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த டேபிஸ் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சரத் கமலும், இங்கிலாந்தின் லியாம் பிட்ச்ஃபோர்ட் மோதினர். இதில் 4-1 (11-13, 11-7, 11-2, 11-6, 11-8) என்ற நேர் செட் கணக்கில் சரத் கமல் வெற்றி பெற்றார்.
- முன்னதாக ஆடவர் இரட்டையர் டேபிஸ் டென்னிஸில் சரத் கமல் வெள்ளிப் பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் தொடர் - முதல் முறையாக தங்கம் வென்று லக்ஷயா சென் சாதனை
- முன்னதாக, 72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
- இந்நிலையில், இறுதி நாளான இன்று பேட்மிண்டன் ஆண்களுக்கான இறுதிப்போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் லக்ஷயா சென், மலேசியாவின் சீ யாங்கை எதிர்கொண்டார்.
- பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் செட்டை 19-21 என லக்ஷயா கோட்டை விட்டார். இதனையடுத்து சுதாரித்துகொண்ட லக்ஷயா அடுத்த இரு செட்களை 21-9, 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற அவர் தங்கப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் தொடர் - முதல் முறையாக தங்கம் வென்று பி.வி.சிந்து சாதனை
- பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடந்தது. இதில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல்லா லீயை எதிர்கொண்டார்.
- பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இந்தியாவின் சிந்து தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் சிந்து வெல்லும் முதல் தங்கம் இதுவாகும்.
- காமன்வெல்த் வரலாற்றில் முதல் முறையாக ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் பி.வி.சிந்து. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் கலப்பு ஆட்டத்தில் தங்கம் வென்று இருந்தார் பி.வி.சிந்து.
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன்
- 72 நாடுகள் இடையிலான காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வருகிறது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்து வீரர் டிரிங் ஹாலை 4-3 என்ற கணக்கில் சத்யன் வீழ்த்தினார்.
- காமன்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 58 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
- இதனிடையே, காமன்வெல்த் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் சரத் கமல், நிக்கல் ஜரீன் தேசியக் கொடி ஏந்தி செல்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளிப் பதக்கத்தை சரத் கமல் வென்றுள்ளார். இந்திய வீராங்கனை நிக்கத் ஜரீன் குத்துச் சண்டை போட்டி 50 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
- இன்றைய நிறைவு விழாவில் சரத்கமலும், நிக்கத் ஜரீனும் தேசியக் கொடியை ஏந்திச் செல்வர் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.