ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவீதம் உயர்வு
- நாட்டின் பணிவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரித்துக் கொண்டே செல்வதால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- அந்த வகையில் கடந்த மே மாதம் 4-ந்தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, ரெப்போ வட்டி விகிதத்தை 0, 40 புள்ளிகள் உயர்த்தியது.
- இதனால் வட்டி விகிதம் 4.40 சதவிகிதமாக அதிகரித்தது. தொடர்ந்து ஜூன் 8- ஆம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரித்ததால், 4.9 சதவீதமாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் 0.50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.
- இரு மாத நாணய கொள்கை முடிவில் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
காமன் வெல்த் கேம்ஸ் 2022 - 7வது நாள் முடிவு
- ஆண்கள் மல்யுத்தம் பிரீஸ்டைல் 65 கிலோ எடை பிரிவு அரையிறுதியில் இங்கிலாந்தின் ஜார்ஜ் ராமுடன் மோதிய இந்திய நட்சத்திரம் பஜ்ரங் பூனியா 10-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று பைனலுக்கு தகுதி பெற்றார்.
- பைனலில் நவ்ரூ நாட்டை சேர்ந்த லோவ் பிங்காமை 0-5 என வென்று தங்கப்பதக்கத்தை பஜ்ரங் பூனியா தட்டிச்சென்றார். இதன் மூலம் அவர் காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதில், தொடர்ந்து 2ம் முறையாக தங்கம் வென்றுள்ளார்.
- ஆண்கள் மல்யுத்தம் 86 கிலோ பிரீஸ்டைல் பிரிவு அரையிறுதியில் களமிறங்கிய இந்திய வீரர் தீபக் பூனியா 3-1 என்ற புள்ளிக் கணக்கில் கனடாவின் அலெக்சாண்டர் மூரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- இறுதி போட்டியில் பாகிஸ்தானின் முகமது இனாமுடன் மோதினார். இதில், 3-0 என்ற புள்ளிக்கணிக்கில் வென்று தங்க பதக்கத்தை முத்தமிட்டார். 125 கிலோ எடை பிரிவில் மோஹித் க்ரேவல் வெண்கலம் வென்றார்.
- மகளிர் 62 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்தம் அரையிறுதியில் கேமரூன் வீராங்கனை எடானே கோல்லேவுடன் மோதிய இந்திய நட்சத்திரம் சாக்ஷி மாலிக் 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
- இறுதி போட்டியில், கனடாவின் அனா கோடினெஸ் கோன்சாலசுடன் மோதினார். இதில், 4-0 என்ற புள்ளிகள் தங்கம் வென்றார். மகளிர் பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவு மல்யுத்தம் அரையிறுதியில் இலங்கையின் நேத்மி பொருதோடகேவுடன் மல்லுக்கட்டிய அன்ஷு மாலிக் 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.
- பைனலில் நைஜிரீயாவின் துனாயோ போலாசடே அடேகுரோயோயேவுடன் மோதிய அன்ஷு மாலிக் 4-6 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றார்.
- 68 கிலோ எடை பிரிவில் திவ்யா வெண்கலம் வென்றார். இவர், 2வது முறையாக தொடர்ச்சியாக பதக்கம் வென்று சாதித்துள்ளார். இதன் மூலம் ஒரே நாளில் இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று பதக்கம் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.