நேட்டோவில் ஃபின்லாந்து, ஸ்வீடன் - அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
- நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளை இணைத்துக் கொள்வதற்கு அந்த அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான அமெரிக்காவின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
- இது குறித்து நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்துக்கு ஆதரவாக 95 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் பதிவாகின.
- உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் வரை அணி சாரா கொள்கையைப் பின்பற்றி வந்த ஃபின்லாந்தும், ஸ்வீடனும் அந்தப் படையெடுப்புக்குப் பிறகு தங்களது நிலைப்பாட்டை மாற்றி நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ளன.
- நேட்டோவில் அந்த நாடுகளை இணைத்துக் கொள்ள, அதன் 30 உறுப்பு நாடுகளும் சம்மதிக்க வேண்டும். இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
என்.வி. ரமணா பரிந்துரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் யு.யு.லலித்
- உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி, பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனக்கு அடுத்தப்படியாக யாரை தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்வது நடைமுறை. தற்போது, தலைமை நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணா வரும் 27ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
- இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யும்படி ரமணாவுக்கு ஒன்றிய அரசு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியது.
- இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய மூத்த நீதிபதியும், ரமணாவுக்கு அடுத்தப்படியாக 2வது இடத்தில் இருப்பவருமான நீதிபதி யு.யு.லலித்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்துள்ளார்.
- இதற்கு ஒன்றிய சட்டத் துறையும், ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியதும், உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக வரும் 27ம் தேதி யு.யு.லலித் பதவியேற்க உள்ளார்.
- குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திற்கு உட்பட்ட தரம்பூரில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனின் பல்வேறு திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மருத்துவமனை திட்டங்கள் மகளிர் மற்றும் சமுதாயத்தின் பிற தேவையுள்ள பிரிவினருக்கு பெரும் சேவை அளிப்பதாக அமையும் என்றார். ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷன் அமைதியான முறையில் சேவையாற்றி வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்தியா-மொரீஷியஸ் உயர் அதிகார வர்த்தகக் குழுவின் முதலாவது அமர்வு
- இந்தியா-மொரீஷியஸ் உயர் அதிகார வர்த்தகக் குழுவின் முதலாவது அமர்வு புதுதில்லியில் 2022 ஆகஸ்ட் 1 முதல் 3 வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய அரசின் தொழில் வர்த்தகத் துறை இணை செயலாளர் டாக்டர் ஸ்ரீகர் கே ரெட்டியும், மொரீஷியஸ் அரசின் வெளியுறவு அமைச்சக வர்த்தகக் கொள்கை இயக்குனர் திரு நாராயண் தத் பூதூ-வும் கூட்டாக தலைமை தாங்கினர்.
- 2021 ஏப்ரல் 1 முதல் அமலில் உள்ள இந்தியா-மொரீஷியஸ் இடையேயான ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு ஒப்பந்தத்தின் பொதுவான செயல்பாடு மற்றும் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக உயர்நிலை கூட்டு வர்த்தகக் குழு அமைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஆப்பிரிக்க நாடு ஒன்றுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ள முதலாவது ஒப்பந்தமாகும்.
- இருநாடுகளுக்கும் இடையே 2019-20-ல் 690.02 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2021-22-ல் 786.72 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருப்பதற்கு இந்தக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
- பரஸ்பர சுங்க நிர்வாக உதவி ஒப்பந்தம் செய்து கொள்ள இருதரப்பிலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரைவில் விவாதத்தை தொடங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அடுத்த அமர்வை 2023-ல் நடத்துவதற்கு இருதரப்பும் முடிவு செய்துள்ளது.
- காமன்வெல்த் விளையாட்டு 2022-ன் 6-ம் நாளில் இந்தியா ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
- லவ்ப்ரீத் சிங் வெண்கலப்பதக்கம் வென்ற பிறகு, ஜூடோ வீராங்கனை துலிக்கா மான், 78 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும், ஆடவர் பளு தூக்குதல் 109 கிலோ எடை பிரிவில் குர்தீப் சிங் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
- தடகளப் பிரிவின் உயரம் தாண்டுதல் போட்டியில் சவ்ரவ் கோஷல் மற்றும் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். இந்த வெற்றியின் மூலம் தடகளப் பிரிவில் இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.
- காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளது.