நடப்பு 2022-23 கரும்பு பருவத்தில் விவசாயிகளுக்கு உகந்த மற்றொரு நடவடிக்கையாக கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்க சர்க்கரை ஆலைகளுக்கு அரசு ஒப்புதல்
- கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டு கரும்பு பருவத்தில் (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.305 வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 8 ஆண்டுகளில் கரும்புக்கான நியாயமான விலை 34 சதவீதத்திற்கு மேல் அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
- மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால் 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் பயனடைவார்கள். அத்துடன் கரும்பு ஆலையில் பணிபுரியும் 5 லட்சம் ஊழியர்களும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டவர்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இம்முடிவால் நடப்பு 2022-23 கரும்பு பருவத்தில் 3,600 லட்சம் டன்னுக்கும் மேலான அளவிற்கு கரும்பை விவசாயிகளிடமிருந்து கரும்பு ஆலைகள் கொள்முதல் செய்யும் என்றும் இதனால் விவசாயிகளுக்கு 1,20,000 கோடி ரூபாய் விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட இந்தியாவின் தற்போதைய பங்களிப்பு செயல்திட்டத்தை பருவநிலை மாற்றம் குறித்த ஐநா கட்டமைப்பு மாநாட்டிற்கு தெரிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட இந்தியாவின் தற்போதைய பங்களிப்பு செயல்திட்டத்தை பருவநிலை மாற்றம் குறித்த ஐநா கட்டமைப்பு மாநாட்டிற்கு தெரிவிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- பாரீஸ் ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்டது போல், பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலுக்கு உலகளாவிய நடவடிக்கையை வலுப்படுத்துவதை நோக்கிய இந்தியாவின் பங்களிப்பை விரிவுபடுத்துமாறு தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட தற்போதைய பங்களிப்பு செயல்திட்டம் கோரியுள்ளது.
- இத்தகைய நடவடிக்கை வளர்ச்சிப்பாதைகளில் கரியமிலவாயு வெளியேற்றங்களை குறைக்க இந்தியாவுக்கு உதவும். இது நாட்டின் நலன்களை பாதுகாப்பதோடு, அதன் எதிர்கால வளர்ச்சித்தேவைகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
- 2030ம் ஆண்டுக்குள், நாட்டின் மொத்த மின்தேவையில், 50 சதவீதம் மாசு ஏற்படுத்தாத முறையில் தயாரிப்பது போன்ற திட்டங்களை அவர் முன் வைத்தார்.
- இந்த ஐந்து திட்டங்களும் இணைந்த திருத்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட தேசிய பங்களிப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் என். படேல் பதவியேற்பு
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக இருந்த நிலையில் இடைக்கால சிவிசி.யாக சுரேஷ் என்.படேல் கடந்த ஜுன் மாதம் முதல் செயல்பட்டு வந்தார்.
- அவரை அடுத்த சிவிசியாக நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனக்குழு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
- இந்நிலையில் சிவிசி.யாக சுரேஷ் என்.படேல் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இதற்கான விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) தலைமை வகிக்கிறார். இவர் தவிர மேலும் இருவர் ஊழல் கண்காணிப்பு ஆணையர்களாக பதவி வகிக்க முடியும்.
- ஆந்திர வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சுரேஷ் என்.படேல் கடந்த 2020 ஏப்ரலில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்றார். இவரே தற்போது சிவிசி.யாக பதவியேற்றுள்ளார்.
கீழடி அருகே 6 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடி மட்டுமின்றி, அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடந்து வருகிறது.
- அகரத்தில் 6 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடக்கிறது. இங்கு பழங்கால பானை ஓடுகள், சில்லுகள், பாசிமணிகள் கிடைத்து வருகின்றன.
- இங்குள்ள குழி ஒன்றில் சில நாட்களுக்குமுன் உறை கிணற்றின் வாய்ப்பகுதி மட்டும் தென்பட்டது.
- அங்கு தொடர்ந்து தோண்டும் பணி நடந்த நிலையில், தற்போது ஆறடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டு நடந்த அகழாய்வில் 33 அடுக்குகள் கொண்ட மெகா உறை கிணறு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ராம்சர் விருது
- ஈரநிலங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கைதான் ராம்சர் உடன்படிக்கை.
- 1971ஆம் ஆண்டில் ஈரானில் உள்ள ராம்சர் நகரத்தில் இதற்கான உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டதால் அந்த நகரத்தின் பெயரில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற ஈரநிலங்களை அடையாளம் கண்டு, ராம்சர் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
- தமிழ்நாட்டில் கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம் & உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம் ஆகிய 6 ஈரநிலங்களுக்கு ராம்சர் ஈரநில அங்கீகாரம் கிடைத்துள்ளது.
காமன்வெல்த் கேம்ஸ் 2022 - இந்தியாவின் 6வது நாள் முடிவுகள்
- உயரம் தாண்டுதல்: தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்
- ஜூடோ: பெண்கள்: +78 கிலோ (இறுதி): சாரா அட்லிங்டனிடம் (ஸ்கோர்) துலிகா மான் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- ஸ்குவாஷ்: ஆண்கள் (வெண்கலப் பதக்கப் போட்டி): சவுரவ் கோசல்
- பளு தூக்குதல்: ஆண்கள்: 109+ கிலோ: குர்தீப் சிங் (வெண்கலம்).
- பளு தூக்குதல்: ஆண்கள்: 109 கிலோ: லவ்பிரீத் சிங் (வெண்கலம்),