உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 780 ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்
- பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
- அந்த வகையில் ராணுவத்திலும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்தாண்டு டிசம்பர் மற்றும் கடந்த மார்ச் மாதம் என 2 முறை ராணுவ தளவாட உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு பாதுகாப்பு அமைச்சகம் தடை விதித்தது.
- இந்நிலையில், தற்போது 3வது முறையாக, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அதிநவீன ரேடார் அமைப்புகள், சோனார் கருவிகள் உள்பட 780 ராணுவ உதிரிபாகங்களுக்கு இறக்குமதி தடை விதிக்கும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இதற்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த இறக்குமதி மீதான தடை அடுத்தாண்டு டிசம்பர் முதல் 2028ம் ஆண்டு டிசம்பர் வரை படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.
- அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த பொருட்களை ரூ.13,000 கோடியில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் உள்நாட்டு நிறுவனங்களுடன் போடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் சுமார் ரூ,4,400 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- குஜராத் புஜ் பகுதியில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி ஸ்மிருதி வன நினைவிடத்தை திறந்து வைத்தார். 2001 நிலநடக்கத்தின் போது மக்கள் வெளிப்படுத்திய உணர்வை பெருமைப்படுத்தும் பகையில் 470 ஏக்கரில் வனநினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
- வஜ்ரா ப்ரஹார் 2022 எனும் இந்தியா - அமெரிக்கா சிறப்புப் படைகளின் 13வது கூட்டுப்பயிற்சி பாக்லோவில் 2022 ஆகஸ்ட் 28 அன்று நிறைவடைந்தது.
- இந்தியா - அமெரிக்கா இடையேயான இந்த வருடாந்தரப் பயிற்சி அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறுகிறது. இதன்படி 12வது பயிற்சி வாஷிங்டனில் உள்ள லெவிஸ் மெக் கார்ட் கூட்டுப் படைதளத்தில் 2021 அக்டோபரில் நடைபெற்றது.
- ஐநா சாசனப்படி 21 நாள் நடைபெற்ற இந்தக் கூட்டுப் பயிற்சி இருநாட்டு சிறப்பு படைகளுக்கும் சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்றன.
- முதல் கட்டத்தில் எதிர்ப்பை முறியடிக்கும் நிலைமை, போர் தந்திர நிலையில் சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவையும் இரண்டாவது கட்டத்தில் 48 மணி நேர மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பயிற்சியும் நடைபெற்றது.
- இந்தப் பயிற்சியின் பயன் குறித்து இரு நாடுகளின் படையணிகளும் ஆழ்ந்த திருப்தி தெரிவித்தன. இரு அணிகளும் கூட்டு பயிற்சியோடு திட்டமிடுதல், பல்வேறு ஒத்திகை நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டன.
- தற்போதைய உலகச் சூழலில், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் உள்ள தருணத்தில் அமெரிக்க சிறப்பு படைகளுடன் வஜ்ர ப்ரஹார் பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.
- இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்புப்படைகளின் பாரம்பரிய நட்புறவை இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி மேலும் வலுப்படுத்தும். அதேபோல் இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்தும்.