ஹரியாணாவில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் கட்டப்பட்ட நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனை தொடக்கம்
- ஹரியாணாவின் ஃபரிதாபாத் நகரில், டெல்லி-மதுரா சாலையில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில், 130 ஏக்கர் நிலத்தில் 2,600 படுக்கை வசதிகளுடன் நவீன மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி ரூ.6,000 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
- முதல் கட்டமாக 500 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை செயல் பாட்டுக்கு வந்துள்ளது. மருத்துவ மனை கட்டிடத்தின் மேல் மாடியில் ஹெலிகாப்டர் தளமும் உள்ளது.
- இந்த மருத்துவமனை, அடுத்த 5 ஆண்டில் இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக திகழும். இதை மாதா அமிர்தானந்த மயி முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்சேவை - ஜொமனியில் தொடக்கம்
- உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில்களின் சேவை ஜொமனியில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
- லோயா் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், 4 நகங்களை இணைக்கும் 100 கி.மீ. ரயில் பாதையில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
- இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் ரயில்களுக்கு மாற்றாக, புவியை வெப்பமாக்கும் வாயுக்களை முற்றிலும் வெளியிடாத ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
- 9.3 கோடி யூரோ (சுமாா் ரூ.737 கோடி) செலவில் தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் திட்டத்தால் ஆண்டுக்கு 4,400 டன் கரியமில வாயு காற்றில் கலப்பது தடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி
- பீகாரில் பாஜ.வுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கடந்த 10ம் தேதி மீண்டும் ஆட்சி அமைத்தார். இந்த அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நடைபெற்றது.
- இதில், நிதிஷ் அரசு குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் சோதனை வெற்றி
- பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பினால் பினாகா ராக்கெட் உருவாக்கப்பட்டது. எனினும் தனியார் நிறுவனங்கள் இந்த ராக்கெட்டை தயாரிக்கின்றன.
- பினாகா என்பது ஒரு பீரங்கி ஏவுகணையாகும். இது எதிரியின் எல்லைக்குள் 75கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. மேம்படுத்தப்பட்ட பினாகா ஈபிஆர்எஸ் சோதனை ராஜஸ்தானின் பொக்ரானில் மேற்கொள்ளப்பட்டது.
- மொத்தம் 24 ஈபிஆர்எஸ் ராக்கெட்டுக்கள் வெவ்வேறு வரம்புகளில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அனைத்து ராக்கெட்களும் துல்லியமாக இலக்கை தாக்கின. ஈபிஆர்எஸ் என்பது பினாகா வகையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். பினாகா ராக்கெட், கடந்த பத்து ஆண்டுகளாக ராணுவத்தில் சேவையில் இருந்து வருகின்றது.
பயங்கரவாதத்தை ஒன்றிணைந்து எதிா்கொள்ள வேண்டும் - ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் ராஜ்நாத் சிங்
- உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கன்டில் புதன்கிழமை நடைபெற்ற 'ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு' மாநாட்டில் உரையாற்றியபோது அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.
- மாநாட்டில் அவா் மேலும் பேசியதாவது: உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் மிகத் தீவிரமான சவாலாக இருந்து வருகிறது.
- அந்த வகையில், பிராந்தியத்தை அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலைத்தன்மையுடையதாக உருவாக்க அனைத்து வகை பயங்கரவாதத்தையும் எதிா்த்துப் போராட இந்தியா தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
- எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட எந்தவகையான பயங்கரவாதமும் மனித இனத்துக்கு எதிரான குற்றமாகும். அதனை ஒன்றிணைந்து எதிா்கொள்ள வேண்டும்.
- அதாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும்போது, ஒவ்வோா் உறுப்பு நாட்டின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதோடு, தனிநபா்கள், சமூகம் மற்றும் நாடுகளிடையேயான கூட்டுறவை உருவாக்க வேண்டும் என்றாா்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிா்கிஸ் குடியரசு, பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் பதவி பறிப்பு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- தாய்லாந்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவ சதியின் மூலம் கவிழ்த்து பிரயுத் சான் ஒச்சா ஆட்சியை பிடித்தார்.
- இவர் தனது பதவிக்கால வரம்பை மீறி பதவியில் நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான மனுவை அரசியலமைப்பு நீதிமன்றம் விசாரித்தது.
- விசாரணை முடிவில், 5 நீதிபதிகளில் 4 பேர், பிரதமர் பிரயுத் தனது பதவி வரம்பு விதியை மீறியதாகவும், எனவே அவர் தனது பணியை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டனர். இதனால் துணை பிரதமருமான பிரவீத் வோங்சுவான் காபந்து பிரதமராக செயல்படுவார் என தெரிகிறது.
- இவர் தான், ராணுவ சதியின் மூலம் பிரயுத்தை பிரதமர் பதவியில் அமர வைத்தவர். பிரதமர் பிரயுத் வசம் இருக்கும் பாதுகாப்பு அமைச்சக பதவியையும் 15 நாட்களுக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹோமி பாபா புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிதார் பிரதமர் மோடி
- நியூ சண்டிகரில் முல்லன்பூரில் ரூ. 660 கோடி பட்ஜெட்டில், 300 படுக்கைகள் கொண்ட ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்தார்.
- அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, மருத்துவ புற்றுநோயியல், கீமோதெரபி, இம்யூனோதெரபி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை போன்ற அனைத்து நவீன சிகிச்சை வசதிகளையும் கொண்டுள்ளது.
- சண்டிகர் வந்திருந்த பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.