சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
- நல்ல சாலை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள சாலைகளின் மொத்த நீளம் 2.61 லட்சம் கி.மீ ஆகும். இவற்றில் நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் 70,556 கி.மீ. நீள சாலைகள் உள்ளன.
- இவை தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும்மாவட்ட இதர சாலைகள் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- சாலை கட்டமைப்பு, அதன் விதிமுறைகள், சாலைக் குறியீடுகள்ஆகியவை குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அதிக விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
- எனவே, சாலை பாதுகாப்பை மக்கள்இயக்கமாக மாற்றவும், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கவும், பொதுமக்கள் சாலைகளை சரியான வகையில் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்த கையேட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில், வாகன வேகத்தின் தாக்கம்,உலக சுகாதார நிறுவனம், சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் சாலை விபத்து தொடர்பான புள்ளி விவரங்கள், விபத்துக்கான காரணங்கள், அதை தவிர்க்கும் வழிமுறைகள், சாலை விதிகள், பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், எச்சரிக்கை குறியீடுகள், வாகன பராமரிப்பு, முதலுதவி சேவை பற்றிய விளக்கங்கள் மற்றும்உதவி எண்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
தென் கொரியா - அமெரிக்கா மீண்டும் கூட்டு போா்ப் பயிற்சி
- அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து, மிகப் பிரம்மாண்டமான கூட்டு ராணுவ பயிற்சியை திங்கள்கிழமை தொடங்கின. 'உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்டு' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ராணுவப் பயிற்சி, அடுத்த மாதம் 1-ஆம் தேதி வரை நடைபெறும்.
- போா் விமானங்கள், போா்க் கப்பல்கள், பீரங்கிகள் உள்ளிட்டவையும் ஆயிரக்கணக்கான வீரா்களும் இந்த போா்ப் பயிற்சியில் பங்கேற்கவிருக்கின்றனா்.
இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு மையம்
- இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு மையம் உத்ரகாண்ட்டில் அமைக்கப்பட்ட உள்ளது. இந்தியாவின் முதல் வணிக விண்வெளி ஆய்வகம், பூமியைச் சுற்றி வரும் 10 செமீ அளவில் உள்ள பொருட்களைக் கண்காணிக்கும், விண்வெளித் துறை தொடக்க நிறுவனமான திகந்தாராவால் உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் ஆய்வகம் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆசிய வாலிபால் போட்டி - இந்தியா வெண்கலம் வென்றதோடு யு-19 உலகக்கோப்பைக்கு தகுதி
- தென் கொரியா 1999ம் ஆண்டு சாம்பியன் மற்றும் முந்தைய ஆசிய வாலிபால் போட்டித் தொடரில் வெள்ளி வென்றது. ஏற்கெனவே இந்தியாவிடம் குரூப் ஸ்டேட்ஜில் நேர் செட்களில் தோல்வி அடைந்தது.
- ஆனால் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஆட்டம் உச்சக்கட்ட போட்டிக்குச் சென்றது. 5 செட் திரில்லரில் இந்திய அணி தென் கொரியாவை 25-20, 25-21, 26-28, 19-25, 15-12 என்று அபார வெற்றி பெற்றது.
- 2003-ல் இதே தொடரில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஆடவர் அணி. அதன் பிறகு தங்கத்துக்கு நெருக்கமாக வரும் ஆனால் தங்கம் வென்றதில்லை. 2005 முதல் 2008 வரை இந்தியா இதே தொடரில் 2 வெண்கலம், ஒரு வெள்ளி வென்றுள்ளது.
- இதே தொடரில் காலிறுதியில் சீன தைபேயை வென்ற இந்திய அணி, அரையிறுதியில் ஈரானிடம் தோற்றது. வெண்கலப் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி யு-19 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் 3 பேர் கமிட்டி கலைப்பு- உச்ச நீதிமன்றம் உத்தரவு
- இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தலை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்காததால் அதன் தலைவராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலை பதவியில் இருந்து கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது.
- அத்துடன் இந்திய கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்க முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும் தேசிய விளையாட்டு கொள்கையின்படி இந்திய கால்பந்து சம்மேளன விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்து புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
- இந்த தடை காரணமாக, இந்தியாவில் அக்டோபர் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த 7-வது யு-17 பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்திய அணி சர்வதேச போட்டி மற்றும் 'பிபா' வின் பயிற்சி உள்ளிட்ட எந்த நிகழ்விலும் பங்கேற்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
- இந்நிலைகளை விளக்கி உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்ட மனுவை அடுத்து உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட நிர்வாகக் கமிட்டியை கலைத்து உத்தரவிட்டது.
- இதனையடுத்து இந்திய கால்பந்துக்கு விதிக்கப்பட்ட தடையை பிபா திரும்பப் பெற வசதியாகவும் யு-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்தை இந்தியாவில் நடத்த வசதியுமாக சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகம் அதனிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- ஹிமாச்சல் பிரதேசத்தில் குடிநீர் விநியோகம், சுகாதார சேவைகளை மேம்படுத்த 96.3 மில்லியன் டாலர் கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி – இந்திய அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்திய அரசின் சார்பில் பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலர் திரு. ரஜத் குமார் மிஷ்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பில் அதன் இந்திய இயக்குனர் திரு. டேகியோ கோனிஷி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- இந்த திட்டம் ஹிமாச்சலப் பிரதேச அரசின் ஜல் சக்தி விபாக் மற்றும் கிராமப் பஞ்சாயத்து, உள்ளூர் தண்ணீர் குழுக்களின் தேவையை பூர்த்தி செய்யும். இதன் மூலம் 75800 குடும்பங்கள் பயன் பெறும்.
- மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் மற்றும் ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சர் ஜேசன் கிளார் ஆகியோர், மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, 6-வது கல்வி கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
- இந்த சந்திப்பின்போது, கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
- அப்போது, ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்கள், திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் நிறுவனங்களை அமைக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
- இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருமாறு ஜேசன் கிளாருக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்தார். கல்வியை முக்கியத் தூணாக மாற்றும் நோக்கத்தில், இந்தியா, ஆஸ்திரேலியா இடையே, கற்றல், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பையும் விரிவுப்படுத்த அமைச்சர் ஒப்புக் கொண்டனர்.