Type Here to Get Search Results !

நான் முதல்வன் திட்டம் / NAAN MUTHALVAN SCHEME


TAMIL
  • தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக 'நான் முதல்வன்' என்கிற புதிய திட்டம் அமைந்துள்ளது.
  • இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்
  • இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.
  • மாணவர்கள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம். எங்கு படிக்கலாம். எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்
  • தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
  • ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
  • மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும்.
  • இதற்கான பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப் பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி எனத் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.
  • ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும். 
  • முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் (mentoring) முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
  • கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் (Foreign Language) கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
  • அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் Industry 4.0 தரத்திற்கு உயர்த்தப்படும்.
  • மாணவ, மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள்/புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள்/ திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் சேர்க்கையையும் இந்த தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும்.
ENGLISH
  • A new program called 'Naan Mutuvan' is a skill development and guidance program to make school and college students and youth of Tamil Nadu successful not only in studies but also in life.
  • The main objective of this scheme is to provide 10 lakh youth to the country every year in education, knowledge, thinking, energy and skills.
  • The highlight of this scheme is to identify and promote the unique talents of students of Government and Government aided schools, colleges and universities.
  • What students can study next. Where can you read? It will also guide you on how to study
  • Special training in writing and speaking in English and preparation for interview will be provided along with special training to acquire proficiency in Tamil.
  • Training classes like Coding, Robotics will be conducted for school students according to the current technological development.
  • Special summer classes will be conducted with top achievers in each field.
  • Psychiatrists and health doctors provide advice on solid food intake and training on exercise, style, dress, manners and social interaction.
  • Awareness about Tamil culture and tradition will also be created among the students.
  • All the trainings for this purpose will be provided as per requirement such as live training with the best trainers, online training, training in their respective colleges and district wise training.
  • A guidance counseling center will be established in every school. A separate curriculum and syllabus will be developed for this and regular classes will be conducted for the students studying from class 9 to 12.
  • A mentoring system will be introduced for students studying in government schools with former students.
  • In this scheme, the college students will be taught foreign languages ​​according to their choice to ensure employment abroad.
  • Government vocational training centers will be upgraded to Industry 4.0 standard.
  • These series of trainings will also ensure the admission of the students to the top institutes/prestigious universities/skill development institutes of the country according to their merit and interest.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel