Type Here to Get Search Results !

TNPSC 7th AUGUST 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நிடி ஆயோக் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம்

 • மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும் நிடி ஆயோக் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் புதுடில்லியில் நடந்தது. இதில், 23 மாநிலங்களின் முதல்வர்கள், மூன்று துணை நிலை கவர்னர்கள், இரண்டு யூனியன் பிரதேச நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். 
 • ஆலோசனைதெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.இந்த கூட்டத்தில் நான்கு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
 • மாற்றுப் பயிர்கள் மற்றும் பருப்பு, எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட வேளாண் உற்பத்தியில் சுயசார்பு நிலையை எட்டுவது, பள்ளி கல்வியில் புதிய தேசியக் கொள்கையை அறிமுகம் செய்வது, உயர்கல்வியில் புதிய தேசியக் கல்வி கொள்கையை அறிமுகம் செய்வது, நகர்ப்புற நிர்வாகம் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டன.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்த மாநாட்டை வழி நடத்தினார்.

காமன்வெல்த் விளையாட்டு - இந்தியா ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தல்

 • இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவருக்கான 51 கிலோ எடைப் பிரிவு பிளை வெயிட் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் அமித் பங்கல் களம் கண்டார். 
 • அவர், இறுதிச் சுற்றில் எதிர்கொண்ட இங்கிலாந்தின் கியாரன் மெக்டொனால்டை, ஆரம்பம் முதலே ஆக்ரோஷ குத்துகள் மூலம் நிலைகுலையச் செய்தார். இறுதியில், 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
 • மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு மிடில்வெயிட் குத்துச்சண்டை இறுதிச் சுற்றில், இந்தியாவின் நீத்து கங்காஸ், இங்கிலாந்தின் டேமி ஜேட் உடன் மோதினார். இப்போட்டியில், நீத்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து வீராங்கனையை பின்வாங்கச் செய்தார். முடிவில், 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற நீத்து கங்காஸ், தங்கத்தை கைப்பற்றினார்.
 • தடகளத்தில் டிரிபிள்ஜம்ப் எனப்படும் மும்முறை தாண்டுதல் போட்டியில், இந்தியாவின் எல்டாஸ் பால், 17 புள்ளி 03 மீட்டர் நீளம் தாண்டி, முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான அப்துல் அபுபக்கர், 17 புள்ளி 02 மீட்டர் நீளம் தாண்டி, வெள்ளி பதக்கத்தை வசப்படுத்தினார். இதனால், டிரிபிள்ஜம்ப் போட்டியில் இந்தியா இரட்டை பதக்கம் வென்று அசத்தியது. அதேவேளையில், இப்போட்டியில் தமிழக வீரர் பிரவின் சித்ரவேல் நூலிழையில், வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.
 • காமன்வெல்த் மகளிர் ஹாக்கித் தொடரில், மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என இந்தியா முன்னிலை வகித்த நிலையில், கடைசி நிமிடத்தில் நியூசிலாந்து பதில் கோல் அடித்து சமன் ஆனது. அதனால் வெற்றியை தீர்மானிக்க ஷூட்-அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில், 2-1 என்ற கோல்கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது.
 • மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அனு ராணி, வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். இவர், 60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட போட்டியில், இந்தியாவின் சந்தீப் குமார் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். 
 • மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு லைட் பிளைவெயிட் குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் நிகத் ஜரீன் களம் கண்டார். இந்தியாவின் இளம் நட்சத்திரமான ஜரீன், இறுதிச் சுற்றில் வடக்கு அயர்லாந்தின் கார்லி மெக்னாலை எதிர்கொண்டார். ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகத் ஜரீன், 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சூடிக் கொண்டார்.
 • டேபிள் டென்னிஸின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், ஸ்ரீஜா அகுல்லா இணை தங்கம் வென்றது. காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. ஆஸ்திரேலியாவுடனான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற அந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 19.3 ஓவர்களில், 152 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி 
 • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 
 • எனினும், எதிர்பார்த்தது போலவே தன்கர் 528 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 74 சதவீதமாகும். மார்கரெட் ஆல்வா வெறும் 182 வாக்குகள் (26 சதவீதம்) பெற்றார்.
 • இது எதிர்க்கட்சி வேட்பாளருக்கு கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளைவிட குறைவு. கடந்த முறை நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடு 516 வாக்குகள் (68 சதவீதம்) பெற்றார். 
 • இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்திக்கு 244 வாக்குகள் (32 சதவீதம்) கிடைத்தன. அதை விட தற்போது எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 6 சதவீத வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.
ஃபிடே தலைவராக வோர்கோவிச் தேர்வு: துணைத் தலைவரானார் ஆனந்த்
 • சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே)நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் தலைவராக ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்கடி வோர்கோவிச் 2-வது முறையாக தேர்வானார். 
 • அவருக்கு மொத்தம் 157 வாக்குகள் பதிவானது. அவரை எதிர்த்து போட்டியிட்ட உக்ரைனை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான ஆன்ட்ரி பாரிஷ்போல்ட்ஸ் வெறும் 16 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
 • மற்றொரு தலைவர் வேட்பாளரான பிரான்ஸை சேர்ந்த பச்சார் குவாட்லி, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே, வாபஸ் பெற்றார். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், துணைத் தலைவரானார்.
சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக தமிழக பெண் விஞ்ஞானி கலைச்செல்வி நியமனம்
 • காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் - மத்திய எலக்ட்ரோகெமிக்கல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருப்பவர் ந.கலைச்செல்வி. லித்தியம் அயர்ன் பேட்டரி துறையில் இவர் பல பங்களிப்புகளை அளித்துள்ளார். 
 • சிஎஸ்ஐஆர் அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்த சேகர் மாண்டே, கடந்த ஏப்ரலில் ஓய்வு பெற்றார். இதையடுத்து தலைமைப் பொறுப்பை பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் ராஜேஷ் கோகலே, கூடுதலாக கவனித்து வந்தார்.
 • இந்நிலையில், சிஎஸ்ஐஆர்தலைமை இயக்குநராக ந.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார் என மத்தியப் பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதவிர அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி துறையின் செயலாளர் பொறுப்பையும் இவர் கவனிப்பார்.
கேலோ இந்தியா திட்டம் - தமிழகத்துக்கு ரூ.33 கோட, அதிகபட்சமாக குஜராத்துக்கு ரூ.608.37 கோடி நிதி ஒதுக்கீடு
 • கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது. 
 • சுமார் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் - 7.23 கோடி, ஆந்திரா - 33.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • இதேபோல் அருணாச்சல பிரதேசம் - 183.72 கோடி, அசாம் - 47.68 கோடி, பீகார் - 50.83 கோடி, சத்தீஸ்கர் - 20.65 கோடி, டெல்லி - 89.36 கோடி, கோவா - 19.10 கோடி, குஜராத் - 608.37 கோடி, ஹரியானா - 88.89 கோடி, ஹிமாச்சல பிரதேசம் - 38.10 கோடி, ஜம்மு காஷ்மீர் - 27.89 கோடி, ஜார்கண்ட் - 10.38 கோடி, கர்நாடகா - 128.52 கோடி, கேரளா - 62.74 கோடி, லடாக் - 14.28 கோடி, லட்சத்தீவு - 9.00 கோடி, மத்திய பிரதேசம் - 85.64 கோடி, மகாராஷ்டிரா - 110.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • மணிப்பூர் - 80.45 கோடி, மேகாலயா - 28.00 கோடி, மிசோரம் - 39.00 கோடி, நாகாலாந்து - 45.00 கோடி, ஒடிசா - 28.00 கோடி, புதுச்சேரி - 16.02 கோடி, பஞ்சாப் - 93.71 கோடி, ராஜஸ்தான் - 112.26 கோடி, சிக்கிம் - 25.83 கோடி, தமிழ்நாடு - 33.00 கோடி, தெலுங்கானா - 24.11 கோடி, திரிபுரா - 38.35 கோடி, உத்திரபிரதேசம் - 503.02 கோடி, உத்தரகாண்ட் - 23.78 கோடி, மேற்கு வங்காளம் - 26.77 கோடி என மொத்தம் 27,54.28 கோடி ரூபாய் நிதியை மத்திய விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் எல்லையில் இந்தியா- அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி
 • உத்தரகாண்ட் மாநில எல்லைப் பகுதியில் இந்தியா- அமெரிக்க ராணுவம் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆலியில் இந்த ராணுவ பயிற்சி நடைபெறும். எக்ஸ் யுத் அபியாஸ் 2022 என்ற பெயரில் இக்கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படும்.
 • எக்ஸ் யுத் அபியாஸ் என்பது ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா- அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியாகும். தற்போது நடைபெற உள்ளது எக்ஸ் யுத் அபியாஸ்-ன் 18வது பதிப்பாகும்.
 • எக்ஸ் யுத் அபியாஸ்-17வது பதிப்பானது எக்ஸ் யுத் அபியாஸ் 2021 என்ற பெயரில் எல்மெண்டோர்ஃப்-ரிச்சர்ட்சன், அலாஸ்கா (அமெரிக்கா) கூட்டு தளத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. அதன் துவக்க விழாவில் இரு நாடுகளின் தேசிய கொடிகள் ஏற்றபட்டதோடு, இரு நாடுகளின் தேசிய கீதங்களான 'ஜன கண மன' மற்றும் 'தி ஸ்டார் ஸ்பாங்கில்ட் பேனர்' இசைக்கப்பட்டன.
 • இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த பயிற்சி நடைபெற்றது. 7 மெட்ராஸ் இன்ஃபான்ட்ரி பட்டாலியன் பிரிவை சேர்ந்த 350 வீரர்களை கொண்ட இந்திய குழுவும், ஃபர்ஸ்ட் ஸ்குவாட்ரான் பிரிவை (வான்வழி) சேர்ந்த 350 அமெரிக்க வீரர்களும் இதில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel