Type Here to Get Search Results !

TNPSC 11th AUGUST 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தமிழகத்தில் 71 அரசு ஐடிஐ-களில் புதிதாக `தொழில்நுட்ப மையம் 4.0' - ரூ.2,877 கோடி நிதி ஒதுக்கீடு

  • தமிழகத்தில் உள்ள 91 அரசுதொழிற்பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) முதல்கட்டமாக 71-ல் டாடா நிறுவனத்துடன் இணைந்து `தொழில்நுட்ப மையம் 4.0' தொடங்கப்பட உள்ளது.
  • இதற்காக ரூ.2,877.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 87.5 சதவீதம் டாடா நிறுவனம், 12.5 சதவீதம் தமிழக அரசின் பங்களிப்பாகும். மேலும், 71 அரசு ஐடிஐ-களிலும் தலா ரூ.3.73 கோடியில் 10,500 சதுரஅடி பரப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட 71 அரசு ஐடிஐ-களுக்கும் இயந்திரங்கள், பயிற்சிக் கருவிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக தலா ரூ.31 கோடி வீதம், மொத்தம்ரூ.2,201 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றுக்காக ரூ.2,862.01 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்துக்காக 218 புதியபணியிடங்களும், 39 ஒப்பந்தப்பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களது ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.15.42 கோடி என மொத்தம் ரூ.2,877.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்புதிய மையத்தில் தொழில்நுட்பக் கருவிகள் பயன்பாடு, ரோபோ தொழில்நுட்பம், பெயின்டிங் தொழில்நுட்பம், தானியங்கி தொழிற்சாலைகளில் கணினி வழி பயன்பாடு, மின் வாகனம், இணையதள கருவிகள், நவீன உற்பத்தி முறைகள், கணினி வழி வடிவமைப்பு, நவீன குழாய் அமைப்பு போன்ற பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.

இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்பு

  • பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கர் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் மார்கரெட் ஆல்வா போட்டியிட்டார்.
  • இந்தத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 725 பேர் வாக்களித்தனர். அதில் பாஜக வேட்பாளர் ஜெகதீப் தங்கர் 528 வாக்குகளையும், மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் ஜெகதீப் தங்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
  • இந்நிலையில் இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றுக் கொண்டார். ஜெகதீப் தங்கருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 
  • இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் எம்.பி.க்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய "செவாலியே" விருது
  • பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை சிவாஜி கணேசன் கமல்ஹாசன் உள்பட பல இந்தியர்கள் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
  • இந்த நிலையில் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்பியான சசிதரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது
  • 23 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் அவையில் தூதராக பணியாற்றிய சசிதரூர் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்
  • சசிதரூர் எம்பி ஏற்கனவே ஸ்பெயின் நாட்டின் உயரிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel