TNUSRB SI Exam Result 2022 / சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
TNPSCSHOUTERSJuly 27, 2022
0
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற துணை ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnusrbonline.org என்னும் இணையதளத்தின் வாயிலாக தங்களுக்கான தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு TNUSRB தேர்வாணையத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
இத்தேர்வில், ஏற்கனவே காவல் துறையில் பணியாற்றி வரும் 17,561 பேரும், பொதுப்பிரிவில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 448 பேரும் இத்தேர்வில் பங்கேற்றனர்.
இந்நிலையில், தற்போது துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் TNUSRB SI Exam Result 2022 வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஸ்ஐ தேர்வு எழுதியவர்கள், தங்களுடைய தேர்வு முடிவுகளை tnusrbonline.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த கட்டமாக உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். இதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.