Type Here to Get Search Results !

TNPSC 8th JULY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஜப்பானின் முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை

  • ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
  • மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
  • அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயல்படவில்லை.
  • எனவே, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். ஜப்பானின் முன்னாள் பிரதமர் மர்மநபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
  • இந்நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

2 லட்சம் 'இல்லம் தேடி கல்வி மையம்' துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

  • கொரோனா ஊரடங்கால், பள்ளிகள் திறக்கப்படாத காலத்தில், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதித்ததோடு, கற்றல் இடைவெளி ஏற்பட்டது.
  • இதை சரி செய்ய, தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறை சார்பில், 'இல்லம் தேடி கல்வி' திட்டம், 2021 அக்டோபரில் துவக்கப்பட்டது.  அதன் இரண்டு லட்சமாவது மையத்தை, திருவண்ணாமலை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
  • தொடர்ந்து, இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான காணொலி யையும், புகைப்பட விளக்க புத்தகத்தையும் வெளியிட்டார். கடந்த ஜூன் 1 முதல் 12 வரை, இந்த திட்டத்தின் மூலம், குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க 'ரீடிங் மாரத்தான்' என்ற தொடர் வாசிப்பு போட்டி நடத்தப்பட்டது.
  • திருச்சி லால்குடி வட்டாரம் முதலிடம், மதுரை அலங்காநல்லுார் வட்டாரம் இரண்டாம் இடம், மதுரை மேலுார் மூன்றாம் இடம் பிடித்தது. மேலும், சிறந்த தன்னார்வலர்களுக்கான தேர்வில், மதுரை மாவட்டம், சிறந்த மாணவர்களுக்கான தேர்வில், திருப்பத்துார் மாவட்டமும் வென்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel