Type Here to Get Search Results !

TNPSC 5th JULY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உணவு பாதுகாப்பு - ஒடிசா முதலிடம், தமிழகத்துக்கு 9வது இடம்

  • தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஆண்டுதோறும் மத்திய அரசு வரிசைப்படுத்தி வருகிறது.
  • 2022ம் ஆண்டுக்கான மாநில தரவரிசை குறியீட்டை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வெளியிட்டார். 
  • தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் வரிசையில், ஒடிசா முதலிடம் பெறுகிறது. உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்திலும், ஆந்திரா மூன்றாம் இடத்திலும் உள்ளன. 
  • இந்த தரவரிசை குறீயீட்டு பட்டியலில் தமிழகத்துக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.

நேட்டோவில் ஸ்வீடன், ஃபின்லாந்து இணைப்பு - நெறி ஆவணத்தில் உறுப்பு நாடுகள் கையொப்பம்

  • நேட்டோவில் ஸ்வீடனையும் ஃபின்லாந்தையும் இணைத்துக் கொள்வதற்கான நெறிமுறை ஆவணத்தில் அதன் 30 உறுப்பு நாடுகளும் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டன.
  • அதையடுத்து, அந்த ஆவணம் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற அனுமதிக்காக அந்த நாடுகளின் தலைநகா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
  • இதையடுத்து, இதுவரை அணிசாரா கொள்கைகைக் கடைப்பிடித்து வந்த ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கை மேலும் ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பசிபிக் பகுதியில் நடக்கும் 'ரிம்பாக் ஒத்திகை' - இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா, பி-8ஐ பங்கேற்பு

  • பசிபிக் வளைய போர்ப்பயிற்சி ஒத்திகையான ரிம்பாக் (RIMPAC) நிகழ்வில் பங்கேற்பதற்காக, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா போர்க்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும், ஹவாய் தீவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்திற்கு சென்றுள்ளன.
  • இதில், சாத்புரா கப்பல் ஜூன் 27-ம் தேதி ஹவாயைச் சென்றடைந்த நிலையில், பி-8ஐ விமானம் ஜூலை 2-ம் தேதி ஹவாயைச் சென்றடைந்தது. 
  • துறைமுக வளாகத்தில் நடைபெறும் இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, கருத்தரங்குகள், விவாதங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. 
  • இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்ள கடற்படை வீரர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியக கப்பலான யுஎஸ்எஸ் மிசோரியை பார்வையிட்டனர். 
  • தொடர்ந்து யுஎஸ்எஸ் அரிசோனா நினைவிடத்தில், இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
  • ஆறுவார காலம் நடைபெறும் இந்தப் போர் பயிற்சியில் ஐஎன்எஸ் சாத்புரா மற்றும் ஒரு பி-8ஐ கடலோர ரோந்து விமானமும் பங்கேற்றுள்ளன. 
  • நட்பு நாட்டு கடற்படைகளிடையே, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் போர்ப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  • மொத்தம் 28 நாடுகளைச் சேர்ந்த 38 போர்க் கப்பல்கள், 9 நாடுகளின் தரைப்படையினர், 31 ஆளில்லா சாதனங்கள், 170 விமானங்கள் மற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்னனர்.
  • இந்தக் கடல் ஒத்திகை ஜூலை 12- ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 4-ம் தேதி பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel