Type Here to Get Search Results !

TNPSC 4th JULY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

35-வது ஆண்டுவிழா வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை

  • அமெரிக்கா, கனடாவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பாக விளங்கும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் ('ஃபெட்னா') 35-வது ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. 
  • இதில், 2020-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ் பீட விருது, இலக்கியச் செம்மல் தமிழ்கோ இளங்குமரனாருக்கும், 2021-ம் ஆண்டுக்கான விருது, ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்கப்பட்டது. இதில் காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு என்ற முதலீட்டாளர்கள் மாநாடு
  • தமிழக அரசின் தொழில் துறை சார்பில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை தாஜ் கோரமண்டல் நடந்தது.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்த நிகழ்ச்சியில், வெளியிட்டார். 
  • மேலும், மாநிலத்தில் நிதித் தொழில் நுட்பங்கள் பரவலாக பின்பற்றப்படுவதை அதிகரிக்கும் வகையில், டிஎன்டெக்ஸ்பீரியன்ஸ் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
  • மேலும், டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் திட்டத்திற்கான இணையதளத்தையும் ((https://tntecxperience.com) முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
  • நிகழ்ச்சியில், தமிழ்நாடு நிதி தொழில்நுட்ப முதலீட்டு களவிழா -TN PitchFest - தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் ஒரு நிதிநுட்ப முதலீட்டு களவிழா, முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. 
  • வழிகாட்டி நிறுவனமும், startup TN நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொள்கின்றன. இந்த நிகழ்விற்கான விவரங்களை https://tntecxperience.com/users/tnpitchfest என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். 
  • மாநாட்டில், 11 நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. 
  • நிதி தொழில்நுட்பக் கொள்கையின் கீழ் ஊக்குவிப்பு சலுகை வழங்குவதற்கு நிதி நுட்ப ஆட்சிமன்றக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 2 நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகுப்பு சலுகை அளிப்பதற்கான ஆணைகளையும் முதல்வர் நிறுவனங்களுக்கு வழங்கினார்.
  • 65,373 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 58,478 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. 
  • 59,871 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 16,420 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் சிறப்பு தொகுப்புச் சலுகை அளிக்கப்படும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. 
  • மொத்தம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
  • மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 22,252 கோடி ரூபாய் முதலீட்டில், 17,654 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 
  • அதேபோல 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினையும் அவர் தொடங்கி வைத்தார். 
  • 2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறு, உயிர் அறிவியல் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022-ஐ வெளியிட்டார். 
  • 2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா வாரம் 2022 –ஐ காந்தி நகரில் தொடங்கி வைத்தார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா வாரம் 2022-ஐ காந்தி நகரில் தொடங்கி வைத்தார். புதிய இந்தியாவுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் இது நடைபெறுகிறது. 
  • இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு டிஜிட்டல் முன்னெடுப்புகளையும் அவர் தொடங்கி வைத்தார். 
  • இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா இயக்கம், பெரிய அளவில் விரிவாக்கம் பெற்றுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரத்தில் புகழ்மிக்க விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் ஓராண்டுகால 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார்
  • ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரத்தில் புகழ்மிக்க விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் ஓராண்டுகால 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். 
  • முதலமைச்சர் திரு ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  • 1897 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று பிறந்த அல்லூரி சீதாராம ராஜூ, கிழக்குத் தொடர்ச்சி மலை பிராந்தியத்தின் பழங்குடி சமூகத்தினரின் நலன்களை பாதுகாக்க பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்திற்காக நினைவுகூரப்படுகிறார். 
  • 1922 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராம்ப்பா கிளர்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார். உள்ளூர் மக்களால் அவர் “மான்யம் வீருடு” (வனங்களின் நாயகன்) என்று குறிப்பிடப்படுகிறார். 
  • ஓராண்டு கால கொண்டாட்டங்களின் பகுதியாக பல்வேறு முயற்சிகளுக்கு அரசு திட்டமிட்டுள்ளது. விஜயநகரம் மாவட்டத்தில் அல்லூரி சீதாராம ராஜூ பிறந்த ஊரான பாண்டுரங்கியும் (ராம்ப்பா கிளர்ச்சியின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்) சிந்தாப்பள்ளி காவல்நிலையமும் (ராம்ப்பா கிளர்ச்சி தொடங்கிய போது தாக்கப்பட்ட காவல்நிலையம்) புனரமைக்கப்பட உள்ளன. 
  • மொகல்லூ என்ற இடத்தில் தியான முத்திரையுடன் இருக்கும் அல்லூரி சீதாராம ராஜூ சிலையுடன் அல்லூரி தியான ஆலயத்தை கட்டமைக்கவும், சுவரோவியங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உரையாடல்களை அறியும் முறையுடன் சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை கதையை சித்தரிக்கவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel