75 ஆம்புலன்ஸ், 17 பேருந்துகள் நேபாளத்துக்கு இந்தியா பரிசு
- இந்தியா இந்தாண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
- இந்நிலையில், இந்தியா-நேபாளம் இடையிலான வலுவான, நீண்டகால நட்புறவை வலுப்படுத்தும் விதமாக, நேபாளத்துக்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கி உள்ளது.
- இதற்கான சாவிகளை நேபாளத்துக்கான இந்தியாவின் புதிய தூதர் நவீன் வஸ்தவா, நேபாள கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தேவேந்திர பவுடல் முன்னிலையில் காத்மாண்டுவில் வழங்கினார்.
- 2020ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு, 41 ஆம்புலன்ஸ்கள், 6 பள்ளி பேருந்துகள் பரிசாக வழங்கப்பட்டது.
மாநில அணைகள் பாதுகாப்பு குழு / அமைப்பின் செயல்பாடுகள்
- அணை பாதுகாப்புக்கான மாநில குழு ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் மறுசீரமைக்கப்பட வேண்டும். இந்த குழு ஆண்டுக்கு 2 முறை கூடி, பருவமழை தொடங்கும் முன் ஒரு கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறையாக நடக்கிறது
- பருவமழை தொடங்கும் முன் அணைகளை முறையாக இயக்குவதற்கான (ஹைட்ரோ மெக்கானிக்கல்) பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
- அணைகளை முதலில் நிரப்புவதற்கு முன், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்ட அணையை பொறியாளர்கள் மூலமாகவோ அல்லது நிபுணர் குழு மூலமாகவோ ஆய்வு செய்து, ஆரம்ப கட்டத்திலேயே ஆய்வு செய்து அதன் விரிவான அறிக்கையை தயாரிக்க வேண்டும். அணையை நிரம்புவதற்கு தகுதியை முறையாக சான்றளிக்க வேண்டும்.
- அணையின் கண்காணிப்பு, நீர் வானிலை நிலையங்கள், நில அதிர்வு நிலையங்களின் கருவிகளை கண்காணிக்க வேண்டும்.
- அணைகளின் மறுசீரமைப்பு, பழைய அணைகளின் மறுசீரமைப்பு தேவைகள் குறித்த பரிந்துரைகளை செய்கிறது.
- ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பராமரிக்கப்படும் அணையை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தை நடத்த வேண்டும்.
- அணைகளின் பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை மாநில அணைகள் பாதுகாப்பு குழு வழங்க வேண்டும். மேலும், அணையில் ஏதேனும் பெரிய பிரச்னைகள் அல்லது இடர்பாடுகள் காணப்பட்டால், தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு முதல் கட்ட குழுவுடன் இணைந்து அணையை ஆய்வு செய்து, பிரச்னைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஒவ்வொரு மாநில அணை பாதுகாப்பு அமைப்பும், 3 மாதங்களுக்கு ஒரு முறை, அதன் செயல்பாடுகள் மற்றும் மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட அணைகளின் பாதுகாப்பு குறித்த ஆண்டறிக்கையை தயாரித்து, அத்தகைய அறிக்கையை தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில அரசுக்கு அனுப்பப்படும்.
- தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அணை பாதுகாப்பு அமைப்பு, குறிப்பிட்ட அணைகள் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டால், அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்.
- மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவால் தமிழகத்தில் உள்ள 128 அணைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
- அப்போது, அணையின் கட்டமைப்பு, அணை அடித்தளம், அணையின் மேல்நிலை நீர்நிலைகள் மற்றும் அணையின் கீழ்பகுதியில் உள்ள நிலத்தின் தன்மை அல்லது பயன்பாடு குறித்து பொறியாளர்களால் தொகுக்கப்பட்டு இறுதி செய்யப்படுகிறது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'டிஎன் டாக்' என்ற பெயரில் அறிஞர், வல்லுநர்கள் உரை நிகழ்த்த ரூ.37.50 லட்சம் அரசாணை வெளியீடு
- 2022-2023ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறையின் மானிய கோரிக்கையின்போது, வெளியிடப்பட்ட அறிவிப்பில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் சர்வதேச அளவில் பல்துறை நிபுணர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், புகழ்பெற்ற அறிஞர்களின் உரைகள் மிக சிறந்த தொழில் நுட்பம், மற்றும் அரங்க அமைப்புடன் 'TN talk' என்ற பெயரில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- இதையடுத்து, டிஎன் டாக் என்ற நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் 25 நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தனித்துவம் மிக்க இந்த நிகழ்வில் மிக சிறந்த பேச்சாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் நடத்தப்படும்.
- இலக்கியம், பொருளாதாரம், கல்வி, தொல்லியல், மருத்துவம், அறிவியல் போன்ற ஒவ்வொரு துறை சார்ந்த புகழ் பெற்ற மிக சிறந்த ஆளுமைகள் அழைக்கப்பட்டு பேசுவார்கள். புகழ் பெற்ற பல்கலை கழகங்கள், கல்லூரிகள், அரசு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும்.
- இந்த நிகழ்வுகள் பொது நூலகத்துறையின் இயக்குநர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
- இந்த நிகழ்வு ஒன்றுக்கு தலா ரூ.1 லட்த்து 50 ஆயிரம் என்ற வகையில் 25 நிகழ்வுகளுக்கு ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் என்றும் அதை செலவினத்துக்கான தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் இயக்குநர் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
- பொது நூலகத்துறை இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலனை செய்த அரசு அதை ஏற்று, ரூ. 37 லட்சத்து 50 ஆயிரத்தை நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குகிறது.
மகளிர் 3000 மீ. ஓட்டம் பாருல் சவுதாரி தேசிய சாதனை
- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த சவுண்ட் ரன்னிங் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பாருல் சவுதாரி புதிய தேசிய சாதனை படைத்தார்.
- இறுதிப் போட்டியில் 5வது இடத்தில் பின்தங்கியிருந்த சவுதாரி, கடைசி 2 சுற்றில் அபாரமாக ஓடி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். அவர் 8 நிமிடம், 57.19 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்தது புதிய தேசிய சாதனையாக அமைந்தது.
- முன்னதாக, 2016ல் டெல்லியில் நடந்த போட்டியில் சூரியா லோகநாதன் (9:04.5) படைத்த சாதனையை பாருல் முறியடித்தார். மகளிர் 3000 மீட்டர் ஓட்டத்தில் 9 நிமிடத்துக்கு குறைவாக ஓடி இலக்கை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.