Type Here to Get Search Results !

TNPSC 30th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே

 • ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகவும் பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர ஃபட்னவிஸ் மாநில துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 • மகாராஷ்டிர மாநில அரசியலில் இப்போது மைய இடத்துக்கு வந்துள்ள ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக சிவசேனை கட்சி எம்எல்ஏக்களை திருப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும்வரை அந்த மாநிலத்தின் கேபினட் அமைச்சராக இருந்தார். 
 • அந்த அமைச்சரவையில் மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். மகாராஷ்டிராவின் கோப்ரி-பச்பகாடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராகவும் அவர் இருக்கிறார்.

2035இல் இந்திய நகா்ப்புற மக்கள் தொகை 67 கோடி - ஐ.நா. அறிக்கையில் தகவல்

 • வரும் 2035-க்குள் நகா்ப்புற மக்கள் தொகையில் 100 கோடி பங்களிப்புடன் சீனா முதலிடத்தில் இருக்கும். இதற்கு, அடுத்தபடியாக, இந்தியா 67.5 கோடி மக்கள் தொகையுடன் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கும்.
 • விரைவான நகரமயமாக்கல் என்பது கரோனா பேரிடரால் தற்காலிகமாக தாமதப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய நகா்ப்புற மக்கள்தொகை மேலும் 220 கோடி அதிகரிக்கும்.
 • 2020-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 483,099,000-ஆக இருந்த இந்தியாவின் நகா்ப்புற மக்கள் தொகை 2025-இல் 542,743,000-ஆகவும், 2030-இல் 607,342,000-ஆகவும், 2035-இல் 675,456,000 ஆகவும் அதிகரிக்கும்.
 • அதேபோன்று, 2035-இல் நகா்ப்புற மக்கள் தொகை சீனாவில் 105 கோடியாகவும், ஆசியாவில் 299 கோடியாகவும், தெற்கு ஆசியாவில் 98.75 கோடியாகவும் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

 • விண்வெளி ஆய்வில் தனியார் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக 2019-ம் ஆண்டு என்எஸ்ஐஎல் என்ற அமைப்பும், 2020-ல் இன்ஸ்பேஸ் என்ற அமைப்பும் நிறுவப்பட்டன.
 • அதன்படி என்எஸ்ஐஎல் அமைப்பு மூலம் சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. 
 • இந்த ஏவுதலுக்கான 25 மணி கவுன்ட்டவுன் தொடங்கியது. தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மாலை 6.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
 • தரையில் இருந்து புறப்பட்ட 19 நிமிடங்களில் 3 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இந்த ஏவுதலில் முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. 
 • இது ஒரே நேரத்தில் பல்வேறு கோணங்களில் பூமியை வண்ணப்படம் எடுக்கும் திறன் உடையது. மேலும், பேரிடர் மீட்புக்குத் தேவையான மனித வளங்களை கண்டறியும் பணிகளையும் மேற்கொள்ளும்.
 • இதுதவிர 155 கிலோ எடை கொண்ட நியூசர் செயற்கைக்கோள் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இது இரவு, பகல் உட்பட அனைத்து பருவ நிலைகளிலும் துல்லியமாக படங்களை எடுத்து வழங்கும். இவ்விரண்டும் சிங்கப்பூருக்காக கொரியா குடியரசால் உருவாக்கப்பட்டவை. 
 • இதனுடன் கல்விசார் பணிக்காக சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலை. மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் (2.8 கிலோ) விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
 • இந்த வெற்றியின் மூலம் 1993-ம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்கா உட்பட 34 வெளிநாடுகளை சேர்ந்த 345 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
 • மேலும், இந்த ராக்கெட் ஏவுதலின்போது செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிப் பாகமான பிஎஸ் 4 இயந்திரம் உதவியுடன் சில ஆய்வு கருவிகள் பூமியைச் சுற்றி வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழிலகங்களில் பெண்கள் 'பாதுகாப்பு பெட்டி' திட்டத்தை துவக்கினார் அமைச்சர் கீதாஜீவன்

 • தொழில் நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்புடன் பணிபுரிவதை உறுதி செய்யும் வகையில், 'பாதுகாப்பு பெட்டி' திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கிவைத்தார்.
 • பணிபுரியும் இடங்களில், பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கு மற்றும் தொழில் நிறுவனங்களில், 'பாதுகாப்பு பெட்டி' வைக்கும் அறிமுக நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி பழங்கரையில் நடந்தது.கலெக்டர் வினீத், வரவேற்றார்.

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

 • மத்திய அரசு அக்னிபாத் என்ற பெயரில் புதிய ராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கையை அண்மையில் வெளியிட்டது. ராணுவத்தில் பணிக் காலம் 4 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்க்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
 • மத்திய பாஜக அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரும் போராட்டங்கள் வெடித்தன. வட இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 
 • ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இதனால் பல நூறு ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல்களால் ரயில்வே துறைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
 • இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபை இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. பஞ்சாப் சட்டசபையில் முதல்வர் பகவந்த் மான் இத்தீர்மானத்தை தாக்கல் செய்தார். 
 • இத்தீர்மானம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஞ்சாப்பைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொழில்முனைவோர் இந்தியா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்
 • தொழில்முனைவோர் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, ‘உருவாதல் மற்றும் விரைவுபடுத்தும் எம்எஸ்எம்இ செயல்பாட்டுத்’ திட்டம், முதன்முறை எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்களின் கட்டமைப்புத் திறன் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம் (பிஎம்இஜிபி) முதல் எம்எஸ்எம்இ துறையை முன்னேற்றுதல் வரையிலான புதிய அம்சங்கள் போன்ற முக்கியமான முன்முயற்சிகளையும் தொடங்கிவைத்தார். 
 • 2022-23-க்கான பிஎம்இஜிபி பயனாளிகளுக்கு உதவித் தொகையை டிஜிட்டல் வழியாக அவர் பரிவர்த்தனை செய்துவைத்தார்; எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் 2022-ன் முடிவுகளையும் அறிவித்தார்; 
 • தேசிய எம்எஸ்எம்இ விருதுகளை வழங்கினார்; தற்சார்பு இந்தியா நிதியத்தில் 75 எம்எஸ்எம்இ-களுக்கு டிஜிட்டல் சமபங்கு சான்றிதழ்களை வழங்கினார். 
 • மத்திய அமைச்சர்கள் திரு.நாராயண் ரானே, திரு.பானு பிரதாப் சிங் வர்மா, நாடு முழுவதிலும் இருந்து எம்எஸ்எம்இ சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel