காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்ற மீராபாய் சானு
- இங்கிலாந்தின் பர்மிங் ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மகளிர் 49 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில், இந்தியாவின் மீராபாய் சானு களம் கண்டார்.
- இவர், ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோ எடையை தூக்கி, சக போட்டியாளர்கள் நெருங்க முடியாத அளவிற்கு முன்னிலை வகித்தார். இதேபோன்று கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவிலும் 113 கிலோ எடை தூக்கி மிரட்டினார்.
- ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவு இரண்டிலும் சேர்த்து மொத்தம் 201 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
- அத்துடன், தனது சிறந்த சாதனையுடன், காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனையும் படைத்தார். கிளாஸ்கோ காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற இவர், 2018-ல் கோல்டுகோஸ்ட்டில் தங்கம் வென்றார்.
- தற்போது மீண்டும் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டதன் மூலம் காமன்வெல்த் தொடரில் ஹாட்ரிக் பதக்கம் வென்று வியக்க வைத்துள்ளார்.
காமன் வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்க வென்ற இந்திய வீராங்கனை பிந்த்யா ராணி தேவி
- காமன் வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பிந்த்யா ராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிருக்கான 55 கிலோ எடை பிரிவில், மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கத்தை வசப்படுத்தினார்.
- தாம் முதன் முதலாக பங்கேற்றுள்ள காமன்வெல்த் தொடரில், வெள்ளி வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக பிந்த்யா ராணி தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வெள்ளி வென்றார் சங்கேத் சர்கார்
- இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் 2வது நாளான பளுதூக்கும் போட்டிகள் நடைபெற்றன.
- ஆண்கள் 55 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சங்கேத் சர்கார் (21 வயது), ஸ்நேட்ச் முறையில் 113 கிலோவும், கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 135 கிலோவும் என மொத்தம் 248 கிலோ தூக்கினார்.
- கிளீன் அண்டு ஜெர்க் முறையின் 3வது வாய்ப்பில் 139 கிலோ தூக்க முயிற்சித்த சர்காருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால் தங்கம் வெல்லும் வாய்ப்பு கை நழுவியது.
- இதே பிரிவில் மலேசியாவின் முகமது அனிக், ஸ்நேட்ச் முறையில் 107 கிலோ , கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 142 கிலோ என மொத்தம் 249 கிலோ தூக்கி தங்கம் வென்றார். நூலிழையில் முதல் இடத்தை தவற விட்ட சர்கார் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
- நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கான முதல் பதக்கமாக இது அமைந்தது. இலங்கை வீரர் திலங்கா இஸ்ரு குமாரா 225 கிலோ(105+120) தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். இந்தியாவின் பதக்க வேட்டையை வெள்ளிகரமாக தொடங்கி வைத்துள்ள சங்கேத் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெண்கல வென்றார் குருராஜ் புஜாரியா
- காமன்வெல்த் ஆண்கள் பளுதூக்குதல் 61 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் குருராஜா பூஜாரி ஸ்நேட்ச் முறையில் 118 கிலோ மற்றும் கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 151 கிலோ என மொத்தம் 269 கிலோ எடை தூக்கி 3வது இடம் பிடித்தார்.
- குருராஜ் வென்ற வெண்கலம் இந்தியாவுக்கு நேற்று கிடைத்த 2வது பதக்கமாகும். இந்த பிரிவில் மலேசியாவின் அஸ்னில் பிடின் முகமது புதிய காமன்வெல்த் சாதனையுடன் (285 கிலோ) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். பப்புவா நியூகினியா வீரர் மோரியா பாரு (273 கி.) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
ரூ.5,200 கோடி மதிப்பில் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் - சோலார் பேனல் தொடர்பான இணையதளமும் அறிமுகம்
- பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகான கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் மின்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துக்காட்டும் விதமாக 'ஒளிமயமான இந்தியா, பிரகாசமான எதிர்காலம் @2047' என்ற நிகழ்ச்சி ஜூலை 25-ல் தொடங்கியது.
- நிகழ்ச்சியின் இறுதி நாளான பிரதமர் மோடி காணொலி வாயிலாக பல்வேறு பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- தெலங்கானாவில் 100 மெகாவாட், ராமகுண்டம் மிதக்கும் சோலார் திட்டம், கேரளாவில் 92 மெகாவாட் காயம்குளம் மிதக்கும் சோலார் திட்டம், ராஜஸ்தானில் 735 மெகாவாட் சோலார் திட்டம், லேயில் பசுமை ஹைட்ரஜன் மொபிலிட்டி திட்டம், குஜராத்தில் இயற்கை எரிவாயுடன் ஹைட்ரஜனை சேர்க்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.5,200 கோடிஆகும். மேலும், மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பது தொடர்பான இணையதளத்தையும் அவர் அறிமுகம் செய்தார்.
கார்கில் வெற்றி நினைவாக 5140-ம் எண் முனைக்கு 'துப்பாக்கி மலை' பெயர்
- கடந்த 1996ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு எதிரி துருப்புக்கள் மற்றும் 5140வது முனை உட்பட அவர்களின் பிடியில் இருந்த பாதுகாப்பு நிலைகளில் கடும் தாக்குதல் நடத்தியது. இது, கார்கிலில் போரை விரைவாக முடிப்பதற்கான முக்கிய காரணியாக அமைந்தது.
- இதன் நினைவாக, இந்த 5140வது முனைக்கு, ஆபரேஷன் விஜய்யில் பங்கேற்ற வீரர்களின் உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 'துப்பாக்கி மலை' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது,'' என்றார்.
- இந்நிலையில், கார்கில் போர் நினைவிடத்தில் விழா நடந்தது. இந்த விழாவில் பீரங்கிப் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் டி.கே.சாவ்லா, பயர் அண்ட் ப்யூரி படை பிரிவு தலைமை அதிகாரி லெப். ஜெனரல் அனிந்தியா சென்குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டு போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.