'5ஜி' அகண்ட அலைவரிசை ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஏலம்
- அடுத்த தலைமுறைக்கான '5ஜி' தொழில்நுட்பத்தில் அகண்ட அலைவரிசை சேவைக்கான உரிமத்திற்கு ஏலம் துவங்கியது.
- அன்றைக்கு நான்கு சுற்றுகளில், 1.45 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் கோரப்பட்டது. ஒன்பது சுற்றுகள் முடிந்த நிலையில், 1.49 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டுள்ளதாக, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- மொத்தம், 72 'கிகாஹெர்ட்ஸ்' அலைவரிசையை ஏலம் விட்டு, 4.30 லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல், குமார் மங்களம் பிர்லாவின் வோடபோன் ஐடியா, கவுதம் அதானியின் அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு, அவை கோரிய அகண்ட அலைவரிசையை மத்திய அரசு வரும் செப்டம்பரில் ஒதுக்க உள்ளது.
- 5ஜி அலைவரிசை பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், இந்தியாவில் தகவல் தொடர்பு துறையில் புதிய புரட்சி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 'ரிலையன்ஸ் ஜியோ' முன்னணி ரிலையன்ஸ் ஜியோ, 10 மெகாஹெர்ட்ஸ் உரிமத்தை, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
- பார்தி ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டதை விட கூடுதலாக முதலீடு செய்து, 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, அகண்ட அலைவரிசை உரிமத்தை பெற்றுள்ளது.
- வோடபோன் ஐடியா, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ், டில்லி, கர்நாடகா தவிர்த்து, 20 தொலைதொடர்பு வட்டங்களில், 900 கோடி ரூபாய்க்கு அகண்ட அலைவரிசை உரிமையை வாங்கியுள்ளது.
- இந்த ஏலம் வாயிலாக மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் முன்பணமாக, 13 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். அத்துடன், அடுத்த 19 ஆண்டுகளுக்கு, இதே தொகை ஆண்டுதோறும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
- இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் குழுவினர், 805 வாகனங்களில் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
- இந்தத் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விழிப்புணர்வு வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் பள்ளியைப் பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நிதி ஒதுக்கீடு
- கடந்த 7.5.2022 அன்று தமிநாடு சட்டப்பேரவையில் முதலமைசச்சர் மு.க ஸ்டாலின்," 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
- இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும். 1545 அரகப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு இன்று ஆணையிட்டுள்ளது.
- மேலும், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மெரினா - கோவளம் வரை கடற்கரை சீரமைப்பு - ரூ.100 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
- "கடற்கரையின் அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த வசதி செய்வதும் மேம்பாட்டு திட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- கடந்த சட்ட பேரவையில் ஏப்ரல் மாதம் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மற்றும் சுற்றுசூழல் சார்நிலை மாற்றம் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து மெரினா முதல் கோவளம் வரையிலான 30 கி.மீ. நீள கடற்கரை பகுதியில் ரூ.100 கோடியில் மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்க பணிகள் மேற்கொள்வதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
- இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தினருடைய உறுப்பினர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- சென்னை எண்ணூர் முதல் கோவளம் வரையிலான கடற்கரை பகுதியை பருவகால மாற்றத்தின் அடிப்படையில் பாதுகாப்பதற்கும் மேலும் இந்த கடற்கரை பொறுத்தவரையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் இடமாக அமைந்துள்ளது.
புத்தொழில் சூழமைவிற்கான "லீடர் " விருது
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் , ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவிற்கான "லீடர்" விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
- புதுதில்லியில் 4.7.2022 அன்று ஒன்றிய அரசின் தொழில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு வணிகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத்தில் புத்தொழில் சூழமைவினை வலுப்படுத்தும் நோக்கில் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுத்தற்காக தமிழ்நாட்டிற்கு லீடர் விருது வழங்கப்பட்டது.
- முந்தைய ஆண்டுகளில் புத்தொழில் சூழமைவில் வளர்ந்து வரும் மாநிலம் என்ற நிலையில் இருந்து தற்போது "லீடர்" நிலைக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
- பிரேசிலில் BM-SEAL-11 திட்ட மேம்பாட்டிற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (BPCL) துணை நிறுவனமான பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் நிறுவனம் மூலம் (BPRL) 1,600 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 12,000 கோடி) அளவிற்கு கூடுதல் முதலீடு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- BM-SEAL-11 திட்டத்தின் மூலமான உற்பத்தி 2026-27 ஆம் நிதியாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை இது வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
- பிரேசிலிலிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய்யை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதி செய்ய முடியும். இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவு இதன் மூலம் மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு சேவைகளை விரிவுபடுத்துதல், உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றில் பிஎஸ்என்எல் முக்கிய பங்கு வகிக்கிறது.
- பிஎஸ்என்எல்-ஐ நிதி ரீதியாக லாபகரமாக மாற்ற, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பிஎஸ்என்எல்-ன் ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பிலான மறுசீரமைப்புத் தொகுப்பு ஒப்புதல் அளித்தது
- பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்துவதற்கு புதிய மூலதனம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அதன் இருப்புநிலைக் குறைப்பு மற்றும் பாரத் பிராட்பேண்ட் நிகாம் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைப்பதன் மூலம் பைபர் நெட்வொர்க்கை அதிகரித்தல் ஆகிய மறுசீரமைப்புகள் மூலம் பிஎஸ்என்எல் சேவைகள் மேம்படும்.
- 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்க முடியும். மேலும் 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்பட உள்ளது.
- கடந்த ஆண்டு 5 மாநிலங்களில் உள்ள 44 முன்னோடி மாவட்டங்களில் 7,287 கிராமங்களில் 4ஜி மொபைல் சேவை வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
- இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- ஃபிஃபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2022 இந்தியாவில் அக்டோபர் மாதம் 11-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டி நடத்துவதற்காக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது.
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஏழாவது 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கால்பந்துப் போட்டி பிரபலமடைவதுடன் இளைஞர்களும் இவ்விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
- தேசிய ஊரக மேம்பாட்டுக்கழகம், பஞ்சாயத்துராஜ் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ரீடிங் பல்கலைக்கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வேளாண்மை, ஊட்டச்சத்து மற்றும் ஊரக மேம்பாட்டு சர்வதேச அளவிலான தொழில் முறை கட்டமைப்பின் பயன் தேசிய ஊரக மேம்பாட்டுக்கழகம், பஞ்சாயத்துராஜ் அமைப்பிற்கு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
- ஊட்டச்சத்தை அதிகரித்தல் போன்ற ஊரக மேம்பாட்டுத் துறைகளில் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ரீடிங் பல்கலைக்கழகத்துடன் தேசிய ஊரக மேம்பாட்டுக்கழகம், பஞ்சாயத்துராஜ் இணைந்து செயல்பட முடியும்.