Type Here to Get Search Results !

TNPSC 21st JULY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தகவல் தொழில் நுட்பவியல் துறை பெயர் மாற்றம் - அரசாணை வெளியீடு

  • மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் மற்றும் மின் ஆளுகையின் வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கத்துடனும் தகவல் தொழில்நுட்பவியல் துறை கடந்த 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி உருவாக்கப்பட்டது. 
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பசேவைத் துறைகளின் வளர்ச்சியானது ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். எனவே, ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு முன்முயற்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த கொள்கைவழி அணுகுமுறை தேவைப்படுகிறது.
  • முதல் கட்டமாக, வளர்ந்துவரும் தொழில்நுட்பப் பிரிவுக்கு தலைமை தாங்கும் வகையில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி தகவல் தொழில்நுட்பவியல் துறையில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது. 
  • வளர்ந்துவரும் மற்றும் ஆழ்நிலைத் தொழில்நுட்பங்களில் தொடக்கநிலை நிறுவனங்கள் மூலம், புதுமைகளை உருவாக்குவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT Hub) ஒன்று சென்னையில் அரசால் நிறுவப்பட்டு வருகிறது.
  • எனவே, மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பச் சேவைகளின் வளர்ச்சியை வலுப்படுத்த இத்துறை, "தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை" என மறுபெயரிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

15வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் - பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு அபார வெற்றி

  • தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
  • பாஜக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்பாளர் களாக அறிவிக்கப்பட்டனர்.
  • கடந்த 18-ம் தேதி நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில் 771 எம்.பி.க்களும், 4,025 எம்எல்ஏ.க்களும் வாக்களித்தனர். ஒட்டுமொத்தமாக 99 சதவீத வாக்குகள் பதிவாகின.
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் டெல்லியில் நேற்று எண்ணப்பட்டன. முதல் சுற்றில் எம்.பி.க்களின் வாக்குகளும், தொடர்ந்து எம்எல்ஏ.க்கள் வாக்குகளும் எண்ணப்பட்டன. இறுதியில், திரவுபதி முர்முவுக்கு ஒட்டுமொத்தமாக 2,824 வாக்குகள் கிடைத்தன. 
  • இதன்படி அவருக்கு 6,76,803 வாக்கு மதிப்பு கிடைத்தது. முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 1,877 வாக்குகள் கிடைத்தன. இதன்படி அவருக்கு 3,80,177 வாக்கு மதிப்பு கிடைத்தது. சின்ஹா 36 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
  • திரவுபதி முர்மு நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர், 2-வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வரும் 25ம் தேதி அவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கிறார்.

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜிநாமா

  • இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார். தற்போது, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர்.
  • இதன் காரணமாக, பெருன்பான்மை இல்லாததால் இன்று மரியோ டிராகி அதிபர் செர்ஜியோ மாட்ரெல்லா முன்னிலையில் தன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

துப்பாக்கி சுடுதல் - இந்தியாவுக்கு முதலிடம்

  • முன்னதாக இந்தியா 14 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 
  • அந்த இறுதிச்சுற்றில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா/விஜய்வீா் சித்து/சமீா் கூட்டணி 15-17 என்ற புள்ளிகள் கணக்கில் செக் குடியரசின் மாா்டின் போத்ராஸ்கி/தாமஸ் டெஹான்/மடெஜ் ராம்புலா அடங்கிய அணியிடம் வெற்றியை இழந்தது.
  • இதில் 5 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் அடக்கம். தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 15 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel