Type Here to Get Search Results !

TNPSC 20th JULY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இலங்கையின் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க முறைப்படி அதிபராக தேர்வு

  • புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த டலஸ் அழகப்பெருமாள் ஆகியோர் போட்டியிட்டதால் மும்முனைப் போட்டி நிலவியது.
  • இந்நிலையில் இன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் முதல் முறையாக அந்நாட்டு சபாநாயகரும் வாக்களித்தார். இதனையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவைப் பெற்று ரணில் விக்ரமசிங்க அதிபராக வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்க அதிபரானார். இவர் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அதிபர் பதவியில் இருப்பார். 
  • டலஸ் அழகப்பெருமாவுக்கு 82 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அனுரா திசநாயக 3 வாக்குகள் மட்டுமே பெற்றார். 223 எம்பிக்கள் அளித்த வாக்குகளில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
  • இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க முறைப்படி அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் 6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க 8-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்க பல்கலையுடன் சி.எம்.டி.ஏ., ஒப்பந்தம்

  • சென்னை பெருநகரில் நகர்ப்புற திட்டமிடலை மேம்படுத்த, அமெரிக்காவின் 'கார்னெல்' பல்கலையுடன் சி.எம்.டி.ஏ., ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.சென்னை பெருநகர் பகுதியில் நகர்ப்புற வளர்ச்சியை நெறிப்படுத்த சி.எம்.டி.ஏ., ஏற்படுத்தப்பட்டது.
  • இதே போன்று, போக்குவரத்து மேம்பாட்டு கொள்கை வகுக்கும் நிறுவனமான ஐ.டி.டி.பி.,யுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ள சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்த குழும கூட்டத்தில் இந்த முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
உளவுத் துறை புதிய ஐஜியாக செந்தில் வேலன் நியமனம், ஆசியம்மாள் பணியிட மாற்றம்
  • தமிழகஉளவுத் துறையின் புதிய ஐஜி-யாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத் துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அமலாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உளவுத் துறையின் புதிய ஐஜி-யாக, காத்திப்போர் பட்டியலில் இருந்த செந்தில் வேலனை நியமித்து தமிழக உள்துறைச் செயலர் பனீந்தர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
  • திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம்.
  • மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.-யாக மகேஸ்வரன் நியமனம்.
  • சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான் நியமனம்.
  • சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்.
  • காவல்துறை நவீன மயமாக்கல் பிரிவு ஐஜி-யாக கண்ணன் நியமனம்.
  • ஏஎஸ்பிகளாக இருந்த சமய் சிங் மீனா, கிரண் ஸ்ருதி, தீபக் சிவாச், ஹர்ஷ் சிங், சாய் பிரணீத் ஆகியோர் எஸ்.பி.-க்களாக பதவி உயர்வு.
அமெரிக்காவில் தன்பாலின திருமண பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்
  • அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெரும் விவாதத்தையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தன்பாலின திருமண அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற அச்சம் நிலவியது.
  • இதனைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் இந்த மசோதா பெற்றது. மசோதா நிறைவேற்றத்தின்போது அனைத்து உறுப்பினர்களும் மசோதாவை வரவேற்றனர். 
  • பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை வலுவாக இருப்பதால் இங்கு இம்மசோதா வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
நம் குடியிருப்பு நம் பொறுப்பு புதிய செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சர் தா.மோ.அன்பரசன்
  • நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான புதிய செயலியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னையில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
  • தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தங்களது தவணைகளை எளிய முறையில் செலுத்திட வேண்டும் என்பதற்காக நம்ம குடியிருப்பு என்ற புதிய செயலி இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • இந்த செயலியை குடியிருப்புதாரர்கள் தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மாத தவணைத் தொகை, நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான பராமரிப்பு தொகை, நிலுவைத் தொகை, போன்றவற்றை செலுத்தலாம்.
  • www.tnuhdb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை QR code மூலமாகவும் செலுத்தலாம். நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 417 குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டு 206 குடியிருப்போர் நலச்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
  • குடியிருப்போர் நலச்சங்கம் பத்திரப்பதிவு துறையில் பதிவிற்கான கட்டணத்தை அரசால் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு திருப்பி வழங்கப்படுகிறது.
வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிர் பயன்படுத்துதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா- நமீபியா கையெழுத்து
  • சிறுத்தையை இந்தியாவில் வரலாற்று ரீதியாக நிலைநிறுத்துவதற்காக வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிர் பயன்படுத்துதல் பற்றிய ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய அரசும், நமீபியா குடியரசு அரசும் இன்று கையெழுத்திட்டன. 
  • இந்தியா மற்றும் நமீபியா நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டும், பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிர் பயன்படுத்துதலை ஊக்குவிப்பதற்கும், இரு நாடுகளும் பயனடையும் வகையிலான வளர்ச்சியை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தும்.
  • புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
  • சிறுத்தைகள் எந்த பகுதிகளில் முன்னர் அழிந்ததோ, அதே இடங்களில் அவற்றை மீண்டும் கொண்டு வருவது மற்றும் உயிரி பல்லுயிரின் பாதுகாப்பு.
  • இரு நாடுகளிலும் சிறுத்தையின் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக நிபுணத்துவங்களை பகிர்வது மற்றும் பரிமாறிக் கொள்வது.
  • தொழில்நுட்ப செயல்பாடுகள், வன உயிரின வாழ்விடங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகள் மற்றும் உயிரி பல்லுயிரின் நிலையான மேலாண்மை ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிரைப் பயன்படுத்துதல்.
  • பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் ஆளுகை, சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் மதிப்பீடுகள், மாசு மற்றும் கழிவு மேலாண்மை மற்றும் பரஸ்பர விருப்பமுள்ள இதர துறைகளில் ஒருங்கிணைப்பு.
  • தேவையேற்படும் விஷயங்களில் நிபுணத்துவத்தை பகிர்வது உள்ளிட்ட வனஉயிரின மேலாண்மையில் பயிற்சி மற்றும் கல்விக்காக வல்லுநர்களைப் பரிமாறிக் கொள்வது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குடும்ப அட்டைகளின் டிஜிட்டல்மயமாக்கம் நிறைவடைந்துள்ளது
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குடும்ப அட்டைகளின் டிஜிட்டல்மயமாக்கம் நிறைவடைந்துள்ளது. சுமார் 19.5 கோடி குடும்ப அட்டைகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன என்று மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். 
  • தமிழ்நாடு உட்பட 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண் பதிவு 100% நிறைவடைந்துள்ளது. 
  • எஞ்சிய குடும்ப அட்டைகளில் ஆதார் பதிவை 2022 செப்டம்பர் 30-க்குள் மேற்கொள்ள வேண்டுமென்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மாலத்தீவுகளின் நீதி சேவை ஆணையத்திற்கும், இந்தியாவுக்கும் இடையே நீதி ஒத்துழைப்பு துறையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாலத்தீவு குடியரசின் நீதி சேவை ஆணையத்திற்கும், இந்தியாவுக்கும் இடையே நீதி ஒத்துழைப்பு துறையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 
  • இது நீதி ஒத்துழைப்பு துறையில் இந்தியாவுக்கும், இதர நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான எட்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.
  • நீதிமன்ற டிஜிட்டல்மயத்திற்கு தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை கண்டறிவதற்கான தளத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கும். மேலும் இரு நாடுகளிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில்கள் வளர்ச்சிக்கான ஆற்றலையும் இது ஏற்படுத்தும்.
  • சமீப ஆண்டுகளில் இந்தியா – மாலத்தீவுகள் இடையே நெருக்கமான உறவு பல நிலைகளில் ஆழமாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பெறும். 
  • இது இரு நாடுகளுக்கு இடையே நீதித்துறை ஞானம் மற்றும் தொழில்நுட்பம், இதர சட்டத்துறைகளில் பரிமாற்றம் செய்து கொள்ள உதவுவதோடு மட்டுமின்றி “அண்டை நாடுகள் முதலில்” என்ற கொள்கையின் நோக்கங்களை அதிகரிக்கவும் செய்யும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel