சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் - சிந்து சாம்பியன்
- சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜி யி வாங்குடன் (22 வயது, 11வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 21-9 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
- 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஜி யி வாங் 21-11 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.
- அதில் பதற்றமின்றி விளையாடி தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சிங்கப்பூர் ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.
- நடப்பு சீசனில் அவர் வென்ற 3வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னதாக, ஜனவரியில் சையத் மோடி சர்வதேச ஓபன் போட்டியிலும், மார்ச்சில் நடந்த ஸ்விஸ் ஓபன் போட்டியிலும் அவர் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டிருந்தார்.
மேற்கு வங்க ஆளுநராக இல.கணேசன்
- குடியரசு துணைத் தலைவர் பதவியை மீண்டும் வெங்கையா நாயுடுவுக்கு வழங்கலாமா அல்லது முக்தார் அப்பாஸ் நக்விக்கு வழங்கலாமா என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வந்தது. இந்நிலையில் தான் மேற்கு வங்க ஆளுநரான ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
- இதனையடுத்து மேற்குவங்காள கவர்னர் பதவியை ஜெகதீப் தன்கர் இன்று ராஜினாமா செய்தார். இதுகுறித்த கடிதத்தை ஜெகதீப் தன்கர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
- இந்நிலையில் இந்நிலையில், மணிப்பூர் கவர்னரான இல.கணேசன் மேற்கு வங்காள கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிக்குழு மானிய நிதி - ரூ.1,128 கோடி ஒதுக்கியது தமிழக அரசு
- கிராமம், ஒன்றியம், மாவட்டம் உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம், மின்கட்டணம், பராமரிப்பு, ஊதியம் உட்பட அனைத்து வகை செலவினங்கள் ஆகியவை மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி, உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரம் ஆகியவற்றை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- அந்த வகையில் மாநில அரசின் 5 ஆவது மாநில நிதிக்குழு மானிய நிதியாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- அதன்படி, 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கு 5 ஆவது மாநில நிதிக்குழு மானிய நிதியாக மொத்தம் ரூ.5 ஆயிரத்து 80 கோடியே 87 லட்சத்து 45 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இதில் முதல் தவணையாக கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையில் மூன்று மாதங்களுக்கு மாவட்ட ஊராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் ரூ.871 கோடியே 6 லட்சத்து 928 ஒதுக்கப்பட்டுள்ளது.
- 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 369 கோடியே 58 லட்சத்து 36 ஆயிரத்து 286 ரூபாயும், குறைந்தபட்ச ஒதுக்கீடாக 349 கோடியே 2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அதேபோல் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 410 கோடியே 94 லட்சத்து 23 ஆயிரத்து 571 ரூபாயும், குறைந்தபட்ச ஒதக்கீடாக 225 கோடியே 45 லட்சம் ரூபாயும் என மொத்தம் ஆயிரத்து 127 கோடியே 99 லட்சத்து 66 ஆயிரத்து 785 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.