பாராசின் ஓபன் செஸ் - பிரக்ஞானந்தா சாம்பியன்
- செர்பியாவில், பாராசின் ஓபன் செஸ் தொடர் நடைபெற்றது. மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இநதத் தொடரில் 7 வெற்றி, 2 'டிரா' உட்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, சாம்பியன் ஆனார்.
- ரஷ்யாவின் அலெக்சாண்டர் பிரெட்கே, 7.5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தார். கஜகஸ்தானின் அலிஷர் சுலேமெனோவ், இந்தியாவின் முத்தையா தலா 7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.
- பின்னர், 'டை பிரேக்கர் ஸ்கோர்' அடிப்படையில் கஜகஸ்தான் வீரர் 3வது இடத்தை வென்றார். முத்தையாவுக்கு 4வது இடம் கிடைத்தது.
- முன்னதாக, சக இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர் யோர்டானோவ் (பல்கேரியா), காசிபெக் நோகர்பெக் (கஜகஸ்தான்), சகநாட்டவரான கௌஸ்டாவ் சாட்டர்ஜி, அரிஸ்டன்பெக் உராசயேவ் (கஜகஸ்தான்) ஆகியோரையும் இந்தத் தொடரில் பிரக்ஞானந்தா வென்றார்.
- ஓரகனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 3000 மீட்டர் தடையோட்டம் தகுதி சுற்றில் இந்திய வீரர் அவினாஷ் சப்லே, பந்தய தூரத்தை 8 நிமிடம் 18:75 நொடிகளில் கடந்து மூன்றாம் இடம் பிடித்ததை அடுத்து, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
- ஜெர்மனி நாட்டின் முனிச்சில் நடைபெற்று வரும் மாற்று திறனாளிகளுக்கான உலக கோப்பை போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
- p 3 25 மீட்டர் பிஸ்டல் sh 1 பிரிவில் ராகுல் ஜகர் தங்கமும், சிங்ராஜ் ஆதனா வெள்ளியும், குழுவினருக்கான பிரிவில் ராகுல், சிங்ராஜ், நிஹால் சிங் உள்ளிட்டோர் P3 25 மீட்டர் பிஸ்டல் sh 1 பிரிவில் தங்கமும் வென்று அசத்தியுள்ளனர்.
- கேரளாவின் முரளி ஶ்ரீஷங்கர் நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் முரளி ஶ்ரீஷங்கர்.
உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் - தங்கம் வென்றார் தோமர்
- தென் கொரியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில், 50 மீட்டர் ரைபிள் பிரிவு பைனலில் ஹங்கேரியின் ஸலன் பெக்லருடன் மோதிய நடப்பு ஜூனியர் உலக சாம்பியனான தோமர் (21 வயது, மத்தியபிரதேசம்) 16-12 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.
- முன்னதாக நடந்த தகுதிச் சுற்றிலும் அபாரமாக செயல்பட்ட அவர் 593 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
உபி 296 கிமீ விரைவு சாலை திறந்து வைத்தார் மோடி
- உத்தர பிரதேச மாநிலம், சித்ரகூட் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண். 35ல் இருந்து எட்டாவா மாவட்டம் குத்ரைல் கிராமம் வரை செல்லும் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையுடன் இணைக்கும் வகையில், பண்டேல்கண்ட் விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2020ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், ரூ.14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சாலைப்பணி 28 மாதங்களில் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதை மோடி திறந்த வைத்தார்.