Type Here to Get Search Results !

ஐ2யு2 கூட்டமைப்பின் முதல் மாநாடு / FIRST I2U2 SUMMIT

 

TAMIL
 • அக்டோபரில் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து ஐ2யு2 என்ற கூட்டமைப்பை உருவாக்கின. இதன் முதல் மாநாடு நடைபெற்றது. இதில் 4 நாடுகளின் தலைவர்களும் காணொலி வாயிலாக பங்கேற்றனர். 
 • இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மேற்காசிய நாடுகளான இஸ்ரேலின் பிரதமர் யாசிப் லாபிட், யு.ஏ.இ., அதிபர் முகமது பின் ஜையது அல் நஹ்யான் பங்கேற்றனர்.
 • இக்கூட்டத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் மாசில்லா எரிசக்தி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த உணவு பூங்காக்கள் அமைக்க யு.ஏ.இ., முன் வந்துள்ளது. 
 • மேலும், குஜராத்தில், 300 மெகாவாட் திறனுள்ள பல்முனை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளதாக அந்நாடு அறிவித்தது.
 • உணவு பூங்காக்கள் திட்டத்தின்படி, உணவு உற்பத்தியின் இழப்புகளை குறைப்பது, உற்பத்தியை அதிகரிப்பது, நீர்பாசன மேலாண்மை உள்ளிட்டவற்றில் புதிய தொழில்நுட்ப உதவிகள் செய்யப்படும். 
 • அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இத்துறைக்கு தேவையான நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளன. குஜராத்தில், 300 மெகாவாட் திறனுள்ள ஒருங்கிணைந்த காற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
 • ''முதல் கூட்டத்திலேயே மிகவும் ஆக்கப்பூர்வமான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது வரவேற்கக் கூடியது. இதன் வாயிலாக மாசில்லா எரிசக்தி, உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
 • 'இந்த புதிய கூட்டமைப்பு, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்' என, கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் உரை 
 • ஐ2யு2 கூட்டமைப்பில் ஒத்த கருத்துடைய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. நீர்வளம், எரிசக்தி, போக்குவரத்து, சுகாதாரம், விண்வெளி, உணவு பாதுகாப்பில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 • இதன்படி உலகின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதிலும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதிலும் ஐ2யு2 நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும்.
 • உலக பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் புதிய கூட்டமைப்பு சர்வதேச பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முன்மாதிரியாக செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.
200 கோடி டாலர் முதலீடு
 • மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், 'இந்தியாவின் உணவு பூங்கா திட்டங்களில் ஐக்கியஅரபு அமீரகம் 200 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்யும். இதற்கு தேவையான நிலங்களை இந்தியா வழங்கும். 
 • வேளாண் தொழில்நுட்பங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் வழங்கும். இதன் மூலம் உணவு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகளின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.
ENGLISH
 • In October, India, Israel, the United Arab Emirates and the United States joined forces to form the I2U2 consortium. The first conference was held. The leaders of 4 countries also participated through video.
 • In this, Prime Minister Narendra Modi, US President Joe Biden, West Asian countries, Israel's Prime Minister Yassif Labit, UAE President Mohammed bin Zayed Al Nahyan participated. In this meeting, food security and Masilla Energy were discussed. UAE has come forward to set up integrated food parks at various locations in India.
 • Also, in Gujarat, the country announced that it is ready to implement a 300 MW multi-purpose renewable energy project. Under the Food Parks programme, new technical assistance will be provided to reduce food production losses, increase productivity, and manage irrigation.
 • The US and Israel have said they will share expertise in the sector. In Gujarat, 300 MW of combined wind and solar power projects are to be implemented.
 • "A very constructive decision has been taken in the very first meeting which is welcome. This will lead to sustainable energy, food security and economic growth," said Prime Minister Narendra Modi.
 • "This new alliance will have a major impact on the South Asia and Middle East region," the joint statement said.
Speech by Prime Minister Narendra Modi
 • Like-minded countries are members of the I2U2 consortium. It has been decided to work together in water resources, energy, transport, health, space and food security.
 • Accordingly, I2U2 countries will work together to ensure world food security and meet energy needs. There are imbalances in the global economy. At this time the new federation would act as a model in developing the international economy. Thus he spoke.
200 crore investment
 • In a joint statement released at the conference, the UAE will invest USD 200 million in India's food park projects. India will provide necessary land for this. US and Israel will provide agricultural technologies. This will increase food production and ensure food security in South Asia and the Middle East.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel