Type Here to Get Search Results !

சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய தொழில் நிறுவன செயல்பாடுகள் 2021 தரவரிசைப் பட்டியல் / Environmentally Friendly New Business Enterprise Activities 2021 Ranking List

 

TAMIL
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் 2021 தரவரிசைப் பட்டியல் 3-ம் பதிப்பின் முடிவுகளை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் புதுதில்லியில் வெளியிட்டார். 
  • தரவரிசைக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், சிறந்த செயல்திறன், முன்னணி செயல்திறன், தலைமை வகிக்கும் மாநிலங்கள், ஆர்வமுள்ள மாநிலங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பு மாநிலங்கள் என 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் குஜராத், கர்நாடகா மற்றும் வடகிழக்கு மாநிலமான மேகாலயா உள்ளன. 
  • கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, மற்றும் தெலங்கானா மாநிலங்கள், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் ஆகியன உயர்ந்த செயல்திறன் பட்டியலில் உள்ளன.
  • அஸ்ஸாம், பஞ்சாப், தமிழ்நாடு, உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம், அந்தமான், நிகோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகியவை தலைமை வகிக்கும் மாநிலங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 
  • யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்களில் சண்டிகர், தாத்ரா, நாகர் ஹைவேலி, டாமன் டையூ, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, புதுச்சேரி மற்றும் திரிபுரா ஆகியவை ஆர்வமுள்ள மாநிலங்களின் பட்டியலில் உள்ளன. 
  • ஆந்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்களும், மிசோராம், லடாக் ஆகியவை வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றன.
ENGLISH
  • The results of the 3rd edition of the 2021 Ranking List of Eco-Friendly New Business Enterprises were announced by the Minister of Commerce and Industry, Consumer Affairs, Food and Public Distribution and Textiles, Mr. Published by Piyush Goyal in New Delhi.
  • States and Union Territories are divided into 5 categories for ranking, Best Performers, Leading Performers, Leading States, Interested States and Emerging Startup Ecosystem States.
  • The list of best performing states includes Gujarat, Karnataka and the northeastern state of Meghalaya. The states of Kerala, Maharashtra, Odisha, and Telangana, along with the Union Territory of Jammu and Kashmir, are among the top performers.
  • Assam, Punjab, Tamil Nadu, Uttarakhand and Uttar Pradesh, Andaman and Nicobar Islands, Arunachal Pradesh and Goa are in the list of presiding states.
  • Among Union Territories, North Eastern states Chandigarh, Dadra, Nagar High Valley, Daman Diu, Himachal Pradesh, Manipur, Nagaland, Puducherry and Tripura are on the list of interested states.
  • The states of Andhra Pradesh, Bihar, Mizoram and Ladakh were included in the list of emerging ecosystems.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel