ஆசியாவில் முதன்முதலாக கஞ்சாவுக்கு சட்ட அனுமதி அளித்துள்ள தாய்லாந்து நாடு
- கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் தாய்லாந்து அரசு சட்ட அனுமதி வழங்கியுள்ளது. அந்நாட்டில் இதற்கு தீவிர தேவை எழுந்துள்ள நிலையில், வேளாண்மை மற்றும் சுற்றுலாவை வளர்க்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தாய்லாந்து அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது .
- முன்னதாக மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை பயன்படுத்த தாய்லாந்து 2018 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இனி கடைகளில் குளிர்பானங்கள், இனிப்புகள் மற்ற இதர பொருள்களில் கஞ்சாவை கலந்து விற்கவும் தாய்லாந்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
- அதேவேளை , பொதுவெளியில் கஞ்சா புகைக்க அந்நாட்டு அரசு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. பொதுவெளியில் கொண்டாட்டத்திற்காக பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டால் மூன்று மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது .
ஐஎம்எஃப் ஆசிய பசிபிக் பிரிவு தலைவராக இந்திய பொருளாதார நிபுணா் நியமனம்
- சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) ஆசிய பசிபிக் பிரிவின் தலைவராக இந்தியாவைச் சோந்த பொருளாதார நிபுணா் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா். ஐஎம்எஃப் நிதி மேலாண்மைப் பிரிவு இயக்குநா் கிறிஸ்டலீனா ஜாா்ஜியேவா இதனை அறிவித்துள்ளாா்.
- நிதி நிா்வாகத் துறையில் 27 ஆண்டுகள் அனுபவமிக்க கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், ஐஎம்எஃப்பில் 1994-ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கினாா்.
- ஆசிய பிரிவு, ஐரோப்பிய பிரிவு, முதலீட்டுச் சந்தை, பொருளாதாரத் திட்டமிடல், ஆய்வுப் பிரிவுகளில் பணியாற்றியுள்ள அவா், இப்போது ஐஎம்எஃப் ஆசிய பசிபிக் பிரிவில் துணை இயக்குநராக உள்ளாா்.
வியட்நாமிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்பு படகுகள் வழங்கிய இந்தியா - ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார்
- வியட்நாம் நாட்டின் ஹாய் ஃபாங்கில் உள்ள ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திற்கு ஜூன்-9 சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வியட்நாம் நாட்டிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை வழங்கினார்.
- இந்திய அரசு, வியட்நாம் நாட்டிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தப் படகுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
- முதல் ஐந்து படகுகள் இந்தியாவின் லார்சன் & டியூப்ரோ கப்பல் கட்டும் தளத்திலும், மற்ற 7 படகுகள் ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திலும் உருவாக்கப்பட்டன.
முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி- புதிய சாதனை படைத்த மும்பை
- இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டத்தில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்று ரஞ்சிக் கோப்பை. 87-வது சீசனுக்கான ரஞ்சிக் கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் வாக்கில் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இப்போது நாக்-அவுட் சுற்று தொடங்கியுள்ளது.
- இதில் இரண்டாவது காலிறுதியில் மும்பை மற்றும் உத்தராகண்ட் அணிகள் விளையாடின. போட்டி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் ஆளூர் மைதானத்தில் நடைபெற்றது.
- இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. 647 மற்றும் 261 ரன்கள் இரண்டு இன்னிங்ஸில் குவித்தது அந்த அணி. உத்தராகண்ட் 114 மற்றும் 69 ரன்களை மட்டுமே இரண்டு இன்னிங்ஸிலும் எடுத்தது. அதனால் 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை. இந்த வெற்றியின் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
- இதற்கு முன்னர் முதல்தர கிரிக்கெட்டில் 685 ரன்கள் வித்தியாசத்தில் நியூ சவுத் வேல்ஸ் அணி பெற்றிருந்த வெற்றியே அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக இருந்தது. கடந்த 1930 வாக்கில் குயின்ஸ்லாந்து அணிக்கு எதிராக இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டது. இப்போது அதை மும்பை அணி தகர்த்துள்ளது.
உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமனம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் உதவியாளர்களாக தபேதார்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். சிகப்பு தலைப்பாகை, கையில் செங்கோல் வெள்ளை உடை அணிந்து இவர்கள் நீதிமன்றங்களில் பணியாற்றுவார்கள்.
- இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் தபேதாரராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள மஞ்சுளாவுக்கு உதவியாக திலானி என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய யுகே டுகெதர் நிகழ்ச்சியின் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
- பிரிட்டிஷ் தூதரகம் நடத்தும் இந்திய யுகே டுகெதர் என்ற கலாச்சார நிகழ்ச்சியின் (India UK Together Season of Culture) தூதராக இசையமைப்பாளரும் ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கலாச்சார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பிரிட்டிஷ் தூதரகம்.
12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் பாரத்நெட் திட்டம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2022) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் ரூ.1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் வாயிலாக (TANFINET) கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், முத்தலகுறிச்சி கிராமப் பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினைத் தொடங்கி வைத்தார்.
100 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை Lipstick தாவரம்
- Aeschynanthus monetaria Dunn என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த தாவரம் லிப்ஸ்டிக் செடி என பொதுவாக அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு லிப்ஸ்டிக் போலவே ஒல்லியாகவும் சிவப்பு நிற பூக்கள் மற்றும் தண்டுகளை இந்த செடி கொண்டுள்ளது.
- 1912ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த ஐசக் ஹென்ரி புர்கில் என்ற தாவரவியல் அறிஞர் முதல் முதலாக இதே அருணாசலப் பிரதேசத்தில் இந்த தாவரத்தை கண்டுபிடித்தார்.
- அதன் பின்னர் இந்த செடியை கண்டறிய தாவரவியலாளர்கள் பல ஆண்டுகளாக பிரயத்தனம் செய்து வந்தனர். இந்நிலையில், இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் இந்த தாவரத்தை நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலேயே கண்டறிந்துள்ளது.
- அம்மாநிலத்தின் அஞ்சா என்ற கிராமத்தில் இந்த தாவரம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
- இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த கிருஷ்ணா சோவ்லு என்பவரின் குழு இந்த லிப்ஸ்டிக் தாவரத்தை கடந்தாண்டு டிசம்பர் மாதம் மீண்டும் கண்டறிந்து இது தொடர்பாக ஆய்வு கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளது.
- அதில் குறிப்பிடுகையில், Aeschynanthus என்ற தாவரக் குழுவைச் சேர்ந்தது இந்த லிப்ஸ்டிக் தாவரம். இந்த குழுவில் 174 ரக தாவரங்கள் ஆசியாவில் உள்ளன. குறிப்பாக தெற்கு சீனா, மற்றும் இந்தியாவில் இது போன்ற தாவர ரகங்கள் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 26 ரக தாவரங்கள் உள்ளது.
- இந்த அரிய வகை லிப்ஸ்டிக் தாவரம் இதுவரை இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சீனாவின் திபெத் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
- இந்தியாவின் மிக வளமான பல்லுயிர் தன்மை கொண்ட மாநிலங்களில் அருணாச்சலப் பிரதேசம் ஒன்று. இங்கு மிகத் தீவிரமான ஆய்வுகளை நிபுணர்கள் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கிருஷ்ணா சோவ்லு.
உயிரி தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சி 2022ஐ பிரதமர் தொடங்கிவைத்தார்
- பிரதமர் திரு நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில் இன்று உயிரி தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சி-2022-ஐ தொடங்கிவைத்தார். அவர் உயிரி தொழில்நுட்ப தயாரிப்பு இ-தளத்தையும் தொடங்கிவைத்தார்.
- மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் ஜிதேந்திர சிங், உயிரி தொழில்நுட்ப துறைகளுடன் தொடர்புடையவர்கள், வல்லுனர்கள், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் விவசாயத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட 12-வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் சீனா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளின் விவசாயத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திருமதி.ஷோபா கரந்த்லாஜே கலந்து கொண்டார்.
- அப்போது, விவசாயத்துறை மேம்பாடு, விவசாயிகளின் நலனுக்காக இந்திய அரசு மேற்கொண்டுள்ள பிஎம் கிசான், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், பீமா யோஜனா உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை சுட்டிக்காட்டினார்.
- வேளாண்மைத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை அதிகரிக்க வேளாண் அமைச்சகம் அண்மையில் மேற்கொண்ட முயற்சிகளை அமைச்சர் குறிப்பிட்டார்.
- நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதன் மூலம் பட்டினியை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் இயற்கை வளங்களை பயன்படுத்தி விவசாய உற்பத்தியையும். உற்பத்தித் திறனையும் அதிகரிப்பது ஆகியவற்றில் இந்தியா உறுதியாக உள்ளதாக அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்தார்.
- சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ஐ பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட அனைவரும் ஆதரிக்கவும், கொண்டாடவும் அமைச்சர் அழைப்பு விடுத்தார்.