Type Here to Get Search Results !

TNPSC 4th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கலப்பு அணிகளுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

  • அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் கலப்பு அணிகளுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே, ஆஷி சவுக்சி ஜோடி 16-12 என்ற கணக்கில் உக்ரைனின் செர்ஹி குலிஷ், தரியா டைகோவா ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்தத் தொடரில் இந்தியா கைப்பற்றிய 2-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.
  • மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றிருந்தது. நேற்றுடன் நிறைவடைந்த இந்தத் தொடரில் பதக்கப் பட்டியலில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளியுடன் 2-வது இடம் பிடித்தது. கொரியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் முதலிடம் பிடித்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட ஆட்சியர், பள்ளிகளுக்கு பசுமை விருது - முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பான பங்களிப்பு வழங்கியமைக்காக மாவட்ட ஆட்சியர்கள் டாக்டர் எஸ்.அனீஷ் சேகர் (மதுரை), த.மோகன் (விழுப்புரம்), பா.முருகேஷ் (திருவண்ணாமலை) ஆகியோருக்கு 2021-ம் ஆண்டுக்கான பசுமை விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.
  • மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயலாற்றி, விருதுக்குத் தேர்வான 79 அமைப்புகளில், ராணிப்பேட்டை டேனரி எஃப்ளுயன்ட் ட்ரீட்மென்ட் நிறுவனம், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள `க்ளீன் குன்னூர்' அமைப்பு, போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு 2021-ம் ஆண்டுக்கான பசுமை முதன்மையாளர் விருதுடன், ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வர் வழங்கினார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக் சாம்பியன்

  • பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப்புடன் (18 வயது, 23வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (21 வயது) 6-1, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தினார். 
  • ஏற்கனவே 2020ல் பிரெஞ்ச் ஓபன் கோப்பையை கைப்பற்றி இருந்த அவர், நேற்று 2வது முறையாக பட்டம் வென்று அசத்தினார். இது அவர் வெல்லும் 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். நடப்பு சீசனில் இகா தொடர்ச்சியாக 6 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளதுடன், 35 போட்டிகளில் தோற்காமல் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.

25 ஏக்கரில் ரூ.10 கோடி செலவில் உருவான 'என் ஊரு' - கேரளாவின் முதல் பழங்குடி பாரம்பரிய கிராமம் திறப்பு

  • கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள பூக்கோடு மலைச்சரிவில், 25 ஏக்கர் பரப்பளவில் 'என் ஊரு' என்ற முதல் பழங்குடியின பாரம்பரிய கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • 'என் ஊரு' அறக்கட்டளையின் தலைவரும் வயநாடு துணை ஆட்சியருமான ஸ்ரீ லக்ஷ்மி கூறும்போது, "விரிவான பழங்குடி சமூக மக்களின் மேம்பாட்டு திட்டம், பழங்குடிசமூக மக்களின் பாரம்பரிய அறிவு, பாரம்பரியம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வர ஒரு தளம் அமைத்துக் கொடுப்பது, பழங்குடி சமூக மக்களின் வாழ்வாதார விருப்பங்களை நிறைவேற்றுவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
  • சுற்றுலாத் துறை மற்றும் பழங்குடிகள் வளர்ச்சித் துறையிம் இணைந்து ரூ.10 கோடி செலவில் இந்தத் திட்டத்தினை செயல்படுத்துகின்றன. கடந்த 2012ம் ஆண்டு அப்போதைய வயநாடு துணை ஆட்சியர் ரூ.3 கோடி செலவில் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். 
  • முதல்கட்ட பணிகளின் கீழ், பழங்குடியினர் சந்தை, பழங்குடியினர் உணவு விற்பனை நிலையம், வசதிகள் மையம், கிடங்கு ஆகியவை 2020-ம் ஆண்டு திட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel