Type Here to Get Search Results !

TNPSC 25th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உலகக் கோப்பை வில்வித்தையில் ஜோதி, அபிஷேக் ஜோடிக்கு தங்கம்

  • உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3 தொடர் பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி பிரான்ஸின் ஜீன் போல்ச், சோஃபி டோடெமன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 
  • இதில் அபிஷேக், ஜோதி ஜோடி 152-149 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. உலகக் கோப்பை தொடரில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

வங்கியில் கடன் வாங்கிய நிறுவனங்கள் - தமிழ்நாடு, டில்லி, மஹாராஷ்டிரா முன்னிலை

  • கடன் தகவல் நிறுவனமான 'சி.ஆர்.ஐ.எப்., ஹை மார்க்' தரவுகளின் படி, இந்த மூன்று மாநிலங்களிலிருந்து தான் நிறுவனங்கள் அதிகளவில் கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
  • மொத்த கடனில் 64 சதவீதம், இந்த மூன்று மாநிலங்களிலிருந்தே பெறப்பட்டுள்ளது. அரசாங்கம், கொரோனா பாதிப்புகளிலிருந்து மீட்சி பெற்று, பொருளாதார வளர்ச்சி அடைய, இத்தகைய நிறுவனங்களுக்கு கடன் வசதியை சுலபமாக்கி அறிவித்திருந்தது.
  • தரவுகளின்படி மும்பை, மும்பை புறநகர், சென்னை, கோல்கட்டா, பெங்களூரு ஆகிய ஐந்து மாவட்டங்களிருந்து, நிறுவனங்கள் அதிக அளவில் கடன் வசதியை பயன்படுத்தி உள்ளன. இந்த ஐந்து இடங்களிலிருந்து பெறப்பட்ட கடன், மொத்த கடனில் 56 சதவீதம் ஆகும்.
  • கடன் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, பெங்களூரு, மும்பை, புனே, அகமதாபாத், லக்னோ ஆகிய மாவட்டங்கள் முன்னணி வகிக்கின்றன. 
  • கடனை திருப்பி பெறுவதை பொறுத்தவரை குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் ஆகியவை இடர்மிகுந்தவையாக உள்ளன என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
  • ஒட்டுமொத்த கடன் வினியோகம், கடந்த நிதியாண்டில், அதற்கு முந்தைய நிதியாண்டை விட 5 சதவீதம் அதிகரித்து, 37.29 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. மேலும், சராசரி கடன் கடந்த நிதியாண்டில் 72.4 லட்சம் ரூபாயாக உள்ளது.
  • குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் மதிப்பில் 70 சதவீதம், தனியார் வங்கிகளால் வழங்கப்பட்டு உள்ளன என்பதும் தரவுகளால் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கல்லூரி கனவு திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

  • 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரி கனவு' நிகழ்ச்சியை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
  • நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு எம்ஜிஆர் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குனரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ெஹச்.சி.எல். நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வசூலிப்பு 2026 மார்ச் வரை நீட்டிப்பு

  • ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வசூலிப்பு வரும் 30ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், கடந்த 2 நிதியாண்டுகளாக கொரோனா காலத்தில் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறை, வாங்கிய கடனை செலுத்துதல் ஆகியவை இருப்பதால், இழப்பீடு செஸ் வசூலிப்பை 2026ம் ஆண்டுவரை நீட்டித்து மத்திய நிதிஅமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்திற்கான ஒழுங்குமுறை
  • பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம் தொடர்பாக மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் 126இ என்ற  புதிய விதி ஒன்றை சேர்க்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 24 ஜூன் 2022 தேதியிட்ட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கீழ்காணும் அம்சங்கள் இந்த புதிய விதியில் சேர்க்கப்படவுள்ளன:-
  • உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட 3.5 டன்னுக்கும் குறைவான எடை கொண்ட எம்1 வகை மோட்டார் வாகனங்களை அங்கீகரிக்க இது பொருந்தும். இத்தகைய வாகனங்களின் தரம் சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு இணையானதாக இருக்கும்: குறைந்தபட்ச ஒழுங்குமுறை தேவைகளுக்கும் அப்பாற்பட்டதாக  இது இருக்கும்.
  • பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம், அந்த வாகனத்தை பயன்படுத்துவோருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களின் அளவை நுகர்வோருக்கு தெரிவிக்கும் (a) வயது வந்த பயணியருக்கான பாதுகாப்பு (AOP) (b) குழந்தை பயணியருக்கான பாதுகாப்பு (COP) மற்றும் (c)  பாதுகாப்பு ஒத்துழைப்பு தொழில்நுட்பங்கள் (SAT) ஆகிய பிரிவுகளில் இந்த பாதுகாப்பு வழங்கப்படும். இத்தகைய வாகனங்களுக்கு, வாகன தொழில்தரம் 197-ன் படி, மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிசோதனைகளில் வழங்கப்பட்ட தர மதிப்பெண் அடிப்படையில், ஒன்று முதல்  ஐந்து நட்சத்திரங்கள் வரை  நட்சத்திர குறியீடு அளிக்கப்படும்.
  • இந்த திட்டத்திற்கான வாகன பரிசோதனை, தேவையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட பரிசோதனை முகமைகளில் மேற்கொள்ளப்படும்.
  • நடைமுறைக்கு வரும் தேதி : 1 ஏப்ரல் 2023

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel