Type Here to Get Search Results !

TNPSC 24th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மாணவர்களுக்கு "ஊஞ்சல் இதழ்", ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர்" இதழ் - அரசாணை வெளியீடு

  • மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கவும் அவர்களின் உள்ளார்ந்த படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்படும். 
  • மேலும், ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்கவும் சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் கனவு ஆசிரியர் என்ற மாத இதழ் வெளியிடப்படும். 
  • சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதமிருமுறை தொடக்க வகுப்பு மாணவர்களுக்கும "ஊஞ்சல் இதழ்", உயர் வகுப்பு மாணவர்களுக்கு "தேன் சிட்டு" இதழ், ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர்" இதழை வெளியிட உத்தரவிட்டும், நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நிதி ஆயோக் தலைவராக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்

  • தற்போது நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக உள்ள அமிதாப் காந்த்தின் பதவிக் காலம் இம்மாதம் 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து அவரது பதவிக்கு பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 17 ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் உலக வங்கியின் குடிநீர் மற்றும் சுகாதார பிரிவில் பணியாற்றினார். 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழான துறையில் செயலராக பணியாற்றினார்.
  • குடிநீர் மற்றும் சுகாதாரம் சார்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அனுபவம் பெற்றவர். வியட்நாம், சீனா, எகிப்து, லெபனான் ஆகிய நாடுகளில் பணியாற்றியவர். 
விஎல் - எஸ்ஆர்எஸ்ஏஎம் ரக ஏவுகணை சோதனை வெற்றி

  • தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விஎல் - எஸ்ஆர்எஸ்ஏஎம் ரக ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.
  • ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் போர்க்கப்பலில் இருந்து நேற்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
  • இந்த வகை ஏவுகணை, வான்வெளி மற்றும் இதர போரக்கப்பல்களின் தாக்குதலிலிருந்து நமது கப்பலை பாதுகாக்கும் வல்லமை கொண்டதாகும்.

வாழ்வதற்குரிய சிறந்த நகரம் பட்டியல் 2022

  • ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த 'தி எக்கனாமிஸ்ட்' இதழ், உலகில் வாழ்வதற்குரிய சிறந்த சூழல் நிலவும் நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
  • அரசியல், சமூக ஸ்திரத்தன்மை, குற்றம், கல்வி, ஆரோக்கியம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில், 172 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
  • இதில், ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னா, முதலிடத்தை பிடித்துஉள்ளது. முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரம், 38ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில், ஐரோப்பாவின் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் இரண்டாவது இடத்தையும், சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரம் மூன்றாவது இடத்தையும், ஜெனீவா ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரம், 7வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், 9வது இடத்தைப் பிடித்துள்ளது. 
  • வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள கால்கரி, வான்கூவர், டொரன்டோ ஆகிய நகரங்கள் முறையே, 3, 5 மற்றும் 8வது இடத்தை பிடித்துள்ளன. 
  • 10வது இடத்தை தெற்காசிய நாடான ஜப்பானின் ஒசாகா நகரமும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரமும் பகிர்ந்து கொண்டுள்ளன. 
  • இந்தப் பட்டியலில், கடைசி இடத்தை மேற்காசிய நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் பிடித்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி, வங்கதேச தலைநகர் டாக்கா ஆகிய நகரங்களும், இறுதி வரிசையில் இடம் பெற்றுள்ளன.

கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்றம்

  • அமெரிக்காவில் கடந்த 1973ம் ஆண்டு நடைபெற்ற ரோ மற்றும் வேட் இடையிலான முக்கியமான வழக்கில் தீர்ப்பளித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை என்று கூறியது. அரசியல்சாசனம் பெண்களுக்கு அந்த உரிமையை வழங்கியிருப்பதாகவும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
  • இந்த தீர்ப்பு எதிரொலியாக அமெரிக்க மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற முடியாமல் இருந்தது. இந்நிலையில், 50 ஆண்டு கால ரோ vs வேட் வழக்கு தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
  • கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமையை பெண்களுக்கு அரசியல் சாசனம் வழங்கவில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், ரோ மற்றும் வேட் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக கூறியது. 
  • கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் உரிமை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 
  • இந்த தீர்ப்பையடுத்து கருக்கலைப்பை தடை செய்ய சட்டம் கொண்டு வரும் உரிமை அமெரிக்க மாகாண அரசுகளுக்கு கிடைத்துள்ளன. 
  • இந்த உரிமையை பயன்படுத்தி அமெரிக்காவின் 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை உடனடியாக இயற்றியுள்ளன. மேலும் பல மாகாணங்களும் இந்த சட்டத்தை இயற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது,

ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனைக் குழுவின் ஐந்தாவது கூட்டம்

  • புதுடெல்லி, விஞ்ஞான் பவனில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒன்றிய அமைச்சகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய ஆலோசனைக் குழு கூட்டம் மாண்புமிகு ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர் குமார் அவர்கள் தலைமையில், மாண்புமிகு இணை அமைச்சர் குமாரி பிரதிமா பூமிகா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். 
  • மேலும் இக்கூட்டத்தில் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் முனைவர் ஆனந்த குமார், இ.ஆ.ப., மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

''ஐபி''க்கு புதிய தலைவர் நியமனம்

  • ஐ.பி., எனப்படும் புலனாய்வு அமைப்பின் தலைவராக அரவிந்த் குமார் உள்ளார். இவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 30ம் தேதியுடன் முடிகிறது.
  • இந்நிலையில், ஐ.பி.,யில் சிறப்பு இயக்குநராக இருக்கும் தபன் குமார் தேகா நியமிக்கப்படுவதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவர் பதவியேற்ற நாளில் இருந்து இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 'ரா' வின் தலைவராக உள்ள 1984 ம் ஆண்டு பேட்ச் பஞ்சாப் கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான சமந்த் கோயலின் பதவிக்காலம் 2023 ஜூன் 30 வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
  • நிடி ஆயோக்கின் சிஇஓ நிடி ஆயோக் அமைப்பின் சி.இ.ஓ., ஆக இருந்த அமிதாப் காந்தின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அந்த பதவிக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பரமேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel