Type Here to Get Search Results !

TNPSC 22nd JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் 75 எல்லைப் பகுதிகளில் ‘ப்ரோ கஃபே’ எனும் சாலையோர வசதிகளை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது

  • எல்லைப்பகுதி சாலைகள் அமைப்பின் (ப்ரோ) மூலம் 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் 75 எல்லைப் பகுதிகளில் சாலையோர வசதிகளை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது தவிர, எல்லைப்பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிப்பதும், சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதி வாய்ப்புகளை வழங்குவதும் இவற்றின் நோக்கமாகும்.  சாலையோர வசதிகளுக்கான இவை ப்ரோ கஃபே என பெயரிடப்பட்டுள்ளன.
  • வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் ராணுவ தேவைகளை எதிர்கொள்வதற்கு அப்பால் தொலைதூர எல்லைப் பகுதிகளில் சாலை அமைப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  
  • இதனால், இயற்கை அழகு நிறைந்த பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.  கடினமான பருவநிலை மற்றும் புவியியல் சூழல்களில் அமைந்துள்ள சாலைகளில் சென்றுவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுமூகமான, வசதியான அமைப்பின் தேவையை அறிந்து சாலையோர வசதிகள் செய்யப்படுகின்றன.
  • எல்லைப்பகுதி சாலை அமைப்பின் விதிமுறைகள்படி, முகமைகள் அல்லது உரிமம் அடிப்படையில் வடிவமைத்தல், கட்டுமானம், இயக்குதல் என்பது அரசு மற்றும் பொதுத் துறை பங்கேற்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.  
  • சாலையோர வசதிகள் என்பது இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துதல், உணவு விடுதி, தங்கும் இடம், ஆடவர், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்தனியான கழிப்பறைகள், முதலுதவி போன்றவையாகும்.   

நிதி சிக்கலில் சிக்கிய மாநிலங்கள் - ரிசர்வ் வங்கி பட்டியல் வெளியீடு

  • இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை அடுத்து, இந்தியாவில் மாநிலங்களின் நிதி நிலைமைகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து ஆய்வு ஒன்றை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.
  • அதில் பீஹார், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்கள், கொரோனா தொற்று பரவலை அடுத்து, நிதி ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
  • ரொக்க மானியங்களை வழங்குதல், இலவச பயன்பாட்டு சேவைகளை வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை புதுப்பித்தல் மற்றும் மறைமுகமான மற்றும் வெளிப்படையான உத்தரவாதங்களை நீட்டித்தல் ஆகியவை, மாநிலங்களை மிகவும் சிக்கலில் ஆழ்த்துவதாக உள்ளன.
  • மேலும், மாநிலங்கள் தங்களுடைய கடன் நிலையை சரிசெய்வதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, மேற்குவங்கம், பீஹார், ஆந்திரா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்கள், நாட்டில் அதிக கடன் சுமையுடன் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • வரி வருவாயில் மந்தநிலை, செலவினங்கள் அதிகரிப்பு, உயரும் மானியச் சுமை ஆகியவை, மாநில அரசுகளின் நிதி சுமை அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பாக்.,கிற்கு நிறுத்தப்பட்ட நிதிசர்வதேச நிதியம் தர ஒப்புதல்

  • பாக்.கில் ஏற்பட்டுள்ள அன்னியச் செலாவணி பற்றாக்குறை பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சமாளிக்க பல்வேறு வரிகளை சர்வதேச நிதியம் பரிந்துரைத்திருந்தது. 
  • அவற்றை பாக். அமல்படுத்தாததால் எஞ்சிய தொகையை சர்வதேச நிதியம் வழங்காமல் நிறுத்தி வைத்தது. சர்வதேச நிதியத்தின் உயரதிகாரிகள் சில நிபந்தனைகளின் பேரில் பாக்.கிற்கு மீண்டும் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
  • இதன்படி நெருக்கடியை சமாளிக்க உடனடியாக 7 500 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த நிதியுதவிக்காக பெட்ரோலியப் பொருட்களுக்கு மாதம் 5 ரூபாய் வீதம் அதிகப்பட்சம் 50 ரூபாய் வரை வரி விதிக்கும்படி சர்வதேச நிதியம் பாக்.கிடம் தெரிவித்துள்ளது.
  • அத்துடன் ஆண்டுக்கு 15 - 30 கோடி ரூபாய் வரை ஈட்டும் நிறுவனங்களுக்கு 2 - 4 சதவீதம் வறுமை ஒழிப்பு வரி விதிக்கவும் பாக். ஒப்புக் கொண்டுள்ளது. 
  • மேலும் வரி வசூலை தீவிரப் படுத்தி கூடுதலாக 42 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கவும் பாக். சம்மதித்துள்ளது.

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு நினைவு மணிமண்டபம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் தனது பதவிக் காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப் பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். 
  • அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னரின் உருவச் சிலையினை 14.3.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலைஞர் திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார். 
  • மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்நன்னாளில், மன்னரின் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் புதுக்கோட்டை நகரில் மன்னர் ராஜகோபால தொண்டைமான் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் 

7.5 சதவீத பொருளாதார வளர்ச்சி - பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு

  • 'பிரிக்ஸ்' அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் 14வது மாநாடு, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் தலைமையில் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடக்கிறது. 
  • இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு, சீன அதிபர்ஜிங்பிங் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக பிரிவு மாநாடு, வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடந்தது. 
  • இதில் பிரதமர் மோடி பேசியதாவது வேகமான பொருளாதார வளர்ச்சியுள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
  • கொரோனாவால் பல நாடுகளும் பொருளாதார சரிவை சந்தித்தன. இந்தியாவில் இதை சமாளிக்க, சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என மூன்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நாட்டின் அனைத்துதுறைகளும் மாற்றங்களை சந்தித்து வருகின்றன. புதிய இந்தியா உருவாகி வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel