Type Here to Get Search Results !

TNPSC 18th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பருவநிலை மற்றும் எரிசக்தி குறித்த பெரிய பொருளாதார நாடுகளின் அமைப்பு கூட்டம்

  • அமெரிக்க அதிபர் திரு ஜோசப் பைடன் தலைமையில் நடைபெற்ற எரிசக்தி மற்றும் பருவநிலைக்கான முக்கிய பொருளாதார அமைப்பின் மெய்நிகர் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார்.  
  • இந்தக் கூட்டம் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், பருவநிலை நெருக்கடியை சமாளிக்கவும், அதன் மூலம் சிஓபி 27-க்கான உத்வேகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. 
  • இந்தக் கூட்டத்தில் உலகெங்கிலும் உள்ள இருபத்தி மூன்று முக்கிய பொருளாதார நாடுகளின் பிரதிநிதிகள்  மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கலந்து கொண்டனர்.
  • கூட்டத்தில் பங்கேற்ற  தலைவர்கள் அந்தந்த பருவநிலை மாற்ற உறுதிமொழிகளை செயல்படுத்த தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
  • பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய கூட்டு நடவடிக்கைக்கு பங்களிப்பதில் இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு பற்றி திரு பூபேந்தர் யாதவ் விளக்கினார். 
  • இந்தியாவின் முன்முயற்சிகள் சர்வதேச சூரியசக்தி  கூட்டணி மற்றும் பேரிடர் தடுப்பு  உள்கட்டமைப்புக்கான கூட்டணி உட்பட அதன் வரம்புக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளை  அவர் எடுத்துரைத்தார்.
  • இந்தியா ஏற்கனவே 159 ஜிகாவாட் புதைபடிமம் இல்லாத  எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தி திறனை நிறுவியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஏழரை  ஆண்டுகளில், இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய ஆற்றல் திறன் 18 மடங்கு அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் வருடாந்திர தனிநபர் உமிழ்வுகள் உலக சராசரியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே என்றும் அதன் ஒட்டுமொத்த உமிழ்வுகள் 4 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும் திரு யாதவ் குறிப்பிட்டார். 
  • ஆனால் இந்தியாவின் பருவநிலை இலக்குகள் லட்சியமானது, உலகளாவிய நன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டி தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

  • பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
  • ஒலிம்பிக் போட்டி முடிந்து 10 மாதத்துக்குப் பின் மீண்டும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த வாரம் பின்லாந்தில் நடந்த 'பாவோ நுார்மி கேம்ஸ்' போட்டியில் 89.30 மீ., துாரம் எறிந்து, வெள்ளி வென்றார்.
  • பின்லாந்தில் நடந்த மற்றொரு போட்டியில் களமிறங்கினார் நீரஜ் சோப்ரா. மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்தது. முதல் வாய்ப்பில் 86.69 மீ., துாரம் எறிந்தார். அடுத்த வாய்ப்பில் 'பவுல்' செய்தார். 
  • மூன்றாவது வாய்ப்பில் தடுமாறி விழுந்த இவர், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். கடைசி 3 வாய்ப்புகளில் ஈட்டி எறியவில்லை.
  • இருப்பினும் முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 2012 ஒலிம்பிக் சாம்பியன், டிரினிடாட்டின் கெஸ்ஹார்ன் (86.64 மீ.,) வெள்ளி வென்றார். உலக சாம்பியன், கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்சிற்கு (84.75 மீ.,) வெண்கலம் கிடைத்தது.

துணை ராணுவம், மத்திய பாதுகாப்பு படைகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு

  • அக்னி பாதை திட்டத்தில் முப்படைகளில் 4 ஆண்டுகள் பணியாற்றிய வீரர்களுக்கு மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎப்), அசாம் ரைபிள்ஸ் படைகளில் சேர 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
  • மேலும், இந்த படைகளில் சேருவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பில், அக்னி பாதை வீரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும். அக்னி பாதை திட்டத்தின் முதல் அணியினருக்கு மட்டும் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்
  • அக்னி பாதை திட்டத்தில் கடற்படையில் பணியாற்றும் வீரர்களுக்கு கப்பல் துறை சார்பில் 6 பிரிவுகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும். இதன்மூலம் உலகம் முழுவதும் கப்பல் துறையின் பல்வேறு பணிகளில் அக்னி பாதை திட்ட வீரர்கள் சேர முடியும்

குஜராத்தில் ரூ.21,000 கோடி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

  • வடோதராவில் நடைபெற்ற குஜராத் கவுரவ திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.21,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • வடோதராவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குந்தேலா கிராமத்தில் குஜராத் மத்திய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 
  • கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேண ரூ.800 கோடி மதிப்பில் "முதல்வரின் தாய்மை" திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். 
  • இந்த திட்டத்தின்படி அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் 2 கிலோ கொண்டை கடலை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
  • மேலும் ரூ.16,000 கோடி மதிப்பில் பல்வேறு ரயில்வே திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார், புதிய ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

அக்னி வீரர்களுக்கு 16 பொதுத் துறை நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு

  • அக்னி வீரர்களுக்கான இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு, இந்தியக் கடலோர காவல்படை, பாதுகாப்புத் துறையில் உள்ள சிவிலியன் பதவிகள் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த 16 பொதுத் துறை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (HAL), பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (BEL), பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் (BEML), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL), கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இஞ்சினியர்ஸ் (GRSE), கோவா ஷிப்யார்டு நிறுவனம் (GSL), ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம் (HSL), மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் (MDL), மிஸ்ரா தாது நிகாம் (மிதானி), ஆர்மர்டு வெஹிக்கில்ஸ் நிகாம் (AVNL), அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் & எக்யுப்மெண்ட் இந்தியா நிறுவனம் (AW&EIL), முனிஸன்ஸ் இந்தியா நிறுவனம் (MIL ), யந்த்ரா இந்தியா நிறுவனம் (YIL), கிளைடர்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியா ஆப்டெல் நிறுவனம் மற்றும் ட்ரூப் கம்ஃபர்ட்ஸ் நிறுவனம் (TCL) ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த இடஒதுக்கீடு, ஏற்கனவே உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக வழங்கப்படும்.
  • இந்த நடைமுறைகளை செயல்படுத்த ஏதுவாக, சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும். 
  • பாதுகாப்புத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களும், இதேபோன்ற திருத்தங்களை, தங்களது நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு விதிமுறைகளில் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 
  • மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு, அக்னிவீரர்களை தேர்வு செய்ய ஏதுவாக, தேவையான வயது தளர்வுகளும் வழங்கப்படும்

ஆசிய ஜிம்னாஸ்டிக்சில் வெண்கலம் வென்றார் பிரனதி

  • கத்தாரில் 9வது ஆசிய ஆர்ட்டிஸ்ட் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் கோல்கட்டாவை சேர்ந்த பிரனதி நாயக் 27, யோகேஷ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றார். இதன் பைனலுக்கு தகுதி பெற்ற இவர், வால்ட் பிரிவு முதல் வாய்ப்பில் 13.767 புள்ளி பெற்றார். 
  • தொடர்ந்து இரண்டாவது வாய்ப்பில் 12.967 புள்ளி பெற்றார். ஒட்டுமொத்தமாக 13.367 புள்ளி பெற்ற பிரனதி, மூன்றாவது இடத்தை உறுதி செய்து வெண்கலப் பதக்கம் வென்றார். 
  • தவிர ஆர்டிஸ்ட் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றார். ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பிரனதி வென்ற இரண்டாவது வெண்கலம் இது. இதற்கு முன் 2019ல் வெண்கலம் வென்றிருந்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel