தலைமைச் செயலாளர்களின் மாநாடு 2022
- மத்திய அரசின் நிதி ஆயோக் சார்பில் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் அமைந்துள்ள பிசிஏ மைதானத்தில் தலைமைச் செயலாளர்களின் 3 நாள் மாநாடு தொடங்கியது.
- வரும் 2047-ம் ஆண்டில் நாட்டின்100-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான தொலைநோக்கு திட்டங்கள் மாநாட்டில் வரையறுக்கப்பட உள்ளன.
- மேலும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, நகர்ப்புற நிர்வாகம், பயிர், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவது ஆகியவை குறித்தும் மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.
- தொழில் தொடங்க ஏதுவான சூழல், அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வது, பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் மூலம் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றுவது, மத்திய - மாநில அரசுகளுக்கான உறவை வலுப்படுத்துவது குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
- மாநாட்டின் 2-ம் நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். இன்றும் அவர் மாநாட்டுக்கு தலைமை வகிக்கிறார். பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்து மாநாட்டில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
அக்னிபத் திட்டத்தில் வீரர்களுக்கான வயது உச்சவரம்பு 23 ஆக அதிகரிப்பு
- நம் ராணுவத்தில், 'அக்னி வீரர்'கள் என்ற புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிபத் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .
- இதையடுத்து, 'இத்திட்டத்தால் முப்படைகளில் உள்ள படைப்பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.நான்கு ஆண்டுகளுக்குப் பின், இவர்களில் 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில் அக்னிபத் திட்டத்தில் வீரர்களுக்கான வயது உச்ச வரம்பு 21ல் இருந்து 23 ஆக அதிகரிகப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- நான்கு ஆண்டுகளுக்குப் பின், அக்னி வீரர்களில் திறன் மிக்கோருக்கு மட்டுமே, முப்படைகளில் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். இந்த திட்டம், பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு
- ஆசியான் எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு, புதுடில்லியில் நேற்று துவங்கி இரண்டு நாட்களுக்கு நடக்கிறது.
- இதில் இந்தோனேஷியா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ், புரூனே, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கம்போடியா, மலேஷியா, மியான்மர் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- இதற்கிடையே, ஆசியான் கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்தியாவில் தொற்று ஆய்வுக்குஅமெரிக்கா ரூ.915 கோடி உதவி
- அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உலக நாடுகளில் தொற்று நோய் தடுப்பு கட்டுப்பாடு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு நிதியுதவி செய்கிறது.
- இந்த மையம், இந்தியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு, தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, 915 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
- இதன்படி, டில்லியில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் புனேவின் தேசிய வைரஸ் ஆய்வு மையம் சென்னையில் உள்ள தேசிய தொற்று நோயியல் மையம் ஆகிய முன்றும், அமெரிக்க நிதியுதவியை பெற உள்ளன.
- கொரோனா வைரஸ் பல்வேறு வகையில் உருமாறி, அதிக வீரியமுள்ள வைரசாக மாறி பரவி வருகிறது. இத்தகைய வைரஸ்களை எதிர்கொள்ள, தடுக்க தேவைப்படும் ஆய்வுகளுக்கு, இந்த நிதி பயன்படுத்தப்படும்.
- 2021-22-ம் ஆண்டில், வறட்சியால் பாதிக்கப்பட்ட இரண்டு மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக நிதியுதவி அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இரண்டு மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ரூ.1,043.32 கோடி, ராஜஸ்தான் - ரூ.1,003.95 கோடி, நாகலாந்து - ரூ.39.28 கோடி
- இந்த கூடுதல் நிதியுதவியானது, ஏற்கனவே மாநில அரசுகளிடம் உள்ள மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாக உள்ளது.
- 2021-22-ம் நிதியாண்டில், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 28 மாநிலங்களுக்கு ரூ.17,747.20 கோடியும், 11 மாநிலங்களுக்கு ரூ.7,342.30 கோடியும் வழங்கியுள்ளது.