Type Here to Get Search Results !

ஐந்தாம் தேசிய குடும்பநல கணக்கெடுப்பின் முடிவு / Fifth National Family Survey

 

TAMIL

  • மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய குடும்பநல கணக்கெடுப்பை நடத்துகிறது. 2019 - 2021-ம் ஆண்டுக்கான ஐந்தாம் தேசிய குடும்பநல கணக்கெடுப்பின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
  • அதன்படி, தமிழ்நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் 44.9% சிசேரியன் முறையில் நடைபெறுகிறது. தேசிய அளவில் தெலங்கானா (60.7%) மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுகின்றன.
  • கடந்த 2015 - 2016 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நான்காவது குடும்பநல கணக்கெடுப்பில் இது 34.1% ஆக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சிசேரியன் முறை பிரசவங்கள் 10.8% அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் 47.5 சதவிகிதமும் கிராமப்புறங்களில் 42.9 சதவிகிதமும் பிரசவங்கள் சிசேரியன் முறையில் நடைபெறுகின்றன.
  • அதே சமயம் சிசேரியன் முறையில் நடைபெறும் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளை காட்டிலும் தனியார் மருத்துவமனைகளில்தான் அதிகம் நடைபெறுகின்றன. 
  • நகர்ப்புறங்களில் 61.5%, கிராமப்புறங்களில் 65.7% பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளில் நகர்ப்புறங்களில் 37.5%, கிராமப்புறங்களில் 35.1% பிரசவங்கள் நடைபெறுகின்றன.
ENGLISH
  • The Ministry of Health and Family Welfare of the Union Government conducts the National Family Survey every five years. The results of the Fifth National Family Survey for the year 2019 - 2021 were recently released.
  • Accordingly, 44.9% of births in Tamil Nadu are by caesarean section. Tamil Nadu has the second highest number of caesarean births nationally after Telangana (60.7%).
  • It was 34.1% in the fourth family survey conducted in the last 2015 - 2016 years. The number of caesarean births has increased by 10.8% in the last five years alone. About 47.5 percent of births in urban areas and 42.9 percent in rural areas are by caesarean section.
  • At the same time, caesarean deliveries are more common in private hospitals than in government hospitals.
  • 61.5% of births in urban areas and 65.7% in rural areas take place in private hospitals. Government hospitals account for 37.5% of births in urban areas and 35.1% in rural areas.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel