Type Here to Get Search Results !

2021ம் ஆண்டின் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது / Sahitya Akademi Award for Best Tamil Translation Book of 2021

 

TAMIL
  • இந்தியாவில் பல்வேறு மொழிகள், ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. 
  • பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் படைப்புகளுக்கு சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
  • அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகள் விவரம் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. 
  • பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியான மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ் மொழிக்கான விருதுக்கு மூத்த எழுத்தாளர் மாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • பார்சி சமூகத்தில் பிணம் தூக்கும் பணிகளை செய்யும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி பேசும் 'Chronicle of a Corpse Bearer' என்ற ஆங்கில நாவலை, பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி எழுதியுள்ளார். 
  • பல விருதுகளைப் பெற்றுள்ள இந்தநாவல், 2015-ம் ஆண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய நூலுக்கான சாகித்ய அகாடமி பிரதான விருதையும் பெற்றுள்ளது.
  • இந்த நாவலை தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் மாலன், 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாடமி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த படைப்பு தற்போது, 2021-ம் ஆண்டின் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ் மொழியில் விருதுக்குரிய நூலை மூத்த எழுத்தாளர்கள் பொன்னீலன், பாவைச்சந்திரன், சிவசங்கரி ஆகியோரைக் கொண்டகுழு தேர்வு செய்தது. 
  • விருதாளர்கள் பட்டியலுக்கு, சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர் காம்பர் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அகாடமியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது. விருதாளர்களுக்கு ரூ.50 ஆயிரம், சால்வை, செப்பு பாராட்டு பட்டயம் வழங்கப்படும். 
ENGLISH
  • The Sahitya Akademi annually presents awards for outstanding literary works in various languages ​​and English in India. Awards are also given for the best translated texts for works translated and published from other languages.
  • The details of the awards for the best translated books for the year 2021 in that category were announced in Delhi yesterday.
  • Awards have been received for translated texts published in 22 languages, including various Indian languages ​​and English. Senior writer Malan has been nominated for the Tamil Language Award.
  • Famous Indian playwright Cyrus Mistry has written an English novel, 'Chronicle of a Corpse Bearer', which talks about the lives of marginalized people in Parsi society.
  • The award-winning novel also won the Sahitya Akademi Prize for Best English Literature in 2015.
  • The novel has been translated into Tamil by Malan, a senior writer in Tamil Nadu, entitled 'Historical Notes of a Dead Man'. Published by Sahitya Akademi Publishing, the book is currently nominated for the Sahitya Akademi Award for Best Tamil Translation Book of 2021.
  • The award-winning book in Tamil was selected by a panel of senior writers Ponnilan, Pavaichandran and Sivashankari.
  • The list of awardees was approved by the Academy's Executive Committee in Delhi, chaired by Sahitya Akademi President Chandrasekhar Kamber. The awardees will be given Rs 50,000, a shawl and a copper medal.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel