TAMIL
- கொரோனாவிற்கு பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்து இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் நிறுவனம் (CMIE) தரவுகளை வெளியிட்டுள்ளது.
- Monitoring Indian Economy (CMIE) நிறுவனம் வெளியிட்டு தரவுகள் விவரம்: இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது மார்ச் மாதத்தில் 7.60% ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 7.83% ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே ஹரியானாவில்தான் வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ளது.
- நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மையானது மார்ச் மாதத்தில் 8.28% ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 9.22% ஆக அதிகரித்திருக்கிறது. ஆனால் ஊரகப் பகுதிகளில் மார்ச் மாதம் 7.29% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை ஏப்ரலில் 7.19% ஆக குறைந்துள்ளது.
- வேலையின்மை விகிதம் நாட்டிலேயே அதிகபட்சமாக ஹரியானாவில் 34.5 சதவிகிதமாக உள்ளது. அதேபோலவே, ராஜஸ்தானில் 28.8, பீகாரில் 21.1, ஜம்மு காஷ்மீரில் 15.6 சதவிகிதமாக வேலைவாய்ப்பின்மை உள்ளது.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மார்ச் மாதம் 4.1 சதவிகிதமாக ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 3.2 சதவிகிதமாக குறைந்துள்ளது.
- அதே சமயம் ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது எனவும், இது நல்ல முன்னேற்றம் எனவும் என சிஎம்ஐஇ நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.
- ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 36.46 சதவீதத்தில் இருந்து 37.05 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 15.6% என உள்ளது.. அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை குறைவு.
- மத்திய அரசு கடந்த மாதம் 28-ந் தேதி முக்கிய துறைகளின் வேலைவாய்ப்பு தொடர்பான காலாண்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை உற்பத்தி, வர்த்தகம் உள்ளிட்ட 9 துறைகளில் மொத்தம் 4,00,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம்/பிபிஓ மற்றும் நிதி சேவைகள் ஆகிய ஒன்பது முக்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
- 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் பிரிவில் இந்த ஒன்பது துறைகள் மொத்த வேலைவாய்ப்பில் 85 சதவீதத்திற்கு பொறுப்பாகும்.
- அதேபோல் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வேலைவாய்ப்புகளில் உற்பத்தி துறை 39% உடன் முதல் இடத்திலும், கல்வி துறை 22% உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
- ஏறக்குறைய அனைத்து (99.4%) நிறுவனங்களும் வெவ்வேறு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 23.55% நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வேலையில் பயிற்சி அளித்தன என்றும் மத்திய அரசின் காலாண்டு ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
- Unemployment rate in India is on the rise after Corona. The Indian Economic Monitor (CMIE) has released data on the unemployment rate for April.
- Data released by Monitoring Indian Economy (CMIE): The unemployment rate in India was 7.60% in March. It rose to 7.83% in April. Haryana has the highest unemployment rate in the country.
- Unemployment in urban areas was 8.28% in March. This is up from 9.22% in April. But unemployment in rural areas fell to 7.19% in April from 7.29% in March.
- Haryana has the highest unemployment rate in the country at 34.5 percent. Similarly, Rajasthan has a unemployment rate of 28.8 per cent, Bihar 21.1 per cent and Jammu and Kashmir 15.6 per cent.
- For Tamil Nadu, the unemployment rate fell to 3.2 percent in April from 4.1 percent in March.
- At the same time, CMIE Managing Director Mahesh Vyas said that the labor force participation and employment rate had increased in April, which was a good improvement.
- The employment rate rose to 37.05 per cent in April from 36.46 per cent in the previous month. The unemployment rate in Jammu and Kashmir is 15.6%. The lowest unemployment rate is in Assam, Madhya Pradesh, Meghalaya and Odisha.
- The federal government released a quarterly study on employment in key sectors on the 28th of last month. It said a total of 4,00,000 jobs were created in nine sectors, including manufacturing and trade, from October to December 2021.
- Jobs also rose in nine key sectors: manufacturing, construction, trade, transportation, education, healthcare, hospitality, information technology / BPO and financial services.
- These nine sectors account for 85 percent of total employment in the company segment with 10 or more employees.
- The report also points to an increase in employment in companies that employ 10 or more workers. The manufacturing sector ranks first with 39% of employment and the education sector ranks second with 22%.
- Almost all (99.4%) companies are registered under different laws. About 23.55% of companies have trained their workers on the job, according to the federal government's quarterly survey.