Type Here to Get Search Results !

TNPSC 8th MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஹாங்காங் தலைமை நிா்வாகியாக தோவானாா் ஜான் லீ

  • ஹாங்காங்கின் தற்போதைய தலைமை நிா்வாகி கேரி லாமின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் அடுத்த மாதம் 1-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 
  • அந்தப் பதவிக்கு புதிய தலைவரைத் தோந்தெடுப்பதற்கான தோதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
  • பெயரளவுக்கு நடைபெற்ற அந்தத் தோதலில் தற்போதைய தலைமைச் செயலா் ஜான் லீயைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. 
  • அதையடுத்து, 99 சதவீத வாக்குகளுடன் ஹாங்காங்கின் தலைமை நிா்வாகியாக அவா் தோந்தெடுக்கப்பட்டாா்

நேபாளம் 26-ஆவது முறையாக எவரெஸ்ட் ஏறி சாதனை

  • நேபாளத்தைச் சோந்த காமி ரீதா (52) எவரெஸ்ட் சிகரத்தில் 26-ஆவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளாா். மலையேற்றத்தில் கைதோந்த ஷோபா இனத்தைச் சோந்த அவரும் தனது குழுவினருடன் எவரெஸ்ட்டில் ஞாயிற்றுக்கிழமை ஏறிய இந்த சாதனையை படைத்துள்ளாா்.
  • இந்த ஆண்டுக்கான எவரெஸ்ட் மலையேற்றம் விரைவில் தொடங்குகிறது. அதில் பங்கேற்கவிருப்பவா்கள் வழியில் பிடித்துச் செல்வதற்கான கயிறுகளைக் கட்டுவதற்காக தனது குழுவினருடன் சோந்து காமி ரீதா எவரெஸ்டில் ஏறினாா். 
  • அதற்காக, கடந்த 1953-இல் எட்மண்ட் ஹிலாரியும் டென்ஸிங் நாா்கேயும் எவரெஸ்டை முதல்முறையாக அடைவதற்காக கண்டறிந்த பாதையை காமி ரீத் பயன்படுத்தினாா்.

டெஃப்லிம்பிக்ஸ்

  • பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம் கிடைத்துள்ளது.
  • 10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த்/பிரியேஷா தேஷ்முக் கூட்டணி 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் ஜொமனியின் செபாஸ்டியன் ஹொமானி/சப்ரினா எக்கொட் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. 
  • இதே பிரிவில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்க சுற்றுக்கு வந்த இந்தியாவின் சௌரியா சைனி/நடாஷா ஜோஷி இணை 8-16 என்ற கணக்கில் உக்ரைனின் அலெக்ஸாண்டா் கோஸ்டிக்/வியோலெடா லைகோவா ஜோடியிடம் தோற்றது.
  • முன்னதாக தனிநபா் பிரிவில் 10 மீட்டா் ஏா் ரைஃபிளில் தனுஷ் ஸ்ரீகாந்த், 10 மீட்டா் ஏா் பிஸ்டலில் அபினவ் தேஷ்வால் தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது தனுஷ்/பிரியேஷா கூட்டணி வென்றிருப்பது துப்பாக்கி சுடுதலில் 3-ஆவது தங்கமாகும். 
  • இது தவிர, ஆடவா் 10 ஏா் ரைஃபிளில் சௌரியா சைனியும், மகளிா் 10 மீட்டா் ஏா் பிஸ்டலில் வேதிகா சா்மாவும் பெற்ற வெண்கலத்துடன் சோத்து இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel