Type Here to Get Search Results !

TNPSC 7th MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

அதிவேக ஆர்ஆர்டிஎஸ் ரயில் பெட்டிகள் அறிமுகம்

 • ரயில்வேயை அதிநவீனமாக்கும் முயற்சிகளில் ஒன்றாக, அதிவேக ஆர்ஆர்டிஎஸ் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில் டெல்லியில் இருந்து உபியின் மீரட் வரை முதற்கட்டமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 • இது அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. சராசரியாக 100 கிமீ வேகத்தில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இந்த ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது மெட்ரோ ரயிலை விட 3 மடங்கு வேகத்தில் செல்லும்.
 • இந்த ரயில் பெட்டிகளில் வைபை வசதி, விசாலமான நிற்கும் இடம், குஷன் இருக்கைகள், சிசிடிவி கேமரா, லேப்டாப், மொபைல் சார்ஜிங் வசதி, வழித்தட மேப்கள் என பன்முக அம்சங்கள் இடம் பெறுகின்றன. 
 • இந்த ரயில்பெட்டிகள் குஜராத்தின் சவ்லி பகுதியில் உள்ள அல்ஸ்டோம் ஆலையில் தயாரிக்கப்படுகிறது. தற்போது இதன் முதல் பெட்டி தயாரிக்கப்பட்டு, தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகத்திடம் வழங்கப்பட்டது. 
 • இந்த ரயில் பெட்டிகள் கன்டெய்னர்கள் வழியாக காஜியாபாத் ரயில்வே டெப்போவிற்கு கொண்டு வரப்படும். இந்த ரயில் பெட்டிகள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் நியமனம் 
 • உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இதில் 2 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருந்தது. 
 • இந்நிலையில் அசாமின் கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷூ துலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பர்திவாலா ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமயிலான கொலிஜியம் இரண்டு நாட்களுக்கு முன் பரிந்துரை செய்திருந்தது. 
 • கொலிஜியம் பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக சுதன்ஷூ துலியா மற்றும் பர்திவாலா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இது தொடர்பாக அறிக்கையை ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 
 • இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 34 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் அடுத்த வாரம் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
5 ஆயிரம் மீட்டர் பிரிவில் இந்திய தடகள வீரர் புதிய சாதனை 
 • டோக்கியோ ஒலிம்பிக்கில் 1500மீ தங்கம் வென்ற நார்வே தடகள வீரர் ஜாகோப் இங்க்ப்ரிக்ட்சன் 13:02.03 வினாடிகளில் இலக்கை எட்டி இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றார்.
 • அமெரிக்காவின் சான் ஜுவான் கேபிஸ்டிரேனோ நகரில் நடந்த தடகள போட்டியில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சேபிள் கலந்து கொண்டார். அவர் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் 13:25.65 நிமிடங்களில் பந்தய தொலைவை கடந்து புதிய சாதனை படைத்து உள்ளார்.
 • கடந்த 1992ம் ஆண்டில் பகதூர் பிரசாத் என்ற இந்தியர் 13:29.70 நிமிடங்களில் இலக்கை அடைந்து இருந்ததே சாதனையாக இருந்தது. அதற்கு பின்னர் இந்தியர் யாரும் இதனை முறியடிக்கவில்லை. 
 • இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு சேபிள் இந்த சாதனையை முறியடித்து வரலாறு படைத்து இருக்கிறார்.
இந்தியாவின் பசுமை எரிசக்தி முயற்சிகளை நனவாக்க, மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய சூரியசக்தி மின்சார உற்பத்திக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
 • மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை ஊக்குவிப்பதன் வாயிலாக,  கார்பன் சமநிலை பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா-வின் வழிகாட்டுதலின்பேரில், மத்திய ரிசர்வ் காவல் படை(CAPFs)  மற்றும் தேசிய பாதுகாப்புப் படை (NSG) வளாகங்களில், சூரியசக்தி மின்சார உற்பத்தி சாதனங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.  
 • இதன்படி, புதுதில்லியில், மத்திய உள்துறை மற்றும் புதிய மற்றும்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை செயலாளர்கள் முன்னிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய சூரியசக்தி மின்சார உற்பத்திக் கழகம்(SECI) இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.  
 • இந்த ஒப்பந்தம், மேற்கூரை சூரியசக்தி மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணியை,இருதரப்பும் கூட்டாக மேற்கொள்ள வகை செய்கிறது.  
 • தற்போதைய தரவுகளின்படி,  மத்திய ரிசர்வ் காவல்படை & தேசிய பாதுகாப்புப் படை வளாகங்களில், மொத்தம் 71.68மெகாவாட் அளவிற்கு சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, இந்திய சூரியசக்தி மின்சார உற்பத்திக் கழகம் மதிப்பீடு செய்துள்ளது.  
 • சூரியசக்தி மின்உற்பத்தித் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள இந்திய சூரியசக்தி மின்சார உற்பத்திக் கழகம், நேரடியாகவோ அல்லது முகமைகள் மூலமாகவோ அல்லது ஏலப்போட்டி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமைகள் வாயிலாகவோ, மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதில் உள்துறை அமைச்சகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel