Type Here to Get Search Results !

TNPSC 3rd MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய பாரா டேபிள் டென்னிஸ் போட்டி

  • மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய பாரா டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. அதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 
  • தமிழ்நாடு பாரா டேபிள் டென்னிஸ் மேம்பாட்டு சங்கம் சார்பில் 13 பேர் கலந்து கொண்டனர். 
  • அதில் தமிழக வீராங்கனை பேபி சஹானா 'கிளாஸ்-9' பிரிவிலும், தமிழக வீரர் ராஜ் அரவிந்தன் 'கிளாஸ் 5' பிரிவிலும் தங்கம் வென்றனர். 'கிளாஸ் 1' பிரிவில் ஜே.டி.மதன் வெள்ளியும், 'கிளாஸ் 3' பிரிவில் டாக்டர் பாரதி வெண்கலமும் வென்றுள்ளனர்.

உலகிலேயே அதிக பயணியர் டில்லி விமான நிலையம் சாதனை

  • உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான பயணியர் சேவை குறித்து, ஏர்லைன் நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 
  • அதில், கடந்த மார்ச்சில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான பயணியரை கையாண்டதில், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கடந்த ஆண்டு இவ்விமான நிலையம் மூன்றாவது இடத்தில் இருந்தது. மார்ச்சில் டில்லி விமான நிலையத்தில், 36 லட்சம் பயணியர் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ளனர். 
  • இதே மாதத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம், 44 லட்சம் விமான பயண டிக்கெட்டுகளை விற்பனை செய்து, முதலிடத்தை பிடித்துள்ளது. 
  • கடந்த ஆண்டு இதே மாதத்தில் விமான பயணியரை கையாண்டதில் இரண்டாவது இடத்தில் இருந்த துபாய், இந்தாண்டு மார்ச்சில், 35 லட்சம் விமான பயணியருடன், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 
  • கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், கடந்த மார்ச்சில் முழுதுமாக தளர்த்தப்பட்டதால், இந்திய விமான பயணியர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

பொக்ரானில் பீரங்கி பரிசோதனை

  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரானில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஏடிஏஜிஎஸ் எனப்படும் நவீன ஹோவிட்சர் ரக பீரங்கி பரிசோதனை ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 2ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்டு அதில் வெற்றியும் கிடைத்துள்ளது.
  • இந்திய ராணுவத்தின் பீரங்கிகளை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டிஆர்டிஓ) இதனை உறுதிப்படுத்தி உள்ளது.
  • இந்த ஹோவிட்சர் ரக பீரங்கியை டிஆர்டிஓ மேம்படுத்தி உள்ள நிலையில், பாரத் போர்ஜ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இவற்றை ராணுவ உபயோகத்திற்காக வருங்காலங்களில் உற்பத்தி செய்ய உள்ளன. 
உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி
  • உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் ஹர்ஷதா சரத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் 45 கிலோ எடைப்பிரிவில் 150 கிலோ எடையைத் தூக்கி 16வயது ஹர்ஷதா சரத் சாதனை படைத்துள்ளார். மேலும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
  • கிரீஸில் நடைபெற்று வரும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை, மகளிருக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ், வி.ரிதிகா ஆகியோா் களம் கண்டனா். 
  • இதில் ஞானேஸ்வரி ஸ்னாட்ச் பிரிவில் 73 கிலோ, கிளீன் & ஜொக் பிரிவில் 83 கிலோ என மொத்தமாக 156 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா். ரிதிகா தனது முயற்சியில் ஸ்னாட்ச் பிரிவில் 69 கிலோ, கிளீன் & ஜொக் பிரிவில் 81 கிலோ என 150 கிலோ எடையுடன் 3-ஆம் இடம் பிடித்தாா்.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும், இந்தோனேசியாவைச் சோந்தவருமான விண்டி கன்டிகா அய்சா மொத்தமாக 183 கிலோ (83+102) எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா். 
  • வழக்கமாக இந்தப் பிரிவில் சவால் அளிக்கும் சீனா, வடகொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சோந்த போட்டியாளா்கள் இம்முறை பங்கேற்கவில்லை.
  • முன்னதாக, இப்போட்டியின் முதல் நாளான திங்கள்கிழமை மகளிருக்கான 45 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹா்ஷதா சரத் தங்கம் வென்று சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel