கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் வெனிசெலியா-சானியா 2022 தடகள போட்டி தங்கம் வென்றார் முரளி ஸ்ரீசங்கர்
- கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் வெனிசெலியா-சானியா 2022 தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 7.95 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.
- பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூல்ஸ் பொம்மெரி (7.73மீட்டர்) வெள்ளிப் பதக்கமும், அதே நாட்டைச் சேர்ந்த எர்வான்கோனேட் (7.71 மீட்டர்) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
- கிரீஸ் நாட்டில் நடைபெற்று வரும் போட்டிகளில் முரளி ஸ்ரீசங்கர் தொடர்ச்சியாக 2-வது தங்கம் கைப்பற்றியுள்ளார். கடந்த வாரம் கலிதியா நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்றிருந்தார்.
பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், 'பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்' என்ற திட்டத்தை கடந்த ஆண்டு மே 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- கரோனாவால் பெற்றோர், தத்து எடுத்த பெற்றோர் அல்லது சட்ட ரீதியிலான பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அளிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் 23 வயதை எட்டும்வரை அவர்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம், தங்க இடம், உணவு வழங்கப்படும்.
- கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிக் கல்வி பயில்வதற்கான உதவித் தொகை பிஎம் கேர்ஸ் திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. பிஎம் கேர்ஸ் பாஸ்புக் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் சுகாதார காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டது.
- தொழில்முறை படிப்பு அல்லது உயர் கல்வி பயில விரும்பும் பிள்ளைகளுக்கு இந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படும். மேலும் உயர்படிப்பு படிக்கும் காலத்தில் (18 முதல் 23 வயது வரை) இதர திட்டங்கள் மூலம் அன்றாட தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 23 வயது நிறைவடைந்தவுடன் ரூ.10 லட்சம் ரொக்கம் வழங்கப்படும்.
உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய இலங்கைக்கு உலக வங்கி 5,426 கோடி கடனுதவி
- இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் தவறான ஆட்சி நிர்வாகத்தால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளிடம் வாங்கிய கடனுக்கு தவணை கட்ட முடியாமல் திவால் நிலைக்கு சென்றுள்ளது.
- அதே சமயம் நிலைமையை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் மேலும் கடன் கோரி பேச்சுவார்த்தை நடத்தியது.
- இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜிஎல். பீரிஸ் கடந்த வாரம் இலங்கைக்கான உலக வங்கியின் மேலாளர் சீயோ காண்டாவை சந்தித்தார்.
- அப்போது ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, ஐநா உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உதவுவதாக காண்டா உறுதி அளித்திருந்தார்.
- இந்நிலையில், இலங்கை அதன் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட ₹5,426 கோடி கடன் உதவி வழங்க இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
492 அடி உயரத்தில் தொங்கும் பிரம்மாண்ட கண்ணாடி பாலத்திற்கு கின்னஸ் அங்கீகாரம்
- தரையில் இருந்து 492 அடியில் தொங்கும் இந்த பாலத்தின் நீளமானது 2,073 அடியாகும். வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோய்க்கு வடமேற்கு பகுதியில் உள்ள சோன் லா பிராந்தியத்தில் இந்த தொங்கும் பாலம் அமைந்துள்ளது.
- வியட்நாம் அரசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து இந்த பிரம்மாண்ட கண்ணாடி பாலத்தை கட்டியுள்ளது.
- அண்மையில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த பாலமானது சில வாரங்களுக்கு முன்னர் தான் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 450 பேரை சுமக்கும் திறன் கொண்ட இந்த பாலத்தின் மீது SUV வாகனம் ஓட்டி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
- இந்த பாலம் 40 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட கண்ணாடிகளால் கட்டப்பட்டுள்ளது. இந்த பாக் லாங் பாலத்தின் கட்டுமானம் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் பாலத்தின் முழு கட்டுமானம் முடிக்கப்பட்டு கடந்த மாதம் பார்வையாளர்கள் அனுமதிக்கு விடப்பட்டது. இந்த பாலத்தில் பயணம் செய்ய ஒரு நபருக்கான கட்டணம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,850 ஆகும்.
- இதற்கு முன் சீனாவைச் சேர்ந்த குவாங்டாங் பகுதியில் உள்ள 526 மீட்டர் கண்ணாடி பாலம் தான் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற பெருமையை கொண்டிருந்தது. இந்த புதிய பாலம் தற்போது சீனா பாலத்தின் சாதனையை முறியடித்துள்ளது.