Type Here to Get Search Results !

TNPSC 30th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கரோனா பொருளாதாரம் பாதிப்பு இந்தியா மீள்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் - இந்திய ரிசர்வ் வங்கி குழு அறிக்கை

  • கரோனா ஊரடங்கு நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கை குறித்து பெருந்தொற்று ஏற்படுத்திய வடுக்கள் மற்றும் பணம் மற்றும் நிதி நிலை குறித்த அறிக்கையை (2021-22) ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 
  • 2020-21 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார மீட்சி ஏற்பட்டது. ஆனால் 2021-22 நிதிஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் 2-வது அலையால்பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளானது. அதேபோல 3-வது அலை ஜன.2022-ல் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியது.
  • இப்போது ரஷ்யா - உக்ரைன்போர் காரணமாக சர்வதேச அளவிலான வளர்ச்சி பாதிக்கப்பட்டதோடு உள்நாட்டு வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளானது. 
  • 2012-13-ம் நிதி ஆண்டு முதல் 2019-20-ம் நிதி ஆண்டில் தேக்க நிலை ஆண்டைத் தவிர இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக இருந்தது. இதில் 2012-13 முதல் 2016-17-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது.
  • 2020-21-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் மைனஸ் 6.6 சதவீதமாக இருந்தது. 2021-22-ம் நிதிஆண்டில் வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாகவும், 2022-23-ம் நிதி ஆண்டில் 7.5 சதவீதமாக இருந்தது. 2034-35-ம் நிதி ஆண்டில்தான் இந்தியா பழைய வளர்ச்சியை எட்டும்.
  • 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ. 19.1 லட்சம் கோடியும், 2021-22-ம்நிதி ஆண்டில் ரூ. 17.1 லட்சம் கோடியும், 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ. 16.4லட்சம் கோடியும் என ரூ.52 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கை மற்றும் கருத்துகள் அனைத்துமே ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வு (டிஇபிஆர்) பிரிவு தயாரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் கருத்துகள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.
  • கரோனாவிலிருந்து பொருளாதாரத்தை மீட்க எடுக்கப்பட்ட கூடுதல் நடவடிக்கைகள் ஸ்திரமான வளர்ச்சியை எட்டுவதற்கு வழிவகை செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாடு 2022
  • ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாடு டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் யோகி ஆதித்யநாத் (உபி), மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா) உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். 
  • தமிழகத்தின் சார்பாக மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியும் கலந்து கொண்டனர். 
  • மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது, நமது நாட்டில், அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக நீதித்துறை பங்காற்றி வரும் நிலையில், சட்டமன்றங்கள் மக்களின் விருப்பங்களை பிரதிபலித்து வருகின்றன. 
  • நீதி வழங்குதலில் மக்களின் உரிமை இதன் மூலம் வலுப்படும். உள்ளூர் மொழிகள் தொழில்நுட்பக் கல்வியிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். 

இந்தியாவில் வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என்ன? - உலக வானிலை ஆய்வு அமைப்பு விளக்கம்

  • இந்தியா மற்றும் நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கோடை வெயிலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில், 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் பதிவாகி வருகின்றது. 
  • இதுபோன்றே பாகிஸ்தானிலும் பெரும்பாலான மாகாணங்களில் வெயில் கடுமையாக உள்ளது.
  • இந்தியாவில் மிகவும் வெப்பமான மார்ச் மாதம் என்ற சாதனை இந்தாண்டு படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 43 - 46 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பல மாநிலங்களில் பதிவாகியுள்ளது.
  • இது அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பாகிஸ்தானில் இயல்பைவிட 5 - 8 டிகிரி செல்ஷியஸ் அதிகம் வெப்பநிலை நிலவுவதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
  • இவற்றை வைத்து பார்க்கும்போது, பருவநிலை மாறுபாடு பிரச்னை காரணமாகவே, இந்த நாடுகளில் வெப்பநிலை அதிகமாக இருப்பதாக கூற முடியாது.
  • அதே நேரத்தில், இந்த நாடுகளின் பருவநிலை காலங்களில் புதிய மாற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. அதாவது வழக்கத்தைவிட முன்பாகவே கோடை வெயில் இங்கு துவங்கிஉள்ளது. 
  • வழக்கமாக ஜூன் மாதத்தில் பருவ மழை காலம் துவங்குவதற்கு முன்பாக, வெயிலின் தாக்கம், மே மாதத்தில் அதிகமாக இருக்கும். தற்போது மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கையின்படி, கடந்த 70 ஆண்டுகளில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவது தெரிகிறது. 
  • கடந்த சில ஆண்டு பதிவுகளை பார்க்கும்போது, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும், கோடை வெயிலின் காலம் நீண்டுள்ளதாக தெரிகிறது.
  • இது மனிதர்களுக்கும், விலங்குகள், பயிரிடும் முறை போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பல்வேறு தொழில்களிலும், நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

1,000 இந்திய வீரர்களுக்கு ஐ.நா., விருது

  • தெற்கு சூடானுக்கான ஐ.நா., இயக்கத்தில், அமைதி பணியாளர்கள் பொது மக்களின் உயிரை மட்டும் காக்கவில்லை. 1,160 இந்திய வீரர்கள், தெற்கு சூடானில் சாலைகளை கட்டமைத்ததுடன், உள்ளூர் சமுதாய மக்கள் இடையே பிணைப்பை ஏற்படுத்தினர். 
  • மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதற்காக அவர்கள் ஐ.நா., விருது பெற தகுதி பெற்றவர்கள்.
  • விருது பெற்ற வீரர்கள் அனைவரும் அப்பர் நைல் ஸ்டேட்டில் பணிபுரிந்து வருகின்றனர். அந்நாட்டில், மலகல் முதல் அப்வங் வரையிலும் மற்றும் பல வழிகளில் இந்திய பொறியாளர் பிரிவினர் சாலை அமைத்து தந்துள்ளனர். 
  • விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க மொபைல் கிளினிக்குகளை அமைத்து, பசு, ஆடு, கழுதை உள்ளிட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த தகவல், ஐ.நா.,வின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel