Type Here to Get Search Results !

TNPSC 2nd MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 • பக்கவிளைவுநோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினரான, டாக்டர் ஜேக்ப் புலியெல், தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பான தகவல்களை வெளியிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 • இந்த வழக்கு, விளம்பரத்துக்காகவும், மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்திலும் தொடரப்பட்டுள்ளதாக, தடுப்பூசியை தயாரிக்கும் 'பாரத் பயோடெக், சீரம் இந்தியா' நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது.
 • இதை விசாரித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது தனிநபர்கள், தங்கள் உடல் தொடர்பான முடிவுகள் எடுக்கும் உரிமையை, அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. 
 • அதனால், தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. தொற்று பாதிப்பு குறைவாக இருக்கும் வரையில், தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. 
 • ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும்.தடுப்பூசியை போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த தகவல்களை மக்கள் அறியும் வகையில் பொது தளத்தில் வெளியிட வேண்டும்.

காணொலி மூலம் கனடாவில் படேல் சிலையை திறந்து வைத்தார்

 • நடப்பு 2022-ம் ஆண்டில் பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இதற்காக ஞாயிற்றுக்கிழமை அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
 • ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க், பிரான்ஸ்நாடுகளுக்கும் அவர் செல்கிறார்.3 நாடுகளுக்குச் செல்லும் பிரதமர்மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல் என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். 
 • மேலும் சர்வதேச தொழில்துறை தலைவர்கள் 50 பேருடன் அவர் கலந்துரையாட உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.
 • கனடா நாட்டின் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற சர்தார் வல்லபபாய் படேல் சிலை திறப்பு விழாவில் ஜெர்மனியில் இருந்தபடி காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். 

கீழடியில் சுடுமண் பொம்மை கண்டெடுப்பு

 • அகழாய்வில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு பணி நடக்கிறது. இதுவரை நீள்வடிவ தாயகட்டை, பாசி மணிகள், சுடுமண் காதணிகள், நெசவு தக்கழிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. 
 • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடக்கும் 8 வது கட்ட அகழாய்வில் அழகிய தலையலங்காரத்துடன் கூடிய சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது.

வேளாண் சூழலியல், இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மை இந்தியா - ஜெர்மனி இடையே கூட்டு பிரகடனம்

 • வேளாண் சூழலியல் மற்றும் இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மையில் இந்தியா- ஜெர்மனி இடையே பல்வேறு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 • அந்தவகையில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்வெஞ்சா சுல்சேவும், காணொலி வாயிலாக பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
 • இந்த கூட்டு ஆராய்ச்சி, இரு நாடுகளையும் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், விவசாயிகளிடையே, அறிவாற்றலை பகிர்ந்து கொள்ளுதல், புதுமை முயற்சிகள் ஊக்குவிக்கப்படும். தொழில்நுட்ப மாற்றம், அறிவியல் ஆற்றல் ஆகியவை, பரிமாற்றங்கள், ஒத்துழைப்புகள் மற்றும் தனியார் துறை உடனான கூட்டு ஆராய்ச்சி போன்றவை ஊக்குவிக்கப்படும்.
 • இந்தத் திட்டத்தின் கீழ் 2025-க்குள் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பாக, ஜெர்மன் அரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் 300 மில்லியன் யூரோக்களை வழங்கும். 

பசுமை, நிலைத்தன்மை வளர்ச்சியில் ஒப்பந்தம் - இந்தியா, ஜெர்மனி பிரதமர்கள் கையெழுத்து

 • பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 3 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக இன்று (திங்கள்கிழமை) ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார் பிரதமர் மோடி. 
 • பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் சோல்ஸ் வரவேற்றார். இதன்பிறகு, இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 • பேச்சுவார்த்தையின்போது, இந்தியா, ஜெர்மனி இடையிலான ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறித்து உரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 • பேச்சுவார்த்தையின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் சோல்ஸ் ஆகியோர் பசுமை மற்றும் நிலைத்தன்மை ஆற்றல் கூட்டமைப்பில் கையெழுத்திட்டனர்.

பிரதமர் ஆலோசகராக மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி தருண் கபூர் நியமனம்

 • நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் அலுவலக ஆலோசகராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தருண் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • 1987 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., கேடரான இவர் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் செயலராகவும், இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel